Header Ads



ஞானசாரரைக் கைதுசெய்யுமாறு ஜனாதிபதியிடம், தமிழ் கூட்டமைப்பு வலியுறுத்து

ஞானசார தேரரைக் கைதுசெய்வதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தரவிடவேண்டும் என்று கோரிக்கை முன்வைத்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை.சோ.சேனாதிராசா, மதச்சார்பற்ற நாடாக இலங்கை இருக்கும் புதிய அரசமைப்பு உருவாக்கப்படவேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பில் அவர் ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-

“ஞானசார தேரரும், மல்வத்த பௌத்த பீடமும் தமிழினத்தையும் இந்துமதம் முதலான ஏனைய மதங்களையும் மதத் தலங்களையும் எச்சரிப்பதையும் ஆக்கிரமிப்பதையும் அடக்கி ஆள முயற்சிப்பதையும் ஏற்றுக்கொள்ள முடியாது.

பௌத்த மதத்துக்கு முன்னுரிமை என்று ஏனைய மதங்களை அடக்கி ஆள, ஒழித்துவிட எடுக்கப்படும் முயற்சிகள் அரசமைப்பு ரீதியில் மதங்களின் சமத்துவத்தையும் மத நம்பிக்கையையும் பாதுகாக்க வேண்டுமென்பது அவசியமாகிவிட்டது.

இந்தியாவில் பல மதங்கள், பல இனங்;கள் ஏற்கப்படுவதை அரசமைப்பு ஊடாகப் பேணிப் பாதுகாப்பதை உறுதிப்படுத்தி நிற்கின்றது. இந்திய அரசமைப்பு மதசார்பற்ற நாடு என்றே பிரகடனப்படுத்தியுள்ளது.

இலங்கையிலும் எந்த ஒரு மதத்துக்கும் முன்னுரிமை வழங்காமல் பல இனங்களையும், பல மத நம்பிக்கைகளையும் மத பீடங்களையும் கொண்டுள்ள அடிப்படை விதியை ஏற்று மதசார்பற்ற அரசமைப்பு உருவாக்கப்பட வேண்டும்.

மேலும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஞானசார தேரரை மன்னிப்பளித்து விடுதலை செய்தமை ஊடாக அவர் மீண்டுமொருமுறை அரசியல் தவறிழைத்தமை நிரூபணமாகின்றது.

நீதிமன்றத்தை அவமதித்தமை, சட்டத்தரணிகளை தாக்கியமை உள்ளிட விடயங்களுக்காக ஞானசார தேரர் உட்பட்ட சம்பந்தப்பட்டவர்களைக் கைதுசெய்ய ஜனாதிபதி மைத்திரிபால உத்தரவிடவேண்டும்.

அல்லது மத ரீதியாக, இன ரீதியாக, பிரதேச ரீதியாக இலங்கை பிளவுபட்டுவிடும். இந்த விளைவுகளுக்கு ஜனாதிபதியும், அரசுமே பொறுப்பு” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

4 comments:

  1. சிவாஜி கணேசன் மாதிரி ஓவர் acting செய்வதை TNA தவிர்க்க வேண்டும்.

    இலங்கை அரசியல்வாதிகளுடன் ஒப்பிடும் போது ஞானசார பிக்கு சிறந்தவர்

    ReplyDelete
  2. சம்பந்தன் ஐயா அவர்களின் வேண்டுகோள் காலத்துக்கும், நேரத்துக்கும் மிகவும் பொறுத்தமானது. நாட்டை முன்னேற்றும் போலிவேசம் போடமுன்பு இந்த நாட்டில் எல்லா மக்களுக்கும் சம மாக வாழும், வாழ்க்கையை அனுபவிக்கும் உரிமை வழங்குவதன் அடிப்படை தான் மதச் சார்பற்ற அனைத்து மதங்களையும் மதிக்கும் ஒரு அரசை இந்த நாட்டில் நிறுவப்படவேண்டும். நாட்டின் சட்டத்தையும் குறிப்பாக நீதிமன்றத்தின் கட்டளையையும் அவமதித்த து யாராக இருந்தாலும் அத்தகைய தனிநபர், குழுவின் தகுதியையும் மத த்தையும் பாராது உடனடியாக கைதுசெய்து சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும். மீண்டும் சம்பந்தன் ஐயாவுக்கு நன்றி.

    ReplyDelete
  3. @Ajan அடித்தாலும் உதைத்தாலும் ஞானசாரை ஏற்றுக்கொள்வதை தவிர உங்களுக்கெல்லாம் வேற வழி? தெற்கில் சிங்கள பிரதேசங்களில் சிங்கள இனவாதிகளால் முஸ்லிம்கள் அச்சுறுத்தப்படுவதற்கும், வடக்கில் பெரும்பாலான தமிழர்களை பயங்கரவாதிகளாக கொண்ட இடத்தில தமிழர்களை அச்சுறுத்துவதற்கும் நிறைய வித்தியாசம் உண்டு. பிராபகரன் சிங்கள இனத்தின் முன் மண்டிபோட்டு செத்ததோடு உங்களுக்கும் அவர்களை அனுசரித்து நக்கி வாழ்ந்தால் தான் எதிர்காலம்

    ReplyDelete
  4. இலங்கை மதச்சார்பற்ற நாடாக பிரகடனப் படுத்தப்படும் வரை பிரச்சினைக்குத் தீர்வுகாண முடியாது.

    ReplyDelete

Powered by Blogger.