Header Ads



சுதந்திர கட்சியை துண்டாக்கியது சந்திரிக்காவும், விஜேகுமாரதுங்கவுமே ஆகும் - மஹிந்த


ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை பிளவுபடுத்தி புதிய கட்சியை ஏற்படுத்தியது சந்திரிக்கா குமாரதுங்கவே ஆவார். நாங்கள் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை துண்டாக்கவில்லை. நாங்களும் அந்த கட்சியின் பங்காளியாவோம் என எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ் தெரிவித்தார்.

பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த அமரவீரவின் அகுனுகொலபெலஸ்ச இல்லத்தில் அமைக்கப்பட்டிருந்த தேர்தல் காரியாலயத்தை திறந்துவைத்து உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்,

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி எமது தாய் வீடு, பண்டார நாயக்கவும் டீ,ஏ, ராஜபக்ஷ்வும் இணைந்து ஐக்கிய தேசிய கட்சியில் இருந்து வெளியேறி இதனை நிர்மாணித்தனர். அதனால் நாங்கள் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் ஒரு பகுதியினர். எமக்குள் இருக்கும் வித்தியாசம், நாங்கள் ஐக்கிய தேசிய கட்சியுடன் இணையாததாகும். ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியும் பொதுஜன பெரமுனவும் இணைந்திருப்பதால் நாங்கள் சக்திமிக்க கட்சியாக மாறி இருக்கின்றோம்.

அத்துடன் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை ஆரம்பமாக துண்டாக்கி புதிய கட்சி ஒன்றை ஏற்படுத்தியது நாங்கள் அல்ல. சந்திரிக்காவும் விஜேகுமாரதுங்குவுமாகும்.ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை துண்டாக்கியே மஹஜன கட்சியை அமைத்தனர். ஆனால் நாங்கள் கட்சியை துண்டாக்கிக்கொண்டு செல்லவில்லை. 

அத்துடன் ஏப்ரல் 5 ஆம் திகதி இந்த தாக்குதல் தொடர்பிலான அனைத்து தகவல்களும் அடங்கிய கடிதம் இந்த அரசாங்கத்துக்கு கிடைத்தது. ஆனால் அரசாங்கம் தூங்கிக்கொண்டிருந்தது. புலனாய்வு பிரிவினர்களை சிறைப்படுத்தியதன் காரணமாகவே இந்த நிலைக்கு காரணமாகும் என்றும் அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

No comments

Powered by Blogger.