Header Ads



சிறந்த தலைவரைக் கேட்டு பிரார்த்தித்த முஸ்லிம்களுக்கு, தற்போது ஜனாதிபதியாக கோத்தாபய கிடைத்துள்ளார் - அலி சப்ரி

- Anzir -

ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட்ட கோத்தபயா ராஜபக்சவை, பிசாசாக சித்திகரித்து பிரச்சாரங்கள் செய்யப்பட்டன. எனினும் அவர் பெரும்பான்மை வாக்குகளுடன் வெற்றியீட்டி உள்ளதாக ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி தெரிவித்தார்.

அவர் இதுகுறித்து Jaffna Muslim இணையத்திற்கு மேலும் கூறியதாவது,

முஸ்லிம்களில் ஒரு தரப்பினர், தமக்கு சிறந்த தலைவர் வேண்டுமென நோன்பு நோற்று, பிரார்த்தனையிலும் ஈடுபட்டனர். அவர்களுக்கு சிறந்த தலைவர் கிடைத்துள்ளார்.

எனவே, இனியாவது நமது நாட்டு முஸ்லிம்கள், திறந்த மனதுடன் கோத்தபயாவை ஆதரிக்கவும், அவரது வெற்றிக் பயணத்தில் பங்காளராகவும் இருக்க முன்வர வேண்டும். 

மேலும் இத்தேர்தல் முடிவுகளை அடுத்தாவது, சிறுபான்மை முஸ்லிம் கட்சிகளை மாத்திரம் நம்பி செயற்படும் நிலையிலிருந்து, தேசிய அரசியல் கட்சிகளை ஆதரிக்கும் நிலைமைக்கு முஸ்லிம் சமூகம் தம்மை ஆயத்தப்படுத்த வேண்டும்.

நாளை திங்கட்கிழமை, ஜனாதிபதியாக பதவியேற்று ஆற்றவுள்ள தனது உரையின், கோத்தாபய சமூக சமூகங்களையும் அரவணைத்துச் செல்லும் தமது விருப்பத்தை வெளிப்படுத்துவார். 

முஸ்லிம்கள் கோத்தபய பற்றிய சகல சந்தேகங்களையும் விட்டுவிட்டு முஸ்லிம் கட்சிகளின் இனவாத பிரச்சாரங்களை இன்றோடு நிராகரித்துவிட்டு, நாட்டு நலனுக்காக செயற்பட அணிதிரள வேண்டுமெனவும் அலி சப்ரி மேலும் தெரிவித்தார்.

8 comments:

  1. நீங்கள் சொல்வது நடந்தால் அனைத்து மக்களுக்கும் மகிழ்ச்சிதான்.ஆனால் திரு.கோத்தாபாய அவர்கள் வெற்றி பெற்ர செய்தி கிடைத்ததும் இரண்டு முஸ்லிம் கடைகள் எரிக்கப்பட்டுல்லன.இதுதான் முஸ்லிம்களுக்கு இருக்கும் மிகப் பெரும் பிரச்சினை.எனவே நீங்கள் அந்தபக்கம் இருக்கிறீர்கள்.எனவே இவ்வாறான சம்பவங்களை தடுப்பதற்கு முயற்ச்சி எடுங்கள்.

    ReplyDelete
  2. லூது...கடைய எரிச்சது முஸ்லிமேதான்
    எங்கர பாமரகூட்டம் இருக்கும்வரைக்கும்...எல்லம் மந்தகதிதான்.

    ReplyDelete
  3. சட்டத்தரணி அவர்களே நல்ல உபதேசம். சிறுபான்மை மீது பாதகம் ஏற்படாத வண்ணம் வெற்றிக் களிப்பை பார்த்துக்கொள்ளுங்கள். சிறுபான்மையின் பயம் தெளிந்து நீங்கள் நினைப்பது நிறைவேறும். கட்சி வழிகாட்டியது என்பது இரண்டாவது விடயம் முதலாவது சிறுபான்மையினர் அவர்களின் பேச்சின் மீது பயங்கொண்டுள்ளனர். அவை தேர்தல் மேடைகளுக்காகப் பேசப்பட்டவையாக இருந்து விடட்டும் என ஆசைப்டுகிறேன். இருப்பினும் தேர்தலில் சிங்கள,தமிழ்,முஸ்லிம் இனவாதப்பேச்சுக்கள் வெற்றி பெற்றிருக்கின்றன. நாடு தோற்றுப்போய் இருக்கிறது. உங்களுக்கு கண்ணயராது எங்களைக் கவனிக்க வேண்டிய பொறுப்பு வந்து சேர்ந்துள்ளது என்பதனை தாழ்மையுடன் எத்திவைக்க விரும்புகிறேன். தீர்க்கதரிசனத்துடன் இக்கோரிக்கையை நிறைவேற்றுவீர்கள் என எதிர்பார்க்கின்றேன்.எமக்கு நீங்கள் காட்டும் வழிகாட்டுதலுக்கு மிக்க நன்றி.

    ReplyDelete
  4. தற்போது கிடைத்த செய்தி,காலி,சோலை எனும் இடத்தில் உள்ள பள்ளிவாசலுக்கும் கல்லால் வீசி அதன் கதவு,ஜன்னல் கண்ணாடிகள் உடைக்கப்பட்டுல்லன.இவைகள் தொடராமல் தயவு செய்து தடுக்கப் பாருங்கள்.

    ReplyDelete
  5. இந்த நாட்டு மக்களுக்கும், நாட்டுக்கும் முஸ்லிம்களுக்கும் ஒரு நல்ல அரசாங்கமாக கோத்தபாயவின் அரசு அமையவேண்டுமென அல்லாஹ்வைப் பிரார்த்திப்போம். திறந்த மனதுடன் முஸ்லிம்களை ஒன்றிணையுமாறு சட்டத்தரணி அலிசப்ரி அவர்கள் அழைத்தபோது அதனை இந்த நாட்டு முஸ்லிம்கள் ச ரியாகப் புரிந்துகொள்ளவில்லை. இனியாவது கல்வி கற்ற அறிஞர்களின் கருத்துக்களை மதித்து நடக்கும் பணிவையும் ஞானத்தையும் இந்த சமுகத்துக்கு வழங்குமாறு அல்லாஹ்வைப் பிரார்த்திக்கின்றோம்.

    ReplyDelete
  6. We Hope for Good as you state. Whoever become President, We expect him to serve all the citizen's life needs....

    As Allah says in Quran, We may dislike something, but there will be good in it. Similarly the opposite too.

    So Let us Wait and See the future. The knowledge of Future is not with any one of us But with Allah Alone.


    BUT WE KEEP TRUST IN ONE TRUE GOD WHO HAS CONTROLL OVER All Affairs.

    ReplyDelete
  7. We Hope for Good as you state... BUT WE KEEP TRUST IN ONE TRUE GOD WHO HAS CONTROLL OVER All Affairs.

    ReplyDelete
  8. Rizard அதை கதைத்தால் தேசிய பட்டியல் இல்லாமல் போயிடுமே.

    ReplyDelete

Powered by Blogger.