Header Ads



33 வேட்பாளர்கள் செலுத்திய 2.5 மில்லியன் ரூபாய்களை, தனதாக்கிய தேர்தல்கள் ஆணைக்குழு

இம்முறை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட 35 வேட்பாளர்களின் பிரதான இருவர் தவிர்ந்து ஏனைய 33 வேட்பாளர்களிடம் இருந்து 2.5 மில்லியன் ரூபாய்களை தேர்தல்கள் ஆணைக்குழு பறிமுதல் செய்துள்ளது.

இம்முறை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் கட்சிகளின் வேட்பாளர் தலா 50 ஆயிரம் ரூபாயும், சுயேச்சை வேட்பாளர் தலா 75 ஆயிரம் ரூபாயும் கட்டுப்பணம் செலுத்த வேண்டும்  என தேர்தல்கள் ஆணைக்குழு குறிப்பிட்டது. 

அதேபோல் ஜனாதிபதி  வேட்பாளர்கள் தேர்தலில் 12.5 வீத வாக்குகளுக்கு மேல் பெற்றால் கட்டுப்பணம் மீளவும் உரிய நபர்களுக்கு செலுத்தப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள நிலையில், இம்முறை ஜனாதிபதி தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷ மற்றும் புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச ஆகிய இருவர் மட்டுமே 12.5 வீதத்தை தாண்டிய வாக்குகளை பெற்றுக்கொண்டனர். 

ஆகவே அவர்கள் இருவர் தவிர்ந்து ஏனைய 33 வேட்பாளர்களின் சார்பில் செலுத்தப்பட்ட 2.5 மில்லியன் ரூபாயும் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கே சொந்தமாகியுள்ளது. 

(ஆர்.யசி)

No comments

Powered by Blogger.