November 13, 2019

வாக்காளர்களுக்கு ஜம்இய்யத்துல், உலமாவின் முக்கிய அறிவுறுத்தல்

ஜனாதிபதி தேர்தல் எதிர்வரும் நவம்பர் 16ஆம் திகதி நடைபெறவுள்ளது என்பதை நாம் அறிவோம். இலங்கைப் பிரஜைகள் என்ற வகையில் தான் விரும்புகின்ற வேட்பாளருக்கு வாக்களிப்பது ஒவ்வொருவரதும் உரிமையாகும். எனவே இவ்வுரிமையை வீணடிக்காமல் பயன்படுத்திக் கொள்ளுமாறு வேண்டிக் கொள்கின்றோம்.

தேர்தல் தினத்தன்று வாக்குரிமை பெற்ற அனைவரும் மாலை வரை தாமதிக்காமல் காலையில் நேர காலத்துடன் வாக்குச் சாவடிக்களுக்குச் சென்று தாம் விரும்புகின்ற வேட்பாளருக்கு வாக்களிப்பதில் கவனமெடுக்குமாறும் வாக்குச் சாவடியில் கடமையில் ஈடுபட்டிருக்கும் உத்தியோகத்தர்கள் தமது கடமைகளை சிறப்பாகச் செய்வதற்கு ஒத்தாசையாக இருக்குமாறும் வாக்களிக்கும்போது தமது ஆளடையாளத்தை உறுதிப்படுத்துவதற்கான தேசிய அடையாள அட்டை போன்ற அனுமதிக்கப்பட்ட ஆவணங்களை தம்முடன் வைத்துக் கொள்ளுமாறும் வேண்டிக் கொள்கின்றோம்.

வாக்வாக்குச் சாவடிக்குள் நுழையும் போதே ஆளடையாளத்தை உறுதிப்படுத்தும் அவசியம் இருப்பதால், குறிப்பாக முகத்திரை அணியும் பெண்கள் வாக்குச் சாவடிக்குள் நுழையும்போது அவர்களது முகங்களை திறந்து, ஆளடையாளத்தை உறுதிப்படுத்தி, தேர்தல் பணியில் ஈடுபடும் பணியாளர்களுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறும் வாக்குச் சாவடிக்குச் செல்லும்போது தனியாகச் செல்லாமல் மஹ்ரமான ஆணுடன் செல்லுமாறும் முடிந்த அளவு வாகனத்தில் செல்வதற்கு ஒழுங்கு செய்து கொள்ளுமாறும் வாக்களித்தவுடன் தாமதிக்காது தத்ததமது வீடுகளுக்கு திரும்புமாறும் வேண்டிக் கொள்கின்றோம். இவ்வாறு நடந்து கொள்வதன் மூலம் வீணான பிரச்சினைகள் உருவாகுவதைத் தடுக்க வழியாக அமையும் என்பதை ஆலோசனையாக முன்வைக்கின்றோம்.

அத்துடன் வாக்களித்த பின்னர் வீதிகளில் கூடி நின்று வீணாக நேரத்தைக் கழித்துக் கொண்டிருக்காமல் பயனுள்ள பணிகளில் ஈடுபடுமாறும் தேர்தலில் வெற்றி பெறுபவர் நாட்டை நேசிக்கின்ற, குடிமக்களின் நலனுக்காக உழைக்கின்ற, நாட்டைக் கட்டியெழுப்பும் உணர்வும் வல்லமையும் மிக்கவராக இருப்பதற்கு பிரார்த்தனையில் ஈடுபடுமாறும் உலமாக்கள், மஸ்ஜித் நிருவாகிகள், ஜம்இய்யாவின் பிரதேச கிளை உறுப்பினர்கள் இது தொடர்பாக மக்களுக்கு அறிவுறுத்தல்களை வழங்குமாறும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா வேண்டிக் கொள்கின்றது.

குறிப்பு: இவ்வறிவித்தலை ஜுமுஆவிற்குப் பின்னர் சகல பள்ளிவாசல்களிலும் மக்களுக்கு வாசித்துக் காட்டுமாறு நிர்வாக சபையினரிடம் வேண்டுகின்றோம்.

