August 19, 2019

விடைபெற்ற இராணுவத் தளபதியை, பாராட்டி வழி அனுப்புவோம்..

இலங்கையின் 22வது இராணுவத் தளபதி லெப்டின்ன்ட் ,ஜெனரல் NUM Mahesh .W. Senanayeke தனது சேவைக்கால பதவியை நிறைவு செய்து விடை பெறுகின்றார், இலங்கை முஸ்லிம்களின் இக்கட்டான காலப்பகுதியில் அவர் ஆற்றிய பணி பற்றிய பதிவே இதுவாகும்,
#மகேஷ்_சேனநாயக்க,
1983 ம் ஆண்டு இலங்கை இராணுவ சேவையில் இணைந்த இவர், ஆரம்பக்கல்வியை Colombo Aananda college ல் கற்றவர், பின்னர் USA இராணுவக் கல்லூரியில் கற்றவர், இராணுவப் பொறியியலாளர் என்ற தரத்தை உடையவர்,
தனது சேவைக்காலத்தில் வட கிழக்கு பகுதியில் சேவை புரிந்த்துடன், கொடிய யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவர 52 வது படைப்பிரிவில் பணியாற்றியதுடன், Rana wikrama ,Rana sura, போன்ற பல உயர் இராணுவ பதவிகளைச் சொந்தமாக்கியதுடன் , 4 July, 2017 தொடக்கம், 18, August 2019 வரை இராணுவத்தளபதியாகக் கடமை புரிந்தவர்,
#முஸ்லிம்_தொடர்பு,
ஒரு இராணுவத் தளபதி முழு நாட்டிற்கும் சேவையாற்றக்கூடிய பலத்தைக்கொண்டவர் மட்டுமல்ல, அவரது தனிப்பட்ட தீர்மானங்களும் அரசியல்வாதிகளின் கட்டளைகளும் அதில் செல்வாக்குச் செலுத்தும் என்பது எல்லோரும் அறிந்ததே, ஆனால் இவரது சேவைக்காலத்திலேயே, இந்நாட்டு முஸ்லிம்கள் எதிர்பாராத பல துன்பங்களை எதிர்கொண்டனர் , அவற்றிற்கான காரணங்கள் பல வாக இருப்பினும் அவற்றை தளபதி என்ற தனது சக்திக்கு உட்பட்ட வகையில் மிகவும் சாதூர்யமாகக் கையாண்ட பெருமை மகேஷ் சேனநாயக்கவையே சாரும் ,
#திகண_சம்பவங்கள்,
திகண அழிப்பு விடயத்தில் பொலிஸாரின் இனச்சார்பு செயற்பாட்டினால் எழுந்த குற்றச்சாட்டுக்களைத் தொடர்ந்து இராணுவத்திடம் பாதுகாப்பு ஒப்படைக்கப்பட்ட பின்னரே, குறித்த அசம்பாவிதம் முடிவுக்கு வந்தது மட்டுமல்ல அதற்கு முதலே தமக்கு அதிகாரம் வழங்கப்பட்டிருந்தால் இலகுவாக அடக்கி இருக்க முடியும் எனவும் பல இடங்களில் இவர் அரசியல்வாதிகளைக் குற்றம்சாட்டி இருந்ததுடன், முஸ்லிம்அரசியல்வாதிகள், சமூகத் தலைவர்கள், பொது அமைப்புக்களுடன் இணைந்து பல இடங்களில் முஸ்லிம்களுக்கு ஆதரவானதும்,பாதுகாப்பானதுமான கருத்துக்களைக்கூறி ஆறுதல் படுத்தினார்,.
#ஸஹரானின்_பயங்கரவாதம்
இலங்கை முஸ்லிம்களின் வரலாற்றில் வெட்கப்படக்கூடிய தினமான 4/21 தாக்குதலும் அதனைத்தொடர்ந்த கலவரங்களுக்கு மிடையே முஸ்லிம்கள் பல இன்னல்களை அனுபவித்து இருந்தாலும், அதனை எல்லை மீறிய நிரந்தர இன அழிப்பாக மாற்றாது தற்காலிகமான ஒரு நடஙடிக்கையாக காட்டுவதில் மஹேஷின் பங்கு அதிகம் என்றே கூற முடியும்,
