Header Ads



தமிழகத் தலைவர்கள் முதலைக் கண்ணீர் வடிக்கிறார்கள் - நாமல் சாடல்

தமிழகத்தின் சில தமிழ் அரசியல் தலைவர்கள் இலங்கைத் தமிழ் மக்களை பற்றி ஒருபோதும் ஆழமாக சிந்தித்தது இல்லை என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச குற்றம் சுமத்தியுள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச வெளியிட்டுள்ள விசேட அறிக்கையிலேயே குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், அவர்களின் அடிப்படைத் தேவைகள் பூர்த்தி செய்யும் வகையில் எந்த ஒரு ஆக்கபூர்வமான செயற்பாடுகளை செய்ததுமில்லை. மாறாக தங்களுடைய சுயநல மற்றும் சந்தர்ப்பவாத அரசியல் தேவைகளிற்காக எமது நாட்டு மக்களை பகடைக்காய்களாக பயன்படுத்துவது தான் மிகுந்த வேதனை தரும் உண்மை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எமது கட்சியின் சார்பில் போட்டியிட்ட திரு.கோத்தபாய ராஜபக்ச அவர்கள் இலங்கையின் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட போது பல நாடுகளின் தலைவர்கள், குறிப்பாக பாரதப் பிரதமர் உள்ளிட்ட பாரதத்தின் பல அரசியல் தலைவர்களும் தமது வாழ்த்துக்களை வழங்கியிருந்தனர்.

தமிழகத்தில் தமது சுயநல சந்தர்ப்பவாத அரசியலை தக்க வைப்பதற்காக எமது நாட்டில் தமிழ் மக்களைப்பற்றி அக்கறையுள்ளவர்களாகக் காட்டி முதலைக் கண்ணீர் வடிக்கும் மதிமுகவின் பொதுச் சயெலாளர் வைகோ, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன், பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் ராமதாஸ், தமிழர் தேசிய முன்னணி தலைவர் பழ.நெடுமாறன் ஆகியோரின் அறிக்கைகளை கண்ணுற்றேன்.

அப்பட்டமான சந்தர்ப்பவாத அரசியலைத் தவிர அவற்றில் வேறேதும் இல்லை.

எமது மக்களை பகடைக்காய்களாக்கம் எம்மக்களிடையே பகையையும் துவேசத்தையும் தூண்டிவிடும் மூன்றாந்தர அரசியலைத் தவிர வேறு என்ன ஆக்கபூர்வமான விடயத்தை செய்திருக்கின்றீர்கள் என்ற கேள்வி என்னுள் எழுவதை என்னால் தடுக்க முடியவில்லை என குறிப்பிட்டுள்ளார்.

1 comment:

Powered by Blogger.