Header Ads



கல்முனை மேயரின் முன்மாதிரி - 24 மணி நேரமும் களத்தில், ஊழியர்கள் உஷார்


(எம்.என்.எம்.அப்ராஸ்)

தற்போது பெய்து வரும் பருவ மழையினால் தாழ் நில பகுதிகளின் வடிகான்கள் துப்புரவு ,பொதுமக்களின் வீடுகளில் தேங்கியுள்ள வெள்ள நீரை கட்டுப்படுத்தும் முகமாக கல்முனை மாநகர சபை முதல்வர் ஏ.எம்.ரக்கிப் அவர்களின் துரித செயற்பாட்டினால் கல்முனை பகுதியில் வெள்ளநீர் உடனடியாக அப்புறப்படுத்துப்பட்டது.

இவ் துரித நடவடிக்கையை மேற்கொண்டமைக்கு கல்முனை மாநகர சபைமுதல்வர் ,உறுப்பினர்கள் ,ஊழியர்களுக்கு பொது மக்கள் பாரட்டியுள்ளதுடன் தனது நன்றியினையும் தெரிவித்தனர்.

மேலும் கல்முனை மாநகர முதல்வரினால் அவசரகால நிலை பிரகடனம் செய்யப்பட்டு, கல்முனை மாநகர பிரதேசங்களில் இயற்கை அனர்த்த அபாய பாதுகாப்பு மற்றும் முகாமைத்துவ செயற்பாடுகள் 24 மணி நேரமும் இந்நடவடிக்கையை வெற்றிகரமாக முன்னெடுத்து வருவதுடன் கல்முனை மாநகர சபை ஊழியர்களின் விடுமுறைகள் யாவும் மறு அறிவித்தல் வரை இரத்து செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தற்போதைய காலநிலையை கருத்தில் கொண்டு கல்முனை மாநகர பிரதேசங்களில் அனர்த்த அபாய பாதுகாப்பு, முகாமைத்துவ செயற்பாடுகளை முன்னெடுப்பதற்காக மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் அவர்களினால் மாநகர சபையில் அவசரகால நிலை பிரகடனம் செய்யப்பட்டு, ஊழியர்கள் உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.

இதன் பிரகாரம் அனர்த்த அபாயம் மற்றும் பாதிப்புகள் ஏற்படுமாயின் பின்வரும் அவசர தொலைபேசி அழைப்பு இலக்கங்களுடன் தொடர்பு கொள்ளுமாறு பொது மக்கள் வேண்டப்படுகின்றனர்.

* தீயணைப்பு படைப்பிரிவு: 0672059999

* சாய்ந்தமருது: 0779203839, 0779680444

* கல்முனை : 0773483274

* மருதமுனை & பெரிய நீலாவணை: 0768087056

* பாண்டிருப்பு, நற்பிட்டிமுனை & சேனைக்குடியிருப்பு: 0754269465

2 comments:

  1. Congratulations & There were some places in Sainthamaruthu Mavady road still under water due to drainage block. Please consider that issue.

    ReplyDelete
  2. Congratulations & There were some places in Sainthamaruthu Mavady road still under water due to drainage block. Please consider that issue.

    ReplyDelete

Powered by Blogger.