Header Ads



அடிப்­ப­டை­வா­திகள் அனைத்து மதங்­க­ளிலும் இருக்­கின்­றனர் - சிங்­களவர்களால் மாத்­திரம் சமா­தா­னத்தை ஏற்­ப­டுத்த முடி­யாது,

மேல் மாகாண ஆளுநர் அலு­வ­ல­கத்தின் ஏற்­பாட்டில் நேற்று முன்­தினம் கொழும்பு தாமரை தடாக அரங்கில் நடை­பெற்ற அமைதி, சமா­தானம் மற்றும் சக­வாழ்­வுக்­கான தேசிய மாநாட்டில் உரை­யாற்­றிய ஜாதிக ஹெல உறு­மய கட்­சியின் முன்னாள் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் ஓமல்பே சோபித தேரர், இலங்கை முஸ்­லிம்கள் மீதும் இஸ்­லாத்தின் மீதும் குற்­றச்­சாட்­டுக்­களை முன்­வைத்­த­துடன் அல்­குர்­ஆ­னிய வச­னங்­க­ளுக்கும் தவ­றான அர்த்­தங்­களை முன்­வைத்து உரை­யாற்­றினார். எனினும் இதனைத் தொடர்ந்து உரை­யாற்றி அகில இலங்கை ஜம்­இய்­யதுல் உல­மாவின் தலைவர் அஷ்ஷெய்க் ரிஸ்வி முப்தி, ஓமல்பே சோபித தேரரின் கருத்­துக்­களை மறுத்­த­துடன் இஸ்லாம் குறித்தோ அல்­குர்ஆன் குறித்தோ தவ­றான கருத்­துக்­களை முன்­வைக்க வேண்டாம் என்றும் வேண்­டுகோள் விடுத்தார்.

ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன, உலக முஸ்லிம் லீக் செய­லாளர் நாயகம் கலா­நிதி முஹம்மத் அப்துல் கரீம் அல் ஈஸா உள்­ளிட்ட முக்­கி­யஸ்­தர்கள் மேடையில் இருந்த நிலை­யி­லேயே ஓமல்பே சோபித தேரர் இக் குற்­றச்­சாட்­டுக்­களை முன்­வைத்தார்.

ஓமல்பே சோபித்த தேரர் இங்கு தொடர்ந்து உரை­யாற்­று­கையில், சமா­தா­னத்தை ஏற்­ப­டுத்த அனைத்து இன மக்­களும் ஐக்­கி­ய­மாக ஒன்­றுபோல் வாழ­வேண்டும். சிங்­கள, தமிழ் கத்­தோ­லிக்க மக்கள் அதன் பிர­காரம் செயற்­ப­டு­கின்­றனர். ஆனால் முஸ்­லிம்கள் அனைத்து விட­யங்­ளிலும் வித்­தி­யா­ச­மா­கவே செயற்­ப­டு­கின்­றனர். குறிப்­பாக முஸ்லிம் தனியார் சட்டம், அவர்­களின் ஆடை, உணவு போன்­ற­வற்றில் தனித்­து­வ­மா­கவே செயற்­ப­டு­கின்­றனர். இவ்­வாறு சென்றால் எதிர்­கா­லத்தில் தனி அர­சாங்கம் தனி நாடு என்ற நிலைக்கே இது இட்டுச் செல்லும். அத்­துடன் அல்­குர்­ஆனில் சில வச­னங்கள் நல்­லி­ணக்­கத்­துக்கு பாதிப்பை ஏற்­ப­டுத்­தக்­கூ­டி­ய­தாக இருக்­கின்­றன. அவை­தொ­டர்பில் கவனம் செலுத்­த­வேண்டும் என்றார்.

ஓமல்பே சோபித்த தேரரின் இந்த உரையைத் தொடர்ந்து உரை­யாற்ற வந்த அகில இலங்கை ஜம்­இய்­யதுல் உலமா சபை தலைவர் அஷ்ஷெய்க் ரிஸ்வி முப்தி அவ­ரது குற்­றச்­சாட்­டுக்­க­ளுக்கு மேடை­யி­லேயே பதி­ல­ளித்தார். அவர் அங்கு தெரி­விக்­கையில், இஸ்லாம் ஒரு­போதும் அடிப்­ப­டை­வாதம், இன­வா­தத்தை அனு­ம­தித்­த­தில்லை. நல்­லி­ணக்­கத்­தையே இஸ்லாம் போதிக்­கின்­றது. அத்­துடன் ஓமல்பே சோபித்த தேரர் அல்­குர்­ஆனின் வச­னங்கள் குறித்து தெரி­வித்த கருத்­துக்கள் பிழை­யா­ன­வை­யாகும். அவ்­வா­றான சில வச­னங்கள் சில அல்குர் ஆன் இறக்­கப்­பட்ட யுத்த காலத்­துடன் தொடர்­பு­பட்­ட­வை­யாகும்.

அது தொடர்பில் நாங்கள் சிங்­கள மொழியில் புத்­தகம் ஒன்றை எழுதி வெளி­யிட்­டி­ருக்­கின்றோம். அதனால் குர்ஆன் வச­னங்கள் தொடர்பில் தெளி­வின்மை இருந்தால் அது­தொ­டர்பில் எம்­மிடம் கேட்­டி­ருந்தால் தெளி­வு­ப­டுத்­தி­யி­ருப்போம் என்றார்.

