Header Ads



மரண தண்டனையை அமுல்படுத்துவதால், போதைபொருள் வியாபாரத்தை ஒழிக்க முடியாது - அநுரகுமார


போதைபொருள் வியாபாரத்தை ஒழிக்க வேண்டும் என்றால், தற்போது காணப்படும் சட்டங்கள் வலுப்படுத்தப்படவேண்டும் என, தேசிய மக்கள் முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் நாடாளுமன்ற உறுப்பினர் அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில், இன்று (04) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைக் கூறியுள்ளார்.

இதேவேளை, மரண தண்டனையை அமுல்படுத்துவதால் போதைபொருள் வியாபாரத்தை ஒழிக்க முடியாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

“இன்று, போதைபொருட்கள் கைப்பற்றப்படுகின்றன. ஆனால் அதனை நாட்டுக்கு கொண்டு வந்தவர்கள் சிக்குவதில்லை. கோடிக்கணக்கான ரூபாய் பெறுமதியுடைய போதைபொருட்கள் கடத்தல் வியாபாரத்தில் ஈடுபடுவர்கள் கிராமத்தில் உள்ள சாதாரண மக்களா? இல்லை, அதற்கான பணவசதி அவர்களிடம் கிடையாது. பணம் மற்றும் அரசியல் அதிகாரத்தில் உள்ளவர்களே இவ்வாறான கடத்தலில் ஈடுபடுகின்றனர். அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் வகையில் சட்டங்கள் வலுப்படுத்தப்படவேண்டும்” என்றார்.

No comments

Powered by Blogger.