November 04, 2019

முஸ்லிம்களுக்கு நல்ல பாதையை காட்டுவதே எனது நோக்கமாகும் - ஹிஸ்புல்லா

முஸ்லிம்களுக்கு நல்ல பாதையை காட்டுவதே தான் தேர்தலில் போட்டியிடுவதாக ஜனாதிபதி வேட்பாளர் எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லா தெரிவித்துள்ளார். 

அனுராதபுரத்தில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். 

அங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர், முஸ்லிம்களுக்கு நல்ல பாதையை காட்டுவதே எனது நோக்கமாகும். கடந்த 10 வருடங்களாக முஸ்லிம்கள் எடுத்த முடிவுகள் காரணமாக சிங்களவர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையே முறுகல் நிலை ஒன்று ஏற்பட்டுள்ளது. 

இந்த நிலை தொடர்ந்து நீடித்தால் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்க நேரிடும். இதனால் எனது நோக்கம் பெரும்பான்மையினருடனான ஒற்றுமையாக வாழக்கூடிய ஒரு சூழ்நிலையை உருவாக்குவதே. 

எனவே, நாட்டை பாதுகாக்த்து, தீவிரவாதம், இனவாதிகள், மதவாதிகள் அற்ற நாட்டில் பொருளாதாரத்தை கட்டி எழுப்பக்கூடிய ஒரு பலம் மிக்க தலைவரை உருவாக்குவதே எனது நோக்கம் எனவும் எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லா தெரிவித்துள்ளார். 

5 கருத்துரைகள்:

Wel said.allah knows every.one.s heart.allah already decided 2020 srilanka president.not to worry.
We are not for dunya
We are for aahira

வேண்டாம். எமக்கு தெரியும் எது நல்ல பாதை என்று. சமூகத்தை கூட்டி காட்டி கொடுக்காதீர் உமது சுயநலத்திற்காக.

அந்த தலைவர் யார் என அறிவிக்க முடியாமல் ஏன் காலத்தை வீனட்க்கிரீர்கல்.முதலில் வெளிப்படையாக கூறுங்கள் நீங்கள் ஆதரவு அளிக்கப் போகும் அந்த தலைவர் யார்?

கிழக்கு மாகாண கவர்னர் என்ற அரச பதவியைப் பயன்படுத்தி, சவூதி அரேபியாவில் சேகரிக்கப்பட்ட ஸகாத், ஸதகா நன்கொடைகளை தனது சொந்த நலனுக்காகப் பயன்படுத்தும்நோக்குடன் கிழக்கில் பாரிய பல்கலைக்கழகத்தைக் கட்டி யெழுப்பி, தனது குடும்பத்தின் உறுப்பினர்களின் பெயரில் எழுதிக்கொண்டு இந்த நாட்டில் ஏழைகளுக்காகச் சேகரித்த பணத்தை தனது குடும்பச் சொத்தாகப் பாவிக்க எத்தனித்து, இந்த நாட்டில் உள்ள அரசாங்கத்தையும் நாட்டு மக்களையும் பச்ச மடையர் கூட்டம் எனக் காட்ட முயலும் நீர் தானா இந்த நாட்டு முஸ்லிம்களுக்கு நல்ல வழியைக் காட்ட வருவது, உமது கையில் இருக்கும் அந்த கலாநிதி சான்றிதழ் எத்தனை ரூபாகொடுத்து வாங்கியது என்பதையும் இந்த நாட்டு மக்கள் உண்மையை அறிய ஆவலாக இருக்கின்றனர்.

சிதறி கெடக்கும் சிறுபான்மையினர் நாம் ,எனவே முஸ்லீம்கள் ஒரு மார்க்கத்தில் இருக்கலாம் . அரசியல் மதமல்ல , சமூக நன்மை கருதி ,பல அணிகளில் இருப்பது தவறல்ல , வாக்குரிமை அவரவர் விருப்பம் . ஹிஸ்புல்லாவை எதிர்த்து நின்ற , இனவாதிகள் , எங்கே , ??? எல்லாம் தற் போது ஓரணியில் இது தான் அரசியல் ,
நான் ஹிஸ்புல்லா பக்கம் இல்லை எனது வாக்கு வேறு அணிக்கு , ஆனால் அவரின் நிலைப்பாடு சரியானது . ஹிஸ்புல்லாவுக்கு நெருங்கிய நண்பர் மைத்ரீ ,காலத்தில் தான் அவருக்கு கடுமையான சோதனைகளை சமூகம் பார்த்தது ,, அவரின் நண்பரால் கூட தடுக்க முடியவில்லை . ,, எல்லா ஜனாதிபதி காலத்திலும் முஸ்லீம் கள் அடிபட்டிருக்கிறோம் . சாட்சி காரன் பக்கமிருப்பதை விட சண்டைக்காரன் பக்கமிருந்தால் பாதுகாப்பு என்று நினைத்தாரோ அவருக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய பகைவர்களை , மவுனமாக்கியது , அவரது ராஜதந்திரம் .

Post a comment