Header Ads



எனது இறுதி மூச்சு உள்ளவரை...!

கல்முனை  பிரதேச செயலக பிரிவில் வசிக்கும் சமூர்த்தி பயனாளிகளுக்கு  உரித்து பத்திரம் வழங்கும் நிகழ்வு இன்று (06) மாலை சாய்ந்தமருது தனியார் மண்டபத்தில் இடம்பெற்றது.

இதில் கெளரவ அதிதியாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் பிரதி தலைவரும், முன்னாள் இராஜாங்க அமைச்சருமான, பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் இதில் கலந்து கொண்டு உரையாற்றுகையில்.

 இந்த நாட்டில்  சமூகம் எதிர்கொள்ளும் நடவடிக்கை சம்பந்தமாக நாங்கள் எல்லோரும் கவலைப்பட்டு வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். ஓர் பயங்கரவாத குழு செய்த நடவடிக்கையினால் இன்று ஒட்டு  மொத்த முஸ்லிம் சமுகமும் பல இன்னல்களை அனுபபித்து வருகின்றது.

அரச நிறுவனங்களில் கடமையாற்றும் எமது  பெண்களுக்கு ஹபாயா ,அணிய முடியாது என்ற பல கஸ்டமான நிலை தோன்றியது பிரச்சினை ஏற்ப்பட்டது இதை மாற்றியமைக்க எமது பாரளுமன்ற உறுப்பினர்கள் இந்த எமது உரிமையை பெற்றுக்கொள்ள போராடியதன் விளைவாக அந்த தடையை நீக்கி அதற்கான வழிமுறைகள் செய்யப்பட்டுள்ளது.

ஏப்ரல் இடம்பெற்ற குண்டுத்தாக்குதலின் பின் நாட்டில் பல அசம்பாவிதங்கள் இடம்பெற்றது.

கண்டி நகரில்   அமைச்சர் றிசாத் அவர்களையும் முஸ்லிம் ஆளுன்ர்க்ளையும் குறிவைத்து அத்துரலிய தேரர் இருந்த உண்ணாவிரதம் மூன்று நாட்கள் கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருந்தது .இதன் விளைவாக இந்த நாட்டில் உள்ள முஸ்லிம் சமூகத்தை பாதுகாக்க  வேண்டுமென்றால் முஸ்லிம் அமைச்சர்கள்  தங்களது பதவிகளை இராஜினாமா செய்து எமது சமூகத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்தியாக வேண்டுமென்பதற்க் காய் இந்த கல்முனை தொகுதி அமைச்சர் என்ற வகையில் ஏனைய எமது அமைச்சர்களுக்கு அழைப்பு விடுத்தேன் .இந்த  சூழ்நிலையை நாங்கள் கையாளுவோமென்று அன்று  இராஜினாமா செய்ததன் விளைவாக நாட்டில் அமைதி ஏற்ப்பட்டது.

முஸ்லிம் சமூகம் எதிர்நோக்கும் பிரச்சினைகளை இன்று அரசாங்கம் தீர்த்து தர முன்வருகின்றது.
எதிர்வரும் நாட்களில் ஜனாதிபதி தேர்தலை எதிர் நோக்கவிருக்கிறோம்.  மேலும் இப் பிரதேச இருப்பு சம்பந்தமாக மிகப்பெரிய சவால் வந்துள்ளது 

எம்.எஸ். காரியப்பர், எம்.சி. அஹமத், ஏ.ஆர்.எம். மன்சூர், எம்.எச்.எம். அஷ்ரப், போன்றோர்கள் கல்முனை நகரை உருவாக்க  பல காரியாலயங்கள் பஸார் என கிழக்கு மாகாணத்தில்   ஓர் சிறந்த நகரத்தை  கட்டியேழுப்பினார்கள். இதனை சீர்குலைக்க  இன்று சிலர் முயற்சிக்கின்றனர்.

இறுதி மூச்சு உள்ளவரை எங்களது முஸ்லிம் சமூகம் சம்பந்தமாகவும் இந்த கல்முனை விடயம் தொடர்பாகவும்  ஓர் நியாயமான தீர்வு கிடைக்க வேண்டும் என்பதில் மிகவும் உறுதியாகவுள்ளேன் என்றார் .

மேலும் இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக அம்பாறை மாவட்ட அபிவிருத்திக்குழு இணைத்தலைவரும் ஆரம்ப கைத்தொழில் மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சருமான தயா கமகே அவர்கள் கலந்து கொண்டார்.  கல்முனை பிரதேச செயலாளர்  எம்.எம்.நஸீர், கல்முனை தொகுதி ஐ.தே. க. அமைப்பாளர் சட்டத்தரணி எம்.எஸ்.எம்.ரஸாக், கல்முனை மாநகர சபை உறுப்பினர்கள், சமூர்த்தி திணைக்கள உயரதிகாரிகள், சமூர்த்தி பயனாளிகள் என பலரும் கலந்து கொண்டனர்.

2 comments:

  1. முஸ்லிம் அரசியல்வாதிகள் மட்டும் இப்படி காமேடி பீஷுகளா, இல்லாவிட்டால் முழு முஸ்லிம் சமூகமும் இப்படி தானா?

    பிக்குகள் உண்ணாவிரதமிருந்து, பதவி விலாகாவிட்டால், முஸ்லிம்களுக்கு அடிப்போம் என்றால், இதை கட்டுப்படுத்த வேண்டியது யார்?
    அரசாங்கம். இதற்கு அரசு தான் 100% பொறுப்பு. பிக்குகள்/சிங்களவர்கள இல்லை.

    இப்படியான அரசாங்கத்திற்கு ஏன் இப்போதும் சகல 21 முஸ்லிம் MPகளும் ஆதரவு வழங்குகிறார்கள்??



    ReplyDelete
  2. உங்கள் மூச்சு இருக்கும் போதே உங்கள் ஆசீர்வாதத்துடன் கல்முனை வடக்கு செயலகம் தனியாக மலரும். சற்று பொறுத்திருப்போம்.

    ReplyDelete

Powered by Blogger.