Header Ads



"சஜித் ஜனா­தி­பதியானாலும் 2024 வரை, ஐதேக தலைவராக ரணில் நீடிப்பார்"

ஐக்­கிய தேசியக் கட்­சியின் சார்பில் ஜனா­தி­பதித் தேர்­தலில் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவை தவிர வேறு எவர் வேட்­பா­ள­ராக நிறுத்­தப்­பட்டு அவர் தேர்­தலில் வெற்றி பெற்­றாலும் ஐ.தே.கவின் தலைமைப் பொறுப்பு தொடர்ந்தும் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வி­டமே இருக்கும் என்றும், அடுத்த ஆறு ஆண்­டு­கா­லத்­துக்கு அவரே கட்­சியின் தலைமைப் பொறுப்பை வகிப்பார் எனவும் சிரேஷ்ட அமைச்சர் ஒருவர் தெரி­வித்தார்.

கட்­சியின் யாப்பு கடந்த வருடம் இது­தொ­டர்பில் மாற்­றப்­பட்­டுள்­ள­தா­கவும் எதிர்­வரும் 2024ஆம் ஆண்­டு­வரை அடுத்த ஆறு ஆண்­டு­க­ளுக்கு ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவே  தலைமைப் பொறுப்பை வகிப்பார் என்றும் கூறினார். 

இது­தொ­டர்பில் அவர் மேலும் கூறு­கையில், 

தற்­போ­தைய அர­சியல் நிலை­வ­ரங்­களை பார்க்­கையில் எந்தக் கட்சி வேட்­பா­ளரும் ஜனா­தி­பதித் தேர்­தலில் 50 வீதத்தை எட்­டப்­போ­வ­தில்லை என்ற தோற்­றப்­பாடே நில­வு­கின்­றது. எனினும் சஜித் பிரே­ம­தா­ஸ­வுக்­கான ஆத­ரவு அதி­க­ரித்து வரு­கின்­றது. சிறு­பான்மைக் கட்­சிகள் ஆத­ர­வ­ளிக்கும் பட்­சத்­திலும் ஜே.வி.பியி­னரின் இரண்­டா­வது விருப்பு தேர்வு ஐ.தே.கவாக இருக்கும் பட்­சத்­திலும் சஜித் இல­கு­வாக வெற்றி பெற முடியும். 

கோத்­தா­பய ராஜபக் ஷவை பொறுத்­த­மட்டில்,  அவர் சிறு­பான்மை மக்­களின் வாக்­கு­களை எதிர்­பார்த்­த­வ­ராக தெரி­ய­வில்லை. பெரும்­பான்மை மக்­களின் வாக்­கு­க­ளையே அவர் எதிர்­பார்த்­துள்ளார். 

இதே­வேளை,  அண்­ண­ள­வாக 16 மில்­லியன் மக்கள் வாக்­க­ளிக்க தகுதி பெற்­றுள்­ளனர். இவர்­களுள் 12 மில்­லியன் பேர் பெரும்­பான்மை சிங்­கள மக்கள்.  மேலும் 4மில்­லியன் பேர் தமிழ்ப் பேசும் மக்கள் அத்­துடன் 9 இலட்சம் புதிய வாக்­கா­ளர்­களும் உள்­ளனர். 

இந்த 16மில்­லியன் உத்­தேச வாக்­கு­களில் 12 மில்­லியன் பேர் வாக்­க­ளித்தால் அது 85 வீத வாக்­க­ளிப்­பாக அமையும். அதே­வேளை, 4மில்­லி­ய­னா­க­வுள்ள சிறு­பான்மை மக்கள் வாக்­க­ளிப்பில் ஈடு­பட்டால் அது 65 வீத­மாக அமையும். எவ்­வா­றெ­னினும் 65 இலட்சம் வாக்­கு­களை ஜனா­தி­பதி வேட்­பாளர் ஒருவர் பெற்றால் மாத்­தி­ரமே அவர் 50 வீத இலக்கை எட்­ட­மு­டியும். 

அந்­த­வ­கையில் புதிய வாக்­கா­ளர்கள் மற்றும் தீர்­மா­னிக்­காமல் இருக்கும் ஒரு பிரிவு வாக்­காளர் ஆகி­யோரின் வாக்­கு­களும் மிகவும் முக்­கி­ய­மா­னவை.  எவ்­வாறு பார்த்­தாலும் சிறு­பான்மை மக்­களின் வாக்­குகள் வெற்றி தோல்­வியை நிர்­ண­யிப்­பதில் கணி­ச­மான பங்­க­ளிப்பை வழங்கும் என எதிர்­பார்க்­கலாம்.   

அதே­வேளை ஜே.வி.பியி­னரும் கணி­ச­மான வாக்­கு­களை பெறக்­கூடும். அவர்கள் பெரும் வாக்­குகள் இரு பிர­தான கட்சி வாக்­கு­களில் பெரும் தாக்­கத்தை ஏற்­ப­டுத்­தக்­கூடும் இதுவே கள யதார்த்­த­மாகும். 

இந்­நிலையில்,  ஐக்­கிய தேசியக் கட்­சிக்கு சாத­க­மான கள நிலை­மைகள் காணப்­ப­டு­கின்­றன. ஐ.தே.க கூட்டு சிறு­பான்மைக் கட்­சி­களை அர­வ­ணைத்து செல்லும் அதே­வேளை, கோத்­தா­பய ராஜபக் ஷ பெரும்­பான்மை மக்­களின் பௌத்த வாக்­கு­க­ளையும்  சிங்­கள கத்­தோ­லிக்க மக்­களின் வாக்­கு­க­ளையும் எதிர்­பார்த்து காய்­களை நகர்த்­து­கின்றார். அவ்வாறு பார்க்கையில்,  35 இலட்சம் வாக்குகள் மாத்திரமே அவருக்கு கிடைக்கும் வாய்ப்புகள் உள்ளன. 

எனினும்,  கள நிலைமைகளைக் கூறமுடியாது. இது சந்தர்ப்பத்திற்கு ஏற்பவும் புதிய மற்றும் தீர்மானிக்காத வாக்காளர் பிரிவினரின் விருப்புகளையும் பொறுத்து வேறுபடும் என்றார். 

No comments

Powered by Blogger.