Header Ads



முஸ்லிம்கள் அடிப்படிவாத, பக்கம் தள்ளபடுகின்றனர் - தயாசிறி எச்சரிக்கை


ஈஸ்டர் தாக்குதல் அன்று முக்கிய ஹோட்டல்களில் குண்டு வெடித்த போதும் தாஜ் சமுத்திரா ஹோட்டலில் மாத்திரம் ஏன் குண்டு வெடிக்கவில்லை. அப்படியென்றால் தாஜ் சமுத்திரா ஹோட்டலில் இருந்தவர்கள் யார் ? இது பாரிய சந்தேகமாக உள்ளது என பாராளுமன்ற தெரிவுக்குழு முன்னிலையில் சாட்சியமளிக்க வரவழைக்கப்பட்ட ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜெயசேகர எம்.பி தெரிவித்தார். 

சஹ்ரானை யாரோ சிலர் இயக்கியுள்ளனர். இவர்கள் ஐ.எஸ் சார்ந்தவர்கள் அல்ல எனவும் சர்வதேச சக்திகளின் தலையீடுகள் இருந்துள்ளது என்ற சந்தேகம் உள்ளதாகவும் அவர் கூறினார். 

ஈஸ்டர் தாக்குதல் குறித்து விசாரணை நடத்த நியமிக்கப்பட்டுள்ள பாராளுமன்ற தெரிவுக்குழு முன்னிலையில் சாட்சியமளிக்க வரவழைக்கப்பட்டிருந்த ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச்செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான தயாசிறி ஜெயசேகரவிடம் நடத்தப்பட்ட விசாரணையின் போது வாக்குமூலம் வழங்கியபோது அவர் இதனைக் குறிப்பிட்டார்.

கேள்வி:- தாஜ்சமுச்திரா விடயம் மற்றும் நீங்கள் கூறிய காரணிகளை கூற முடியாதா?

பதில்;- முடியாது 

கேள்வி:- சர்வதேச நாடுகளின் தொடர்பு குறித்தும் தெளிவான பதில் ஒன்று கூற முடியாது?

பதில் :- முடியாது. 

கேள்வி:- நீங்கள் அன்று கூறினீர்கள் தெளிவாக கூற முடியும் என. இப்போது தெளிவாக கூற முடியாது என கூறுகின்றீர்கள்? 

பதில்;- இவர்தான் என தெளிவாக கூற முடியாது. யாரையும் என்னால் கூற முடியாது. எனக்கு தகவல் பல வருகின்றது. ஆனால் ஆதாரம் இல்லாது எதனையும் கூற முடியாது என்றே நான் கூறுகின்றேன்.  நான் கூறிய முழுமையான விடயங்களை கேட்டுவிட்டு பின்னர் கேள்வி கேட்ட வேண்டும். நான் கூறிய காரணிகளை முழுமையாக கேட்காது ஒரு காரணிகளை வைத்துகொண்டு ஊடகங்களில் வெளிவந்துள்ளது. 

கேள்வி :நீங்கள் இருவரின் பெயரை கூறியுள்ளீரகள்.ஏன் இருவர் என கூறினீர்கள்?

பதில்:- யார் இருவர்

கேள்வி:- இல்லை இருவர் குறித்து அவ்வப்போபோது கூறினீர்கள்?

பதில்:-  இல்லை நான் இருவர் குறித்து கூறவில்லை. அந்த தாக்குதலின் பின்னை குறித்தும் ஏன் தாஜ் சமுத்திரா ஹோட்டலில் குண்டு வெடிக்கவில்லை என்றுதான் கூறினேன். யார் யார் என என்னால் கூற முடியாது நாம் பெயர் விபரங்களை கூற முடியாது ஹோட்டல் விபரஙக்ளை பெறும் போது அது குறித்த தகவல்கலை உரிய  அதிகாரிகளிடம் பெறமுடியும். உங்களுக்கு விசாரணைக்கு அது தேவை எனில் அதனை பெற்றுக்கொள்ளுங்கள்.

கேள்வி:- வெளிநாட்டு சக்தி என இந்த விடயத்தில் கூறினீர்கள். அவ்வாறான  நிலை உள்ளதா

பதில்:- அப்படி நான் கூறவிலை, இன்று வெளிநாட்டு சக்திகள் இந்த நாட்டில் இயங்கும் செயற்பாடுகள் குறித்தே நான் கூறினேன். இப்போது என்னால் இது குறித்து என்னால் ஒன்றும் கூற முடியாது. பின்னர் என்னை மீண்டும் குற்றப் புலனாய்வு பிரிவில் விசாரிப்பார்கள். அது பரவாயில்லை. 

