Header Ads



வைத்தியசாலையில் பால் புரைக்கேறி, குழந்தை மரணம்

கொழும்பு சிறுவர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த மூன்றுமாத குழந்தை பால் புரைக்கேறியதால் துர்திஷ்டவசமாக உயிரிழந்துள்ளது. 

வெலகெதர பிரதேசத்தைச் சேர்ந்த கண்ணங்கர கோரலகே நெத்சரா என்ற தாய் கொழும்பு நகர திடீர்மரண பரிசோதகர் மொஹமட் அப்ராஸிடம் சாட்சியமளிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.  தாயின் வாக்குமூலத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

உயிரிழந்தது எனது குழந்தைதான். நான் திருமணம் முடித்து ஆறு வருடங்களாகியுள்ளன. எனது குழந்தைக்கு சுகயீனம் ஏற்பட்டதால், வைத்தியசாலையில் சிகிச்சை அளித்து வந்தோம். குழந்தைக்கு ஹேர்னியா சத்திரசிகிச்சையொன்று மேற்கொள்ளப்பட வேண்டுமென வைத்தியர்கள் அறிவுறுத்தியதால், கடந்த 26ஆம் திகதி மேற்படி சத்திரசிகிச்சை கொழும்பு லேடி ரிஜ்வே  சிறுவர் வைத்தியசாலையில் செய்தோம். 

கடந்த 31ஆம் திகதி சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்ட இடத்தில் வீக்கம் ஏற்பட்டிருந்தமையால் மீண்டும் வைத்தியசாலைக்குக் குழந்தையை கொண்டுவந்து சிகிச்சையளித்தோம். 

கடந்த 2ஆம் திகதி குழந்தைக்கு ஊசியொன்று ஏற்றப்பட்டது. அன்று காலை 2.30 மணியளவில் ஏற்றப்பட்ட ஊசியால் முன்னேற்றம் ஏற்படவில்லை. குழந்தையின் உடல் மிகவும் குளிர்மையாக இருந்தது. குழந்தைக்குப் பாத்திரமொன்றில் பால் மாவை கரைத்துப் பருக்கினேன். பின்னர் குழந்தை 'PBU' அறைக்கு கொண்டுசெல்லப்பட்டது. அங்கு சிகிச்சையளிக்கப்பட்டது. குழந்தை உயிரிழந்துள்ளதாக மருத்துவர் குழாம் எம்மிடம் தெரியப்படுத்தியது. குழந்தைக்குப் பால் இறுகியமையின் காரணமாகவே உயிரிழந்துள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்தனர் என தாய் தமது வாக்குமூலத்தில் கூறியுள்ளார்.  திடீர் மரண பரிசோதகர் மொஹமட், சிசு பால் புரைக்கேறியதால் மரணமடைந்ததாக அறிக்கை சமர்ப்பித்துள்ளார். சம்பவம் தொடர்பில் பொரளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.  

1 comment:

  1. இந்த விடயம் எவ்வளவு சுமுகமாக இலங்கையில் தீர்த்து வைக்கப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட சவூதி அரேபியாவில் சவூதி மன்னரால் கொலைசெய்யப்பட்ட றிசானா நபீக் இனது விடயத்திலும் இவ்வாறே நடந்துள்ளது. சவூதி நீதி பொய்த்துவிட்டது.

    ReplyDelete

Powered by Blogger.