Header Ads



அனுமதி மறுத்தால், பரந்­த கூட்­ட­ணி வேட்­பா­ள­ராக சஜித்தை போட்­டி­யி­ட­வைப்­பது பற்றி ஆலோசனை

ஐக்­கிய தேசியக் கட்­சியின்  ஜனா­தி­பதி வேட்­பா­ள­ராக சஜித் பிரே­ம­தா­சவை நிய­மிக்க  வேண்டும் என்று ஐக்­கிய தேசிய முன்­ன­ணியின்  பங்­கா­ளிக்­கட்­சி­களின் தலை­வர்கள் வலி­யு­றுத்­தி­யுள்­ள­துடன் அவ்­வாறு கள­மி­றங்­கு­வ­தற்கு மறுப்புத் தெரி­விக்­கப்­பட்டால் பரந்­து­பட்ட கூட்­ட­ணியை அமைத்து அதன் வேட்­பா­ள­ராக சஜித் பிரே­ம­தா­சவை போட்­டி­யி­ட­வைப்­பது குறித்து ஆரா­யப்­பட்டு வரு­வ­தாக தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.

ஜனா­தி­பதி தேர்தல் திகதி அறி­விக்­கப்­பட்­டுள்ள நிலையில் ஐக்­கிய தேசிய கட்­சியின் ஜனா­தி­பதி வேட்­பாளர் விட­யத்தில் கட்­சிக்குள் தொடர்ந்தும் நெருக்­க­டிகள் நிலவி வரு­கின்­றது. இந்­நி­லையில் ஐக்­கிய தேசிய முன்­ன­ணியின் கூட்­டணிக் கட்­சிகள் தனித்­த­னியே சந்­திப்­புக்­களை மேற்­கொண்டு தீர்­மா­னங்­களை முன்­னெ­டுத்து வரு­கின்­றன.

இந்­நி­லையில் நேற்று பாரா­ளு­மன்ற கட்­டி­டத்­தொ­கு­தி­யிலும் ஐக்­கிய தேசிய முன்­ன­ணியின் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் அமைச்சர் சஜித் பிரே­ம­தா­சவை சந்­தித்து கலந்­து­ரை­யா­டி­யுள்­ளனர். இதன்­போதும் பரந்த கூட்­டணி அமைத்து தேர்­தலை  சந்­திப்­பது  குறித்தே பேச்­சு­வார்த்தை நடத்­தப்­பட்­டுள்­ளது.

 இந்த சந்­திப்பில் ஐக்­கிய தேசிய முன்­ன­ணியின் பங்­கா­ளிக்­கட்­சி­களின்  தலை­வர்­க­ளான ரவூப் ஹக்கீம் , சம்­பிக்­க­ர­ண­வக்க, பழ­னி­தி­காம்­பரம், ரிஷாத் பதி­யூதின் ஆகி­யோரும்  கலந்­து­கொண்­டுள்­ளனர்.

  ஐக்­கிய தேசிய கட்­சியின் சார்பில் அமைச்சர் சஜித் பிரே­ம­தா­சவை கள­மி­றக்க எதிர்ப்பு தெரி­விக்­கப்­ப­டு­மானால் அந்த முயற்­சியை கைவிட்டு ஐக்­கிய தேசிய முன்­ன­ணியின் பங்­காளிக் கட்­சிகள் அனைத்­தையும் மற்றும் தம்­முடன் இணைந்து பய­ணிக்­கக்­கூ­டிய தமிழ், முஸ்லிம் கட்சிகள் அனைத்தையும் இணைந்துக்கொண்டு பரந்த கூட்டணி ஒன்றினை உருவாக்கி அதன் வேட்பாளராக அமைச்சர் சஜித் பிரேமதாசவை நியமிப்போம் என்ற யோசனை இவர்கள் முன்வைத்துள்ளனர்.

இதனை அமைச்சர் சஜித் பிரேமதாசவிடமும் கூறியுள்ளதுடன் இந்த வேலைத்திட்டம் குறித்த துரித நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு செயற்படுமாறும் வலியுறுத்தியுள்ளனர்.

1 comment:

  1. why this much of hesitation to appoint such a popular person SAJID as the P candidate, it is very clear tha Ranil & his golaya Ravi want an easy win for Gota

    ReplyDelete

Powered by Blogger.