கேள்வி:- குருநாகல்  கைதில் தங்களால் ஒருவர் விடுவிக்கப்பட்ட  விடயம் என்ன?  

பதில்:-  அன்று எனது பகுதியில் சில கடைகள் தாக்கப்பட்டது. பலர் ஒன்றுகூடி இருந்தனச்ர். அங்கு நாமல் குமார என்ற நபரும் இருந்தார். அவர் என்னமோ திட்டம் தீட்டுகின்றார் என தெரிந்துகொண்டேன். நான் யாரையும் விடுவிக்க வில்லை. முன்னரேயே அவர்கலை விடுவிக்க முடிவுகல் எடுக்கப்பட்டது. 

இதன் பின்னர் மே 12 இல் குளியாப்பிடியவில் தாக்குதல் நடந்தது. அதன் பின்னர் பலர் கைது செய்யப்பட்டிருன்ர்தனர்.  அன்றிரவு பள்ளி வாசலும் தாக்கப்பட்டது.   நான் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியிடம் கதைத்தேன். நான் தலையிடாவிடில் பொலிஸ் நிலையம் மீது தாக்குதல் நடத்தப்பட்டிருக்கும். அதனை தாக்க முயற்சித்தார்கள். அதன் பின்னர் நான் எனது வாகனத்தை இங்கிரிய பொலிஸ் நிலையத்தில் இருந்து எடுத்து விடுதலையானவர்கலை பாதுகாப்பாக கொண்டு சென்றேன். . மக்கள் தாக்குதலை நடத்துவார்கள் என அச்சம் ஏற்பட்டது. நான் அன்று மதிய உணவை உண்டபோது தமது கடைகள் மீது தாக்குதல் நடத்துவதாக இருவர் கூரிறினார். அங்கு சென்ற போது என் மீதும் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. அங்கு இரு கடைகளை தீ வைப்ப்திலிருந்து தடுத்தேன். இது தான் நடந்தது. கடைகளை தாக்கும் வரை நான் காத்திருக்கவில்லை. இவ்வாறே நானும் வாக்கு மூலம் கொடுத்தேன். சிங்கள முஸ்லீம் கலவரத்தை தடுக்க நான் முயர்சித்தேன்..தாக்குதலின்  3 கிழமைக்கு பின்னர். தான்  நடந்த்து. முஸ்லீம் கிராமங்களை சோதனை செய்யுமாறு கோரினேன். 21 தாக்குதலின் பின்னர். சிங்கள கிராமங்களில் வாழும் மக்கள் தூங்காத நிலை இருந்தது. இந்த நிலை காரணமாக பொலிசார் சோதனைகளை மேற்கொள்ளவில்லை. சில பகுதிகளில் பிரச்சனைகள் ஏற்படவில்லை.  இன்னொரு விடயத்துக்காக நாம் இந்த கேள்வியினை முன்வைக்கின்றேன். இந்த தாக்குதலில் மூன்று வாரங்களுக்கு பின்னர் இந்த தாக்குதலை தடுக்கும் நோக்குடனேயே இந்த விசாரனைகளை நடத்துகின்றோம். முஸ்லீம் மக்கள் தொடர்பாக பல அச்சம் கானப்பட்டது. ஆயுதங்கள் காணப்பட்டது மீட்கப்பட்டது. இந்த பின்னணியில் சில பிரசாரங்கள் மேற்கொள்ளப்பட்டன.. முஸ்லீம்கள் மத்தியில்  பயங்கரவாதிகள் இருப்பதாக கூறப்படுகிறது. தாக்குதலாளிகள் எவ்வாறு வந்தார்கள் என தெரியாது.

கேள்வி:-  நீங்கள் ஒரு முக்கிய கட்சியின் பிரமுகர் கடந்த ஞாயிறு கண்டி கூட்டம் ஒன்றில் இந்த நாடு சிங்கல நாடு என கூறப்பட்டது. இரு வர்ணம் அகற்றப்பட்ட  கொடி கொண்டுவரப்பட்டது இது குறித்த தங்கலின் நிலைப்பாடு என்ன?.

