Header Ads



பாராளுமன்றத்தில் தினேஷ் - ஹக்கீம் வாக்குவாதம்

ஜனாதிபதி தேர்தலுக்கு திகதி குறிப்பிடப்பட்டுள்ள நிலையில் நீர்வழங்கல் அமைச்சரினால் ஆயிரத்துக்கும் அதிகமானவர்களுக்கு தொழில் வாய்ப்புக்களை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பது தேர்தல் சட்டத்துக்கு முரணாகும் என்று பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன தெரிவத்தார். 

அத்துடன் தேர்தல் ஒன்று இடம்பெறும்போது இவ்வாறான சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு இடமளிக்க முடியாது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

பாராளுமன்றம் இன்று சபாநாயகர கருஜயசூரிய தலைமையில் கூடியது. பிரதான நடவடிக்கைகள் இடம்பெற்ற பின்னர் எதிர்க்கட்சி உறுப்பினர் தினேஷ் குணவர்த்தன ஒழுங்கு பிரச்சினை ஒன்றை முன்வைத்து கருத்து தெரிவிக்கையிலேயே இதனை கூறினார்.

இதன்போது அமைச்சர் ரவூப் ஹக்கீமுக்கும் தினேஷ் குணவர்த்தனவுக்குமிடையில் சபையில் கடும் வாக்குவாதம் இடம்பெற்றது. அத்துடன் ஆளும், எதிர்க்கட்சி உறுப்பினர்களும் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

(ஆர்,யசி,எம்.ஆர்.எம்.வஸீம்)

2 comments:

  1. தினேஷின் வாதம் நியாயமானது
    சம்பந்தப்பட்ட அரசியல்வாதி/கட்சி இந்த தேர்தலில் போடியிட தடைசெய்ய வேண்டும்

    ReplyDelete
  2. ALL OF YOU MENTAL.NO BODY TALKING ABOUT OUR COUNTRY DEVELOPMENT OR EDUCATION HEALTH MATTER.ALL OF YOU CORRUPTED PEOPLE.NEXT ELECTION SRILANKANS DONT VOTE FOR OVER 55YEARS.ALL ARE THEY SICK AND GREEDY FOR POWER AND MONEY.

    ReplyDelete

Powered by Blogger.