Header Ads



ஷரிஆ பல்கலைக்கழகம் தற்போது, பௌத்த குருகுலமாக மாறி விட்டதா..?

ஷரியா பல்கலைக்கழகம் தற்போது பௌத்த குருகுலமாக மாறி விட்டதா என்ற கேள்வி நாட்டில் எழுந்துள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியின் பிரதான செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.

நாவலப்பிட்டி பேருந்து நிலையத்தில் நேற்று நடைபெற்ற தேசிய மக்கள் சக்தி கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திஸாநாயக்கவுக்கு ஆதரவான தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார். மேலும் அவர்,

கடந்த காலங்களில் மட்டக்களப்பில் முன்னாள் கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா நிர்மாணித்து வரும் ஷரியா பல்கலைக்கழகத்திற்கு எதிராக நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரதன தேரர் கடுமையான போராட்டங்களை நடத்தி, முஸ்லிம் எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்தார்.

எனினும், தற்போது அந்த போராட்டங்கள் நின்று போயுள்ளன. ஹிஸ்புல்லாவும், ரதன தேரரும், கோத்தபாய ராஜபக்சவின் ஒரே மேடையில் இருக்கின்றனர் என குறிப்பிட்டுள்ளார்.

3 comments:

  1. அதுதான் ரத்ன தேரோவின் உண்மை முகம் சிங்கள மக்களுக்கு விலங்கிவிட்டது.எல்லாமே நடிப்பு.ஆட்சியை பிடிக்கும் வெறி.

    ReplyDelete
  2. ஷரியா பல்கலைக்கழக பிரச்சினை நேரம் எங்கிருந்தீர்.

    ReplyDelete
  3. சரியா பல்கலைக்கழகம் என்று ஓன்று இல்லை நண்பா
    ஏதும் கூடுதலான விளக்கம் தேவைப்படின் - Mr ஹிஸ்புல்லாஹ் வை தொடர்பு கொள்ளவும் -மர்சூக் மன்சூர்- தோப்பூர்

    ReplyDelete

Powered by Blogger.