Header Ads



சஜித்துடன் இணைந்து நாட்டை பாதுகாக்க, அநுரகுமார முன்வர வேண்டும் - ரஞ்ஜன்

ஊழல் அற்ற நாட்டை கட்டியெழுப்ப அனுரகுமார திஸாநாயக்க சஜித் பிரேமதாசவுடன் இணைந்து செயற்பட முன்வர வேண்டும் என இராஜாங்க அமைச்சர் ரஞ்ஜன் ராமநாயக்க அழைப்பு விடுத்தார்.

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் நாட்டின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் தேர்தலாகும். அதனால் இந்த தேர்தலில் போட்டியிருப்பது சஜித் பிரேமதாசவுக்கும் கோத்தாபய ராஜபக்ஷ்வுக்குமாகும். ஏனையவர்களுக்கு வழங்கப்படும் வாக்குகளால் பிரதான வேட்பாளர்களுக்கே பாதிப்பு ஏற்படுகின்றது.

குறிப்பாக அநுரகுமார திஸாநாயக்க, மஹேஷ் நேனாநாயக்க ஆகியோர் சஜித் பிரேமதாசவைப்போன்று இந்நாட்டை நேசிப்பவர்கள். நாட்டை ஊழல் மோசடிகளில் இருந்து பாதுகாத்து, எதிர்கால சந்ததியினருக்கு சுதந்திரமான, சிறந்ததொரு நாட்டை ஏற்படுத்தவேண்டும் என்ற நோக்கம் கொண்டவர்கள். ஆனால் எமது எதிர்தரப்பில் போட்டியிடும் கோத்தாபய ராஜபக்ஷ் இந்த விடயங்கள் அனைத்துக்கும் முரணானவர். பல குற்றச்சாட்டுக்களுக்கு ஆளானவர். இப்படிப்பட்டவரால் நாட்டை கொண்டுசெல்ல முடியாது.

நாட்டை குடும்ப ஆட்சியில் இருந்து பாதுகாக்கவும் மோசடிகளில் இருந்து பாதுகாக்கவும் சஜித் பிரேமதாச வெற்றிபெறவேண்டும். அதற்காக அநுரகுமார திஸாநாயக்க சஜித் பிரேமதாசவுடன் இணைந்து நாட்டை பாதுகாக்க முன்வரவேண்டும் எனத் தெரிவித்தார்.

மாத்தறையில் இன்று இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

3 comments:

  1. சிறந்த அழைப்பு...

    ReplyDelete
  2. ஏய் தம்பி ஏன் சஜித்துக்கு அனுரவுடன் கூட்டு(அனுராவை ஜனாதிபதியாக்கி) சேர முடியுமே

    ReplyDelete
  3. Can Hon sajith make written agreements with JVP and general Mahesh to arrest of culprits who have connections in corruption, extremists and other allegations like white van, identify the who created Zahran team and their missions. As well as abductions when on war Era.

    ReplyDelete

Powered by Blogger.