July 26, 2019

பலோப்பியன் குழாய் நிபுணராக ரதன தேரர் மாறியுள்ளார், அப்பாவிகளை விடுதலை செய்யாதவர் மீது இடி விழும்

இஸ்லாமியர்களுக்கான சட்டமான ஷரியா சட்டத்தில் மாற்றங்களை செய்ய எவருக்கும் இடமளிக்க போவதில்லை என மேல் மாகாண முன்னாள் ஆளுநர் அசாத் சாலி தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார். மேலும் கூறுகையில், ஷரியா சட்டம் குறித்து புரிந்து கொள்ள வேண்டும்.

அதனை தவறாக புரிந்து கொள்ளக் கூடாது. அந்த சட்டம் என்பது முஸ்லிம் மக்களுக்குரிய சட்டம். அதனை வேறு இனத்தவர்களுக்கு அமுல்படுத்துவதில்லை. அந்த சட்டம், வேறு எவரையும் பாதிக்காது.

அந்த சட்டத்தை நாங்கள் பின்பற்ற வேண்டுமே அன்றி, அரசாங்கமோ, அமைச்சர்களோ பின்பற்ற வேண்டிய சட்டமல்ல.

இதனால், ஷரியா சட்டத்தில் கைவைக்க நாங்கள் இடமளிக்க மாட்டோம். மருத்துவர் சேகு சிஹாப்தீன் மொஹமட் ஷாபிக்கு எதிராக குருணாகல் நகரசபை ஊழியர்களை பயன்படுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர்.

அத்துடன் பெண்களின் கர்ப்பப்பையின் பலோப்பியன் குழாய் தொடர்பான நிபுணராக நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரதன தேரர் மாறியுள்ளார்.

பலோப்பியன் குழாய் எப்படி முறுக்கப்பட்டது என்பதை அவர் அறிவார். அத்துடன் விமல் வீரவங்ச பலோப்பியன் சம்பந்தமான விடயத்தில் பி.எச்.டி பட்டம் பெற்றுள்ளார்.

மிகப் பெரிய பண்டிதரான உதய கம்மன்பில, மருத்துவர் ஷாபியை தூக்கிலிட்டு கொல்ல வேண்டும் என்கிறார்.

என்ன செய்ய வேண்டும் என்பதை நீதிமன்றம் தீர்மானிக்கும் முன்னர், அனைவரும் அதனை தீர்மானித்து விட்டனர்.

இதனால், நீதிமன்றத்தினால் வழக்கொன்றை நடத்தி செல்ல முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது. அரசாங்கம் அப்பாவி மக்களை கடந்த மூன்று மாதங்களாக தடுத்து வைத்துள்ளது.

அவர்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர்களை விடுதலை செய்ய முடியாதவர்கள் மீது இடி விழும். அத்துரலியே ரதன தேரரை ஏன் கைது செய்ய முடியாது.

அவர் வரலாறு முழுவதும் அரசாங்கங்களுக்கு தவறு செய்துள்ளார் எனவும் அசாத் சாலி குறிப்பிட்டுள்ளார்.

3 கருத்துரைகள்:

எவரொருவர் அநீதியான முறையில் நடக்கின்றாரோ அவருக்கு இறைவனின் சாபக்கேடு (தண்டனை) என்றும் நிலையாக இருக்கும். அவர் ஒரு “பத்திரிகையாளராக” இருந்தாலும் சரியே. இறைவனின் தண்டனை இலேசுப்பட்டதல்ல. இறைவனின் தண்டனை இறங்கி விட்டால் வேண்டுமென்றே குற்றம் சாட்டுபவர் மற்றும் அதற்கு துணை போகின்றவர்கள் நியாயமற்ற வகையில் சோடிப்பவர்கள் இத்தகையவர்களின் இறைவனால் ஏற்கனவே நிச்சயிக்கப்பட்ட “இறப்பு தினம்” (Death date) அத் தினத்திலிருந்து மற்றவரகள் படிப்பினைபெறும் பொருட்டு மேலும் மேலும் அதிகரிக்கப்படும் என்பதனை தங்களது மதகுருமார்களை அணுகி அறிந்து கொள்வதன்மூலம் தம்மைத் திருத்திக் கொள்ளலாம். இறைவனின் “சோதனை நோயின்” அகோரத்தினால் கஷ்டமுறுவதைக் காட்டிலும் “இறைவா! ஏனக்கு இறப்பை உடன் தந்துவிடு” எனக் கதறி அழுதாலும் இறப்பு அத்தகையோருக்கு மிக இலகுவில் வந்து சேர்ந்துவிடமாட்டாது. அத்தகையோர் உலகில் மற்றவர்கள் படிப்பினை பெறும் வரை அழுந்தி அழுந்தியே சாவர். இந்நிகழ்வு எம்முன் சரவசாதாரணமாக நடைபெறும் ஒரு இலகு காட்சியாகும்.

எமது மருத்துவர் சாமி,9 மாண்பு மிக்க அமைச்சர்கள் எல்லோரையும் வடிகட்டப்பட்ட தூய அரசியல்வாதிகள் என முத்திரை பதிக்க உதவியது ரத்ன தேரரின் உண்ணாவிரதம்.

College of obstetricians and ghyneacologist of Sri Lanka better endrol rathna thero as a senior advisor for the VOG s and professors. Bocoz those racist VOG s and professors were silent when he was expressing unscientific opinions regarding cesarian section and fallopian tubes.

Post a comment