Header Ads



இலங்கையில் பயங்கரவாத RSS இந்து அமைப்பின் 17 கிளைகள் செயற்பாடு

இந்தியாவின் தீவிர வலதுசாரி இந்துத்துவ அமைப்பான ராஷ்ரிய சுயம் சேவக் சங் (ஆர்எஸ்எஸ்) அமைப்பின் கிளைகள் சிறிலங்காவிலும் செயற்படுவதாக, பாஜகவின் தலைவர்களில் ஒருவரான சுப்ரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்சவின் மகனும், நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்சவின், திருமண வரவேற்பு நிகழ்வு கடந்த 17ஆம் நாள் கொழும்பில் இடம்பெற்றது.

இந்த திருமண வரவேற்பு விழாவில் பங்கேற்க வந்திருந்த சுப்ரமணியன் சுவாமி, ஊடகங்களுடன் பேசும் போதே, சிறிலங்காவில் ஆர்எஸ்எஸ் அமைப்பின் 17 கிளைகள் இயங்குவதாக தெரிவித்துள்ளார்.

எனினும், எந்தெந்த அமைப்புகள் ஆர்எஸ்எஸ் பின்னணியுடன், அதன் கிளைகளாக இயங்குகின்றன என்ற விபரத்தை சுப்ரமணியன் சுவாமி வெளியிடவில்லை.

இந்த நிகழ்வில், பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவரும், இந்திய நாடாளுமன்ற உறுப்பினருமான சுப்ரமணியன் சுவாமி, ஆர்எஸ்எஸ் அமைப்பின் தேசிய நிறைவேற்றுக் குழுவில் பணியாற்றியவரும், பாஜகவின் தேசிய செயலருமான ராம் மாதவ், இந்தியாவின் முன்னாள் பிரதமர் தேவகௌடா, இந்தியாவின் முன்னாள் வெளிவிவகாரச் செயலர் நிருபமா ராவ் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

2 comments:

  1. Good, மகிந்த அணி ஆட்சியை பிடித்தால், கிழ்க்கை சுப்பிரமணி சாமி பிடித்துவிட்டுவார் போல.
    என்ன கூத்து நடந்தாலும் பரவாயில்லை, Isis யிடமிருந்து கிழக்கை மீட்டால் சரி தான்

    ReplyDelete
  2. ஒரு நாள் இந்தியாவின் ஆதிக்கத்தை சிங்களவர்கள் எதிர்ப்பார்கள் அப்பொழுது இந்த ஹிந்துத்துவ பயங்கரவாத நாய்களும் தோட்டக்காட்டானுங்களும் இந்த நாட்டிலிருந்து சிங்களவர்களால் அடித்து துரத்தப்படுவார்கள்

    ReplyDelete

Powered by Blogger.