மாநாட்டு நிகழ்­வுகள்

இலங்­கையில் இனங்­க­ளுக்­கி­டையில் சமா­தானம் சக­வாழ்வு இடம்­பெ­று­வதை உலக நாடு­க­ளுக்கு தெரி­விக்கும் நோக்­குடன் ஏற்­பாடு செய்­யப்­பட்­டி­ருந்த குறித்த மாநாட்டில் பிர­தம அதி­தி­யாக ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன, விசேட அதி­தி­யாக உலக முஸ்லிம் லீக்கின் செய­லாளர் கலா­நிதி முஹம்மத் அப்துல் கரீம் அல் ஈஸா, எதிர்க்­கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ், முன்னாள் ஜனா­தி­பதி சந்­தி­ரிக்கா பண்­டா­ர­நா­யக்க குமா­ர­துங்க, பௌத்த மத விவ­கார அமைச்சர் காமினி ஜய விக்­ரம பெரேரா, இந்து மத விவ­கார அமைச்சர் மனோ கணேசன், முஸ்லிம் சமய விவ­கார அமைச்சர் அப்துல் ஹலீம் ஆகியோர் கலந்து கொண்­டனர்.

நிகழ்வின் வர­வேற்­பு­ரையை நிகழ்த்­திய மேல் மாகாண ஆளுநர் ஏ.ஜே. எம். முஸம்மில் தெரி­விக்­கையில் இந்த நாடு பௌத்த நாடு என்­பதை நாங்கள் அனை­வரும் ஆரம்­ப­மாக ஏற்­றுக்­கொள்­ள­வேண்டும். அத்­துடன் ஏனைய மத்­த­வர்கள் தாங்கள் பின்­பற்றும் மதத்தை பின்­பற்றி நடக்க சகல உரி­மையும் வழங்­கப்­பட்­டுள்­ளது என்றார்.

அதனைத் தொடர்ந்து அம­ர­புர கொட­கொட தர்­மா­வங்ச மகா­நா­யக்க தேரர் ஆசி­யுரை வழங்­கும்­போது, அடிப்­ப­டை­வா­திகள் குழப்­பங்­களை ஏற்­ப­டுத்­தி­னாலும் மகா­நா­யக்க தேரர்கள் அதற்கு அனு­ச­ரணை வழங்­கக்­கூ­டாது. அடிப்­ப­டை­வா­திகள் அனைத்து மதங்­க­ளிலும் இருக்­கின்­றனர். அதனால் சிங்­கள மக்­களால் மாத்­திரம் சமா­தா­னத்தை ஏற்­ப­டுத்த முடி­யாது, அனைத்து இன மக்­களும் இதற்­காக ஒன்­று­பட்டு செயற்­ப­ட­வேண்டும். அத்­துடன் சிங்­கள முஸ்லிம் மக்­க­ளி­டையே வர­லாற்று காலம் முதல் இருந்து வந்த ஒற்­று­மையை மீண்டும் ஏற்­ப­டுத்த நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­ட­வேண்டும் என்றார்.

அத­னைத்­தொ­டர்ந்து இந்து மற்றும் கத்­தோ­லிக்க மத­கு­ரு­மார்­களும் தங்­களின் ஆசியை தெரி­வித்­தனர். அத்­துடன் இன ஒற்­று­மையை வலி­யு­றுத்தும் பல கலா­சார நிகழ்­வு­களும் இதன்­போது அரங்­கேற்­றப்­பட்­டன.

இந் நிகழ்வில் விசேட அதி­தி­யாக கலந்­து­கொண்ட உலக முஸ்லிம் லீக்கின் செய­லாளர் நாய­கத்தின் விசேட உரை இடம்­பெற்­ற­பின்னர் உயிர்த்த ஞாயிறு தாக்­கு­தலில் பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்­கென்று அவ்­வ­மைப்­பினால் 5 மில்லியன் அமெரிக்க டொலர் வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. அத்துடன் ஜனாதிபதிக்கு விசேட அதிதி நினைவுச்சின்னமும் வழங்கிவைத்தார். அதனைத்தொடர்ந்து பிரதம அதிதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேகவின் உரையை இடம்பெற்றதை தொடர்ந்து இரவு 8.45 மணியளவில் மாநாடு நிறைவுக்கு வந்தது.

இம் மாநாட்டின் இறுதியில் ஓமல்பே சோபித தேரரிடம் அல்குர்ஆனின் சிங்கள பிரதி, உலமா சபை பிரதிநிதிகளால் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

எம்.ஆர்.எம்.வஸீம்

3 comments:

  1. Who give permission for this terror Monk to speak.
    He should be arrested for his indecent act in front of International Community.
    He also shows to international world that MONKS are decision and toughs maker in SriLanka.
    Shame on Buddhism..

    ReplyDelete
  2. Who give permission for this terror Monk to speak.
    He should be arrested for his indecent act in front of International Community.
    He also shows to international world that MONKS are decision and toughs maker in SriLanka.
    Shame on Buddhism..

    ReplyDelete
  3. Awarukku esikondiruppathai vittu vittu awaruku sariyana thelivei kodukum walihalai patri pesuvom

    ReplyDelete

Powered by Blogger.