Header Ads



`என்னிடம் இந்தக் கேள்வி, கேட்பீர்கள் என நினைக்கவில்லை'


உலகக்கோப்பை முடிவுகள் பவுண்டரிகள் மட்டும்தான் கிரிக்கெட்டா... என்ற கேள்வியை ரசிகர்கள் மனதில் ஏற்படுத்திவிட்டது.

உலகக்கோப்பை தொடர் இப்படி முடிந்திருக்கக் கூடாது என்பதே ரசிகர்கள் எண்ணமாக இருக்கிறது. இங்கிலாந்து - நியூசிலாந்து அணிகள் வெற்றிக்காக இறுதிப் போட்டியில் கடுமையாகப் போராடினார். போட்டி `டை’ ஆனதும் சூப்பர் ஓவர் அறிவிக்கப்பட்டது. சூப்பர் ஓவரும் `டை’யில் முடிந்ததால் பவுண்டரிகளின் எண்ணிக்கையின் அடிப்படையில் இங்கிலாந்து வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது. அப்படியென்றால் பவுண்டரிகள் மட்டும்தான் கிரிக்கெட்டா... என்ற கேள்வி ரசிகர்கள் மனதில் எழத் தொடங்கிவிட்டது.

இந்திய அணியின் முன்னாள் தொடக்க வீரர் கௌதம் கம்பீர், ``என்னால் இதைப் புரிந்துகொள்ள முடியவில்லை. உலகக் கோப்பை இறுதிப் போட்டியானது பவுண்டரிகளின் எண்ணிக்கையில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இது மிக அபத்தமாக இருக்கிறது. இது டையாகவே இருந்திருக்கலாம். இரு அணிகளுக்கும் வாழ்த்துகள். இருவருமே வெற்றியாளர்கள்தான்” என்றார்.

`இறுதியில் பவுண்டரிதான் இரு அணிகளுக்குமான வித்தியாசம். வாழ்த்துகள் இங்கிலாந்து. ஆனாலும், இதயம் நியூசிலாந்து அணியிடம்தான் செல்கிறது. இதிலிருந்து வெளிவர அதிக காலம் எடுக்கும்' என யுவராஜ் பேசியிருந்தார்.

இதுகுறித்துப் பேசியுள்ள மோர்கன், ``நீங்கள் ஒரு ஆப்ஷன் எனக்குக் கொடுத்தால் இரண்டையும் என்னால் ஒப்பீடு செய்து பார்க்கமுடியும். ஆனால், இந்த நேரத்தில் வேறொன்றைப் பற்றி என்னால் சிந்திக்க முடியாது. விதிகள் என்பது முன்பே வரையறுக்கப்பட்டவை. விதிகளை நாங்கள் கட்டுப்படுத்த முடியாது'' என்றார்.

விதிகள் குறித்து வில்லியம்ஸனிடம் கேட்டபோது, ``இந்தக் கேள்வியைக் கேட்க வேண்டும் என்று நீங்கள் ஒருபோதும் நினைத்ததில்லை, அதற்கு நான் பதிலளிக்க வேண்டும் என்று நானும் ஒருபோதும் நினைத்ததில்லை. இரு அணிகளும் கடுமையாக உழைத்தோம். இதை ஜீரணிப்பது சற்று கடுமையானது. விதிகள் தொடக்கத்தில் இருந்தே உள்ளன. இப்படி நடக்கும் என யாரும் நினைத்ததில்லை. கிரிக்கெட் ஒரு சிறந்த விளையாட்டு'' என முடித்துக்கொண்டார்.

1 comment:

Powered by Blogger.