Header Ads



6 கத்தோலிக்க Mp க்கள், ஜனாதிபதிக்கு அனுப்பிவைத்துள்ள கடிதம்

ஏப்ரல் 21ஆம் திகதி நாட்டில் பல்வேறு இடங்களில் மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் இதுவரை எந்தவொரு சாதாரண விசாரணையும் இடம்பெறவில்லை. தற்போது இடம்பெறுகின்ற விசாரணைகளில் எநத நம்பிக்கையும் இல்லை. 

அதனால் பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் தேடிப்பார்க்க சுயாதீன ஆணைக்குழுவொன்றை அமைக்கவேண்டும் என எதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கும் கத்தோலிக்க பாராளுமன்ற உறுப்பினர்கள் 6பேர் கைச்சாத்திட்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு அனுப்பிவைத்துள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த கடிதத்தில் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ , நிமல் லான்சா , இந்திக்க அனுருத்த , அருந்திக்க பெர்ணான்டோ , சனத் நிஷாந்த பெரேரா , சுதர்ஷனி பெர்ணான்டோபுள்ளே ஆகியோர் கையொப்பமிட்டுள்ளனர்.

அவர்கள் ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, 

2019 ஏப்ரல் 21ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு தினத்தில் நடத்தப்பட்ட அடிப்படைவாத பயங்கரவாத மற்றும் மிளேச்சத்தனமான தாக்குதலுக்கு பொறுப்பு கூற வேண்டியவர்கள் யார் என்று இந்த தாக்குதல் நடத்தப்பட்டு 3 மாதங்கள் கடந்துள்ள போதும் இன்னும் தெரியவரவில்லை. இந்த தாக்குதலில் 300 பேர் வரையிலானோர் உயரிழந்துள்ளதுடன் 600 பேர் வரையில் காயமடைந்துள்ளனர். இதில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இன்னும் நியாயம் கிடைக்கவில்லை என்று அந்த குடும்பங்களினால் அரசாங்கத்தின் மீது குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன.

ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பாக எந்தவொரு நியாயமான விசாரணைகளும் முன்னெடுக்கப்படவில்லையெனவும் முன்னெடுக்கப்படும் விசாரணைகளின் மீது நம்பிக்கை கொள்ள முடியாது எனவும் சமூகத்தில் நிலைப்பாடுகள் இருக்கின்றன. பேராயர் மெல்கம் ரஞ்சித்தும் இது தொடர்பான விசாரணைகள் தொடர்பாக திருப்தியடைய முடியாது என பல தடவைகள் கூறியுள்ளார். 

இதன்படி ஏப்ரல் 21 பயங்கரவாத தாக்குதல் தொடர்பாக சுயாதீன பக்கச்சார்பற்ற ஆணைக்குழுவொன்றை துரிதமாக அமைத்து அது தொடர்பான விசாரணை நடவடிக்கைகளை முன்னெடுத்து அந்த குழுவின் அறிக்கையை நாட்டின் முன் வெளியிடுமாறு கோரிக்கை விடுக்கின்றோம்.

1 comment:

  1. Correct.
    விசாரணைகளில் அரசியல்தலையீடுகள்-ஊழல்கள் காரணமாக முக்கிய அரசியல் புள்ளிகள் இருவரும் விடுவிக்கப்பட்டார்கள்.
    இதில் சம்பந்தமில்லாத ஏழை முஸ்லிம்கள் சிறையில் அடைக்க பட்டுள்ளார்கள்.

    ReplyDelete

Powered by Blogger.