Header Ads



அவுஸ்திரேலியாவில் அதிக சம்பளம் பெறும், இலங்கை பெண்


அவுஸ்திரேலியாவில் அதிக சம்பளம் பெறும் தலைமை நிர்வாக அதிகாரிகள் குறித்த பட்டியல் வெளியாகியுள்ள நிலையில், இதில் இலங்கையை பூர்வீகமாக கொண்ட பெண் முதலிடம் பெற்றுள்ளார்.

அவுஸ்திரேலியாவில் வெளியாகும் Financial Review பத்திரிகை தனது பிரத்தியேக செய்திக்குறிப்பில் இதனை தெரிவித்துள்ளது.

Shemara Wikramanayake என்ற பெண்ணே குறித்த பட்டியலில் முதலிடம் பெற்றுள்ளார். அவர், Macquarie Group நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக செயற்பட்டு வருகின்றார்.

கடந்த ஆண்டு இந்த பதவிக்கு நியமிக்கப்பட்ட அவர், 18 மில்லியன் டொலர்களை சம்பளமாக பெறுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

அவுஸ்திரேலியா முழுவதுமுள்ள நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரிகளின் சம்பள தரவரிசைப்பட்டியலில் இவரே முதலிடத்தில் உள்ளார் என்றும் Financial Review தெரிவித்துள்ளது.

தலைமை நிர்வாக அதிகாரிகளின் சம்பள தரவரிசை பட்டியலில் ஒரு பெண் முதலிடத்தை பெற்றிருப்பது இதுவே முதல் தடவை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், முதல் ஐம்பது இடங்களிற்குள் நான்கு பெண்கள்தான் இடம்பிடித்திருக்கிறார்கள் என்றும் Financial Review மேலும் குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, Shemara Wikramanayake லண்டனிலிருந்து சிட்னிக்கு புலம்பெயர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.