Header Ads



தேர்தலில் ரணிலே களமிறங்குவார் - தமிழ் கட்சிகள் சஜித்திற்கு ஆதரவில்லை

எதிர்­வரும் ஜனா­தி­பதித் தேர்­தலில் ஐக்­கிய தேசியக் கட்சி தலை­மை­யி­லான கூட்­ட­ணியின் வேட்­பா­ள­ராக ஐக்­கிய தேசியக் கட்­சியின் தலை­வரும் பிர­த­ம­ரு­மான ரணில் விக்­ர­ம­சிங்­கவே கள­மி­றங்­குவார் என அக் கட்­சியின் சிரேஷ்ட உறுப்­பினர் ஒரு­வரை மேற்­கோள்­காட்டி ஆங்­கில ஊடகம் ஒன்று செய்தி வெளி­யிட்­டுள்­ளது.

தனது பெயரை வெ ளிப்­ப­டுத்த விரும்­பாத குறித்த ஐ.தே.க. முக்­கி­யஸ்தர் மேலும் குறிப்­பி­டு­கையில், ஐக்­கிய தேசியக் கட்­சியின் யாப்­புக்­க­மைய அக் கட்­சியின் தலை­வரே ஜனா­தி­பதித் தேர்­தலில் போட்­டி­யிட முடியும். கட்­சியின் செயற்­கு­ழு­விலும் பாரா­ளு­மன்றக் குழு­விலும் இர­க­சிய வாக்­கெ­டுப்­பொன்று நடாத்­தப்­பட்டால் அதில் ரணில் விக்­ர­ம­சிங்­கவே வேட்­பா­ள­ராக தெரிவு செய்­யப்­ப­டுவார்.

அத்­துடன் சிங்­கள, தமிழ், முஸ்லிம் கட்­சிகள் இணைந்த கூட்­டணி ஒன்று விரைவில் தோற்­று­விக்­கப்­ப­ட­வுள்­ளது. பௌத்­தர்கள் உள்­ளிட்ட இலங்­கையின் சகல சமூ­கங்­க­ளி­னதும் ஆத­ரவைத் திரட்­டு­வ­தற்கு ரணில் விக்கி­ர­ம­சிங்க போன்ற முதிர்ச்­சி­மிக்க சிரேஷ்ட தலை­வரே பொருத்­த­மா­னவர். 

தமிழ் கட்­சிகள் தாம் சஜித் பிரே­ம­தா­சவை ஆத­ரிக்கப் போவ­தில்லை என ஏற்­க­னவே அறி­வித்­து­விட்­டன.

ஐக்­கிய தேசியக் கட்­சிக்கு ஏற்­க­னவே கணி­ச­மான பௌத்த மக்­களின் வாக்­குகள் உள்­ளன. அத்­துடன் இம்­முறை முதன் முறை­யாக வாக்­க­ளிக்கும் இளைஞர், யுவ­தி­களின் வாக்­குகள் முக்­கி­ய­மாக அமையப் போகின்­றன.

தமது தொகு­தி­களில் ஆத­ரவை இழந்­துள்ள ஐக்­கிய தேசியக் கட்­சியின் சில எம்.பி.க்களே சஜித் பிரே­ம­தா­சவை வேட்­பா­ள­ராக முன்­னி­றுத்­து­கின்­றனர். இது கட்சியைக் கடுமையாகப் பாதிப்பதுடன் தோல்விக்கு இட்டுச் செல்லும் செயற்பாடு என்பதை அவர்கள் உணராதுள் ளனர் என்றும் அவர் மேலும் குறிப்பிட் டுள்ளார்.

3 comments:

  1. அப்போ தமிழ் கட்சிகளுக்கு கோத்தாவை வெல்ல வைக்க ஆசை உள்ளது

    ReplyDelete
  2. சிங்கள தமிழ் முஸ்லிம் கட்சிகள் ஒன்றிணைந்து புதிய கட்சி ஒன்றினை தங்களுக்குள் ஒருங்கிணைத்து ஒரு பொது உடன்படிக்கையின்கீழ் போட்டியிட வைப்பது காலத்தின் மிகச் சிறந்த தேவையாகும். அரசமைப்பின் விதிமுறைகளின் பிரகாரம் எவரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடலாம். மக்கள் அனைவரும் தமக்கிடையேயுள்ள பேதங்களை மறந்து நாட்டின் அபிவிருத்தியினையும் மக்கள் நல்வாழ்வினையும் கருத்தில் கொண்டு தமது செயற்பாடுகளை அமைக்கின்றபொழுது சிங்கப்பூர் என்ன அமெரிக்காவை மிஞ்ஞிய பொருளாதார வளத்தையும் நேர்த்தியான நிர்வாக அமைப்பையும் கட்டுமானத்தையும் உடைய நாடாக இலங்கை மாறும். அதற்கு தேவையானவை மக்கள் பலமே. அமெரிக்க பிரஜையான கோத்தபாய அவர்கள் இலங்கை அரசியலில் ஏன் குதித்துள்ளார்கள் என்பதனை காரண காரியத்துடன் மக்களுக்கு விழிப்புணர்ச்சியினை ஏற்படுத்தும்போது நிச்சயமாக வெற்றி இவர்கள் பக்கமே மிளிரும் என்பது வெள்ளிடைமலை. (மிக முக்கிய குறிப்பு: 2025ல் நடைபெறப்போகும் தேர்தல் சமயம் நான் உயிருடன் இருப்பேனா என்று சொல்ல முடியாது. இந்த விடயத்தை உலகம் முடியும் வரை சுழற்சிமுறையில் மக்களுக்கு ஒவ்வொரு நான்கரை வருட முடிவிலும் எடுத்துச் சொல்வதற்கு என்னைப்போல் வேலையில்லாத யாரும் முன்வந்தால் உதவியாகவும் “முஸ்பாத்தி” யாகவும் (வேடிக்கை) இருக்கும். ஏனெனில் எங்களுடைய மக்களை என்ன சொல்லியும் ஏன் இறைவன் மாறுவேடம் போட்டு வந்தாலும்கூட திருத்த மாற்ற முடியாது).

    ReplyDelete

Powered by Blogger.