அவரது பேட்டிகளும், ஊடக அறிக்கைகளும் நாட்டு மக்களை" #முஸ்லிம்_அச்சத்தில்" இருந்து மீளவைக்க மிகவும் உதவியது, அத்தோடு அவர்பல இடங்களில் தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளை வேறாகவும், அப்பாவி முஸ்லிம்களை வேறாகவும் பிரித்துக் கையாளுவதில் இராணுவத்தை நன்கு வழிப்படுத்தி கட்டமைத்து இருந்தார், ஒருசில அரசியல் அழுத்தங்கள் அவரது நல்லெண்ணங்களை நடைமுறைப்படுத்த தடையாக இருந்திருந்தாலும், இவரது உறுதியான பேச்சும், வெளிப்படைத்தன்மையும் மிகச்சிறந்த பங்காற்றின என்றே கூற முடியும், அவர் ஒரு கடும்போக்காளராக இருந்திருப்பின் நிலைமை மேலும் மோசமடைந்து இருக்கும், நாம் இன்னும் அவதிகளை எதிர்கொண்டிருப்போம்,
முஸ்லிம்களுக்கும் இராணுவத்திற்கும் இடையேயான தொடர்பு, ஒத்துழைப்புக்கள், தியாகம் என்பனவற்றை பல கூட்டங்களிலும் ,கலந்துரையாடல்களிலும் வெளிப்படையாகப் பேசி முஸ்லிம்களின்மீது கடும்போக்கு வாதிகளுக்கு இருந்த தீராத காரத்தை குறைத்தார், அந்தவகையில் அவரது பணிக்கு பாதுகாக்கப்பட்ட சமூகம் என்ற வகையில் நாம் நன்றிக்கடன் உடையவர்களாக இருக்கின்றோம்.
#என்ன_செய்யலாம்,
ஒரு சமூகம் இக்கட்டான நிலையில் இருக்கும் வேளையில் அதற்கு தன்னால் முடியுமான அளவு உதவி புரிந்த ஒரு படைத்தளபதிக்கு நாம் பல்வேறு வகையில் எமது பாராட்டுக்களைத் தெரிவிக்க முடியும், அந்தவகையில் முஸ்லிம் சமூகத்தின், பொது அமைப்புக்களும் ,சமய அமைப்புக்களான ஜம்மியத்துல்உலமா போன்ற
அமைப்புக்களும் தமது நன்றிக்கடனையோ, அவருக்கான பிரியா விடையையோ, ஒரு பொறுப்புள்ள சமூகம் என்ற அடிப்படையில் ஏதோ ஒரு வகையில் ஏற்பாடு செய்து தமது நன்றி உணர்வை வெளிப்படுத்த முடியும்,
குறைந்தது அவரது சேவையைப் பாராட்டி அன்றாட பத்திரிகைகளில் ஒரு முழுப்பக்க பத்திரிகை விளம்பரத்தையாவது வெளியிட முடியும்,
அது எதிர்காலத்தில் . உயர்பதவிகளுக்கு நியமிக்கப்படும் அதிகாரிகளுக்கான நல்ல உதாரணமாகவும், தூண்டுதலாகவும் அமையும், ஏனைய தனி நபர்கள் எமது FACEBOOK போன்ற சமூக ஊடகங்களில் அவருக்கு நன்றி தெரிவிக்கும் பதிவுகளையாவது தனிப்பட்ட வகையில் இடுவதன் மூலமும் எமது விசுவாசத்தை வெளிப்படுத்த முடியும், ஏதோ ஒரு வகையில் எம் உணர்வை வெளிப்படுத்த முன்வருவதே இக்காலத்திற்கு பொருத்தமான செயற்பாடாகும்,
தளபதி அவர்களே !உங்கள் கடந்த கால சேவையில் இன்னலுக்குள்ளான சமூகம் என்ற வகையில் நாங்கள் ஆறுதல் அடைகின்றோம், என்றும் மனமார்ந்த நன்றிகள் ,
#எமக்காக_உதவியவருக்கு_நாங்களும் #உதவுவோம்
Thank you 
MUFIZAL ABOOBUCKER

2 கருத்துரைகள்:

Yes, we, Muslims have a responsibility to extend our gratitude to him for his services rendered especially to us.

Post a comment