Header Ads



மதத்தையும் இனத்தையும் வைத்துசெய்த, பயங்கர விளையாட்டுக்களை முடிவுக்கு கொண்டுவரும் நேரம் வந்துவிட்டது - மகிந்த

தமது ஆட்சியின் கீழ் எவரும் அசௌகரியங்களுக்கு உள்ளாகாமல் பார்த்துக்கொள்வது தமது கடமை என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

கடந்த ஐந்து வருடத்தில் அரசாங்கத்தின் செயற்பாடுகளில் திருப்தியின்மை காரணமாகவே மக்கள் ஜனாதிபதி தேர்தலில் கோத்தபாய ராஜபக்சவுக்கு வாக்களித்தனர்.

இந்தநிலையில் இந்த அரசாங்கத்தின் கீழ் எவரும் தொந்தரவுக்கு உள்ளாகாமல் நீதியை உறுதிசெய்ய விசேட திட்டம் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக மஹிந்த ராஜபக்ச அறிக்கை ஒன்றின் மூலம் குறிப்பிட்டுள்ளார்.

அரசியல் நோக்கங்களுக்காக மதம் மற்றும் இனங்களை வைத்து மேற்கொள்ளப்பட்ட பயங்கர விளையாட்டுக்களை முடிவுக்கு கொண்டு வரவேண்டிய தருணம் வந்துவிட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை 19வது அரசியலமைப்பு திருத்தத்தை ஆராய்ந்து, உடனடியான நிகழ்ச்சி திட்டத்தை முன்னெடுக்கப்போவதாக அவர் தெரிவித்துள்ளார்.

கோத்தபாய நாளை பதவிப்பிரமாணம் செய்துக்கொண்டதன் பின்னர் இந்த திட்டத்தை முன்னெடுக்கப்போவதாக அவர் தெரிவித்துள்ளார்.

புதிய ஜனாதிபதி அரசியலமைப்பு திருத்தம் உட்பட்ட பொருளாதார திட்டங்களை முன்னெடுப்பார் என்றும் மஹிந்த ராஜபக்ச உறுதியளித்துள்ளார்.

1 comment:

  1. சிறுபான்மையினர் வாக்களிக்காமல் விடுவதற்கான காரணத்தை இவர் புரிந்து கொண்டதற்கான அறிகுறியாகத்தான் இக்கருத்து காணப்படுகிறது. எனவே சிறுபான்மையினர் அன்னத்துக்கு வாக்களித்ததன் மூலம் மொட்டின் மனதை மாற்றி வெற்றி பெற்றிருக்கின்றனர்.

    ReplyDelete

Powered by Blogger.