Header Ads



நுஸ்கா என்ற ஆசிரியை...!


ஆசிரியை பாதிமா நுஸ்கா சம்பாதித்த மாணவர்கள் தமது அன்பின் ஆசிரியையின் ஜனாஸா தொழுகைக்காக ஒன்று திரண்டுள்ளனர்.

வெறும் 34 வயது 5 1/2 வருட ஆசிரியர் சேவை அமைதியான ஆளுமையால் அனைவரையும் ஏங்கி அழவைத்து பிரிந்து போனார்.

3 வருடங்கள் நோயின் பாதிப்பை சுமந்த கதை இன்று தான் தெரியும்.

சுகமா நுஸ்கா?

என்று வினவிய பொழுதெல்லாம் புன்னகையுடன் நல்லம் சேர் என்ற பதிலில் ஒரு சோகம் இழையோடி இருந்தது இப்போதுதான் புரிகிறது.

நோயின் பாதிப்பறியாது பொறுப்புக்களை சுமத்தியபோது செய்றன் என்று பொறுப்பேற்று நிறைவேற்றிய அர்ப்பணத்தை நினைத்து உள்ளம் வலிக்கிறது.

நேரசூசியில் பாடம் ஒதுக்கிய போது 34 பாடவேளைகள் முடியுமா என்று கேட்டபோது,  அதே பதில் செய்றன் சேர்.

ஆண் பிள்ளைகள் வகுப்புகள் அதிகம் பரவாயில்லையா என்ற போது அதே பதில், 

பரவாயில்ல சேர்.

கடைசியாக கடுமையான நோயோடு போராடும்போது சென்றவர்களிடம் வினவியதும், எனது நேரசூசிக்கு யாராவது போறாங்களா என்பதுதான்.

"ஆசிரியர் சேவைக்கு ஓர் ஆதர்ஷம்"

எல்லாம் ஒரு கனவாக கலைந்து போனது.

நோன்பு விடுமுறைக்கு முன் ஒவ்வொரு நாளும் 30 கி.மீ பயணம் கஷ்டம் சேர் என்று, இடமாற்ற விண்ணப்பத்தை நீட்டிய போது, விடுமுறைக்குப்பின் பார்ப்போம் என்றபோது, சரி சேர் என்று நம்பிக்கையோடு சென்றவர்...

நிரந்தரமாவே பிரிந்து போன சோகம்.

பெற்றார் ஒருபுறம், கணவனும் 3 பிஞ்சுக்குழந்தைகளும் மறுபுறம், உறவுகள் பாடசாலைக் குடும்பம்,  எல்லாம் வடிந்தோடும் கண்ணீரோடு பிரார்தித்து கனத்த மனதோடு விடைகொடுத்தார்கள்.

انا لله وانا اليه راجعون

Mansoor Junaideen 05.07.2019

7 comments:

  1. ஊா், எந்த பாடசாலை அறிந்து கொள்ள முடியுமா?

    ReplyDelete
  2. இது என்ன அனுதாபச் செய்தியா? அப்படியானால் நுஸ்கா டீச்சர் எங் கே கற்பித்தார். அவர் குடும்பம் பற்றி கொஞ்ச மேனும் வாசகர்களுடன் பகிரக்கூடாதா? எல்லாவற்றுக்கும் மேலாம எமது அனுதாபத்தையும் அன்னாருடைய பாவத்தை மன்னித்து ஜன்னதுல் பிர்தவ்ஸில் சேர்க்குமாறு அல்லாஹ்தஆலாவிடம் பிரார்த்தனை செய்கின்றோம்.தாயின் பிரிவைத் தவிர்ந்து தவிக்கும் குழந்தைகளுக்கும் கணவர், பெற்றோர்,குடும்பத்தினருக்கும் அல்லாஹ் பொறுமையைும் நற்கூலியையும் வழங்குவானாக.

    ReplyDelete
  3. What are you thinking you are writing? Why you forget to mention the reason of this Teacher?

    ReplyDelete
  4. What are you thinking you are writing? Why you forget to mention the reason of the death of this Teacher?

    ReplyDelete
  5. இந்த ஆசிரியையின்
    முழு விபரங்களையும் வெளியிடுங்கள். நுஸ்கா என்ற ஆசிரியைப்பற்றி எழுதியுங்கள். மேலதிக தககவல்களையும் வெளி யிடுங்கள்

    ReplyDelete
  6. Al Gazzaly Central College, Atlugama, Banadaragama...
    As I received & as i Know few.

    ReplyDelete

Powered by Blogger.