அஷ்-ஷைக் ஏ.ஸீ. அகார் முஹம்மத்
பிரதித் தலைவர்,
அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா

3 கருத்துரைகள்:

ACJU must take some actions at this time. It must advice Muslim community how to behave in this time. First of all, Jumamah prayer day, Muslim community must take some precaution. Juammah can be done two times in some mosques to avoid all crowds at one time and for the protection of all people who comes to mosques in cities. In Colombo, Kandy and some other places. This is not make people scared but take some precaution. Some rumours are spreading about possible attacks, or blasts, Given the past violence, it would be advisable to do two jummha. One groups pay at 1 pm and another group pray 2 Pm so that one group could give all protections. There is no harm in doing this. This may looks like a bida for some Salafi groups but this is a good way to protect Muslims at this time. Do not mourn after something took place but now plan for it. For Salafi groups this may look add, or this may look as playing with predestination. but Allah blessed us with intellect to think and plan. It is part of Allah's predestination to use our minds

Those who have read all the 1500 odd comments/rebuttals that "THE MUSLIM VOICE" has written since February 2015 till now in the www.jaffnamuslim.com, Ada Derana, Colombo Telegraph, Colombo Gazette, TKN, Veerakesari, Daily News, Lankaweb.com, Economy Next, Hiru News, Onlanka, Lanka Business online, Nation.lk, MadawalaNews - facebook and a few more publications, YOU WILL SEE THAT WHAT "THE MUSLIM VOICE" HAS WRITTEN IS TRUTH AND NOTHING BUT THE TRUTH, about our "deceptive Muslim politicians and leaders, Insha Allah. "THE MUSLIM VOICE" was slammed and attacked by these "DECEPTIVE/MUNAFIQUE" gangs throughout these 41/2 years. BUT TODAY - ALHAMDULILLAH, THE TREND HAS CHANGED AND THE UNDERSTANDING MUSLIM VOTE BANK HAS TURNED TO SUPPORT GOTABAYA RAJAPAKSA AT THE NOVEMBER 16th., PRESIDENTIAL ELECTIONS, THANKS TO MUSLIM LOYALISTS LIKE ALI SABRY, Insha Allah.
What "The Muslim Voice" has been doing - "May All praise be to God AllMighty Allah, Alhamdulillah" is to kindle the aspirations and inspirations of the humble Muslim Ummah/Jamaath in Sri Lanka to rethink politically and otherwise in order it will help our community regain our "DIGNITY", "HONOUR", "RESPECT", "RIGHTS" and the STATUS OF "HIERA-UMMATH". The writing and wide political knowledge of "The Muslim Voice" belongs to God AllMighty Allah. "The Muslim Voice" is on a CRUSADE to expose the fraudulent, hypocritical, unscrupulous and dishonest corrupt Muslim Politicians of whom "The Muslim Voice" has much knowledge, by the grace of God AllMighty Allah and "HAD" a duty to challenge them as a "democratic institution" in a "Democratic Society", Insha Allah.
The Convener of the Muslim Voice, "The Muslim Voice" had been blessed to mingle in the corridors of political power and witness the manner in which these fellows lead two lives, one in the mist of their creed and corrupt selfish and self centered political partners and the other how they show a different, God fearing, dedicated humanitarian character, behaving very religious and reminding "Insha Allah" or "Masaha Allah" at every turn they make to hoodwink the poor Muslim voters. The time has come that these tricksters have to be challenged and EXPOSED to Safe Guard the Rights and DIGNITY of the Sri Lanka Muslim UMMAH, Insha Allah. A new Muslim Political Culture that can create a New Political Force has to be born soon, Insha Allah, and that is the Political message that "The Muslim Voice" is trying to send out, Insha Allah. If this endeavour of "The Muslim Voice" is true, honest and sincere, then God AllMighty Allah will give success to this message to reach every nook and corner in Sri Lanka and abroad where Sri Lankan Muslims are living and to reach every Sri Lankan "Muslim Makkal", Insha Allah. Brother Ali Sabry and a few Mahinda/Gotabaya/Basil loyalist Muslims have called for this " MUSLIM POLITICAL CULTURE" Alhamdulillah. It had created a "TURNING POINT" in the Muslim community and vote bank. Majority of the Muslim vote bank will vote to make Gotabaya Rajapaksa the next President of Sri Lanka on November 16th., 2019, Insha Allah.
Noor Nizam. Peace and Political Activist, Political Communication Researcher, SLFP/SLPP Stalwart and Convener - "The Muslim Voice".

முஸ்லிகளின் எதிரியல்லாத ஒருவருக்கு வாக்களிக்குமாறு கூறியிருந்தால் நல்லது. யார் நல்லவர் என்று முஸ்லிம்கள் புரிந்துகொள்வர்.

Post a comment