Header Ads



அவசரகாலச் சட்டம் காலாவதியானது

கடந்த ஏப்ரல் 22ஆம் நாள் தொடக்கம் நடைமுறையில் இருந்து வந்த அவசரகாலச்சட்டம் நேற்றுடன் காலாவதியாகியுள்ளது.

ஏப்ரல் 21 குண்டுத் தாக்குதல்களை அடுத்து, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவினால், அவசரகாலச்சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது.

அதன் பின்னர், நாடாளுமன்ற ஒப்புதலுடன், அவசரகாலச்சட்டத்தை, சிறிலங்கா அதிபர் மாதம் தோறும் நீடிப்புச் செய்து வந்தார்.

இந்த நிலையில், கடந்த ஜூலை 22ஆம் நாள் நீடிப்புச் செய்து வெளியிடப்பட்ட அவசரகாலச்சட்ட அரசிதழ் அறிவிப்பு நேற்றுடன் காலாவதியானது.

அவசரகாலச்சட்டத்தை நீடிப்புச் செய்வது தொடர்பான அரசிதழ் அறிவிப்பு எதையும் சிறிலங்கா அதிபர் இதுவரை வெளியிடவில்லை. இதனால் அவசரகாலச்சட்டம் இனி நீடிக்கப்படாது என எதிர்பார்க்கப்படுகிறது.

அவசரகாலச்சட்டத்தை நீடிப்பதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதிர்ப்பு வெளியிட்டு வந்த போதும், சிறிலங்காவின் இரண்டு பிரதான கட்சிகளும் அதற்கு ஆதரவு அளித்து வந்தன.

இதற்கிடையே அவசரகாலச் சட்டம் நீடிக்கப்படமாட்டாது என  நம்புவதாக சிறிலங்காவின் சுற்றுலாத் துறை அமைச்சர் ஜோன் அமரதுங்க கூறியுள்ளார்.

No comments

Powered by Blogger.