October 11, 2019

முஸ்லிம் சமூகத்தின் பாதுகாப்புக்காகவே, கோத்தாபயவுக்கு ஆதரவளிக்கிறேன் - பைசர் முஸ்தபா

முஸ்லிம் அரசியல்வாதிகள் ஒருபக்கத்தில் இருந்து முஸ்லிம் மக்களை காட்டிக்கொடுக்க முடியாது. அதனால் சமூகத்தின் பாதுகாப்பை கருத்திற்கொண்டே கோத்தாபய ராஜபக்ஷவுக்கு ஆதரவளிக்க தீர்மானித்ததாக பாராளுமன்ற உறுப்பினர் பைசர் முஸ்தபா தெரிவித்தார்.

முஸ்லிம் சமூகத்தின் பாதுகாப்பு மற்றும் முன்னேற்றத்தை கருத்திற்கொண்டே நான் எப்போதும் அரசியல் தீர்மானங்களை மேற்கொண்டிருக்கின்றேன். எனது சுயநல அரசியலுக்காக ஒருபோதும் செயற்பட்டதில்லை. கடந்த மஹிந்த ராஜபக்ஷ் அரசாங்கத்தில் முஸ்லிம் சமுகத்துக்கு பல்வேறு நெருக்கடிகள் ஏற்பட்டன. அப்போது அந்த அரசாங்கம் எமது சமுகத்தின் பாதுகாப்பு தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்க தவறியது. அதனால்தான் கடந்த ஜனாதிபதி தேர்தலின்போது அந்த அரசாங்கத்தில் இருந்து விலகி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவளிக்க முன்வந்ததாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷ்வுக்கு ஆதரவளிக்க எடுத்த தீர்மானம் தொடர்பில் இன்று அவரது இல்லத்தில் தமிழ் ஊடகவியலாளர்களுடன் மேற்கொண்ட கலந்துரையாடலின்போதே இவ்வாறு குறிப்பிட்டார்.

(எம்.ஆர்.எம்.வஸீம்)

5 கருத்துரைகள்:

உங்கள் கருத்துக்கு மதிப்பலிக்கிரோம்.ஆனால் கடந்த 4 வருடங்களாக சுதந்திர கட்சியில் இருந்து 75% மானோர் விலகி மஹிந்தவுடன் சேர்ந்து பொது ஜன பெரமுனவில் சேர்ந்த போது நீங்களும் எமது சமூகத்தின் பாதுகாப்பு கருதி மஹிந்தவுடன் போய் இருக்க வேண்டும்.ஆனால் 4 வருடமாக நல்லாட்சியுடன் சேர்ந்து அமைச்சு பதவியையும் அனுபவித்து விட்டு இப்போது சமூகத்துக்காக போய் சேர்ந்ததாக கூறுவது வேடிக்கையாக உள்ளது.ஆனால் சில வேளை உங்கள் இலக்கு அடுத்த முறை தேசியப் பட்டியலுக்காகவும் இருக்கலாம்.பரவாயில்லை உங்கள் விருப்பம்,உங்கள் சுதந்திரம்.ஆனால் சமூகத்தை முன்னிறுத்தி அரசியல் வியாபாரம் செய்வதை இனியாவது நீங்களும் அனைத்து Muslim அரசியல் வாதிகளும் விட்டு விடுங்கள்.ஏனெனில் சமூகத்துக்காக எல்லாமே சமூகத்துக்காக என நீங்கள் அனைவரும் உங்கல்கலின் சுய நலத்துக்காகவும்,அரசியல் இருப்புக்காகவும் ஓலமும் ஒப்பாரியும் செய்ததன் விளைவுதான்,Muslim மக்களுக்கு எதிரான வன்முறைகளும்,தீவிர நடவடிக்கைகளும் இடம் பெற 100 க்கு 90% காரணம் என்பதையும்,மறுமை நாள் என ஒன்னு இருப்பதையும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.எல்லாவற்றுக்கும் அல்லாஹ் போதுமானவன்.

