Header Ads



நாட்டு மக்கள் கேட்டும், ஒரே தலைவர் சஜித் - கபீர்

இன்றைய சூழலில் நாட்டு மக்கள் கேட்டும் ஒரே தலைவர் சஜித் பிரேமதாச என அமைச்சர் கபீர் ஹஷிம் தெரிவித்துள்ளார். 

கேகாலையில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இதனை கூறினார். 

இந்த சந்தர்பத்தில் உண்மையாக ஐ.தே.கவின் ஜனாதிபதி வேட்பாளர் யார் என ஊடகவியலாளர்கள் வினவினர். 

இதற்கு பதிலளித்த அமைச்சர், இந்த கேள்விக்கு பதிலளித்தால் நிச்சயம் ஒழுக்காற்று விசாரணைக்கு முகம் கொடுக்க நேரிடும் என கூறினார். 

எவ்வாறாயினும் வேட்பாளர் குறித்து கட்சி இதுவரை எவ்வித உத்தியோகபூர்வ முடிவையும் எடுக்கவில்லை என கூறினார். 

அமைச்சர் சஜித் பிரேமதாசவையே மக்கள் அதிகமாக விரும்புவதாகவும் இது தொடர்பில் குழு கூட்டத்திலும் கலந்துரையாடப்பட்டதாக கூறினார். 

மக்கள் கேட்கும் தலைவரை கொடுக்க வேண்டியது கட்டாயம் எனவும், எவ்வாறாயினும் கட்சித் தலைவர் உள்ளிட்டவர்களோடு கலந்து பேசி தீர்மானிக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். 

அனைத்தும் சுபநேரத்தில் இடம்பெறும் எனவும் அந்த சுப நேரம் நாளை அல்லது நாளை மறுநாள் மலரும் எனவும் கூறினார். 

பதுளை மற்றும் மாத்தறையில் நடைபெற்ற கூட்டங்களில் கட்சியின் தவிசாளர் என்ற வகையில் ஏன் கலந்துக்கொள்ளவில்லை என ஊடகவியலாளர்கள் வினவினர். 

உத்தியோகப்பூர்வமாக வேட்பாளர் ஒருவர் தெரிவு செய்வதற்கு முன்னர் கூட்டங்கள் இப்படி இருந்தால் வேட்பாளர் தெரிவின் பின் எப்படி இருக்கும் எனவும் அமைச்சர் கூறினார். 

2 comments:

  1. நாட்டு மக்கள் கோரும் சஜித்தை நியமிக்காவிட்டால் UNPயில் மிஞ்சப்போவது எச்சங்கேளே

    ReplyDelete
  2. UNP யில் ரணில் மட்டுமே இறுதியில் மிஞ்சுவார்

    ReplyDelete

Powered by Blogger.