"The Muslim Voice" constantly said about these "MUNNAAFQUE" so-called Muslim politicians. Faizer Musthapa has proven beyond the predictions of "The Muslim Voice" since June 14th., 2019. THE MUSLIM VOTE BANK SHOULD BE ALERT ABOUT THIS DECEPTIVE POLITICIAN NOW AND IN THE FUTURE. HIS ONE VOTE CAN BE ADDED TO GOTABAYA, BUT THE MUSLIMS SHOULD CHASE HIM TO THE WILDERNESS OF THE POLITICAL FIELD OF SRI LANKA AND THE POLITICAL PLAYING GROUND OF THE MUSLIMS. MORE OVER, MAHINDA RAJAPAKSA, GOTABAYA RAJAPAKSA AND BASIL RAJAPAKSHA SHOULD KEEP FAIZER MUSTHAPA AWAY FROM THEIR THE SLPP?SLFP GROUP, BECAUSE THIS GUY WILL TRY TO CRAWL FOR PERSONAL POLITICAL GAINS. HE WILL CLING ON TO ALI SABRY AND TRY TO USE MILINDA MOROGODA AND ATTAULLAH TO CREEP BACK TO THE MAHINDA/GOTABAYA/BASIL PELA. MUSLIMS PLEASE BE CAREFULL OF THIS POLITICIAN, Insha Allah.
Noor Nizam - Convener "The Muslim Voice".

"The Muslim Voice" constantly said about these "MUNNAAFQUE" so-called Muslim politicians. Faizer Musthapa has proven beyond the predictions of "The Muslim Voice" since June 14th., 2019. THE MUSLIM VOTE BANK SHOULD BE ALERT ABOUT THIS DECEPTIVE POLITICIAN NOW AND IN THE FUTURE. HIS ONE VOTE CAN BE ADDED TO GOTABAYA, BUT THE MUSLIMS SHOULD CHASE HIM TO THE WILDERNESS OF THE POLITICAL FIELD OF SRI LANKA AND THE POLITICAL PLAYING GROUND OF THE MUSLIMS. MORE OVER, MAHINDA RAJAPAKSA, GOTABAYA RAJAPAKSA AND BASIL RAJAPAKSHA SHOULD KEEP FAIZER MUSTHAPA AWAY FROM THEIR THE SLPP?SLFP GROUP, BECAUSE THIS GUY WILL TRY TO CRAWL FOR PERSONAL POLITICAL GAINS. MUSLIMS PLEASE BE CAREFULL OF THIS POLITICIAN. HE WILL NOW CLING ON THE MILINDA MOROGODA, BASIL RAJAPAKSA, ALI SABRY OR DUMINDA DISSANAYAKE TO CREEP INTO MAHINDA'S PELA. THEY SHOULD BE VERY CAREFULL IF THEY RESPECT THE MUSLIM VOTE BANK, Insha Allah.
Noor Nizam - Convener " The Muslim Voice".

உங்கள் வீணாய்ப்போன ஆதரவு முஸ்லிம்களை அடியோடு இல்லாமல் செய்யும் கும்பலின் தலைவனுக்கா இருக்க வேணும்
உமக்கு தெரியாதா கடந்த காலத்தில் இந்த ஒநாய்க்கூட்டம் முஸ்லிம்களுக்கு
எதிராக செய்த அநியாயங்களையும் அட்டூழிலயங்களையும் -கட்டவிழ்த்துவிட்ட காடையர்களையும் மறந்து விட்டீரா - எவ்வளவு பணம் வேண்டினீர் கோத்தாவை ஆதரிக்க ? ஞ்சானரையும் - ரத்தனரையும் மொட்டையடித்த குண்டர் பாராளுமன்ற உறுப்பினரையும் இன்னும் ஏராளமான முஸ்லிம்களுக்கு எதிரானவர்களை கொண்டவருக்கு நீர் support பண்ணுகிறீர் என்றால் எங்கயோ இடிக்குது

Post a Comment