பதில்:- : தமிழ் தரப்பினர் தமது தலைவர் பிரபாகரன் என கூறுகின்றனர். சிங்கள அடிப்படை வாதிகள் சிங்கள  தரப்பு வாதங்களை முன்வைக்கின்றனர். இவ்வாறான விடயங்களால் மக்கள் அடிப்படை வாதங்கலுக்கு உட்படுத்தப்பட்டார்கள். அவர்களை கட்டுப்படுத்த முடியாத நிலை உள்ளது. இது சிங்கள நாடு என அந்த தரப்பினர் நினைக்கின்றனர்.  முஸ்லீம் அமைச்சர்கள் உறுப்பினர்கள் இணைந்து முஸ்லீம் அரசையும் தமிழர்கள்  இணைந்து தமிழ் அரசையும் அமைக்க முடியுமா. சிங்கள மக்கள் பாரிய பிரச்சனைகலை எதிர்கொள்கின்றனர். இந்த நிலையில் நாட்டை பாதுகாக்க இலங்கையர்கள்  என்ற வகையில் ஒன்றுபட வேண்டும். 

கேள்வி:- வெளிநாடு சக்திகளின் ஈடுபாடிருந்தால் இந்த விடயத்தில் அதனை உறுதிப்படுத்த முடியாத நிலை உள்ளது. ஜனாதிபதியை கொலை செய்வதற்கு வெளிநாடு சக்திகலின் சதி இருப்பதாக கூறப்பட்டது. இந்த இரண்டுக்கும் தொடர்பிருப்பதாக கூறமுடியுமா?

கேள்வி:- அவ்வாறு கூறமுடியாது. இது வேறு பிரச்சனை நான் அவ்வாறு கூற முற்படவில்லை. இந்த விடயம் தேசிய பாதுகாப்பு சம்பந்தமான பிரச்சனையாகும் 

கேள்வி:-  உயிர்த்த ஞாயிறு தாகுதலின் பின்னர் சகல பாதுகாப்பு கூட்டங்கலிலும் கலந்து கொண்டீர்கலா?

பதில் :- இல்லை

கேள்வி:- எப்போது கலந்துகொண்டீர்கள்?

பதில்:- தாக்குதல் ஆண்டு கூடிய கூட்டத்தில். 

கேள்வி:- அன்றா அடுத்த நாளா?

பதில்:- அடுத்த நாள். 

கேள்வி:- யார் உங்களை அழைத்தது?

பதில்:- ஜனாதிபதி

கேள்வி:-  தேசிய பாதுகாப்பு கூட்டங்களில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கலந்துகொள்ள கூடாது. எத்தனை எதிர்கட்சி எம்பிக்கள் அதில் பங்கேற்ரனர். 

பதில் :- இவர்கள் தான் இருக்க வேண்டும் என சட்டம் இல்லை. தனக்கு தேவையானவர்களை  ஜனாதிபதி அழைப்பார்.  அவருக்கு நபிகையுள்ள நபர்களை அவர் அழைத்தார் அதில் எம்மையும் அழைத்தார் என்றே நினைக்கிறன். 

கேள்வி:- பாதுகாப்பு குழுக் கூட்டங்களில்நினைக்கும் நபர்களை அழைக்க முடியாது. இது அரசாங்கம் மட்டுமே ஆராய வேண்டிய விடயம். எதிர்கட்சிக்கு இது செள்ளக்கொடது?

பதில்:- ன்காவது அவ்வாறு கூறப்பட்டுள்ளதா, ஏதாவது புத்தகத்தில் அது உள்ளதா, இருந்தால் கூறுங்கள் நான் ஏற்றுகொள்கிறேன். 

கேள்வி:- வர்த்தமானியில் உள்ளது. பின்னர் இது மாற்றப்பட்டது. ஆனால் அதிலும் ஆளும் கட்சியின் உறுப்பினர்களை தான் வரவழைக்க முடியும். எதிர்க்கட்சி உறுப்பினர்களை அழைக்க முடியாது? 

பதில்:- நாம் இன்று எதிர்கட்சியாக இருந்தாலும் ஜனாதிபதியுடன் உள்ளோம். ஆகவே நாம் ஜனாதிபதியுடன் பேசி தீர்மானம் எடுக்கின்றோம். ஆனால் பாதுகாப்பு கூட்டங்களின் காரணிகளை ஒருநாளும் நாம் அரசியலுக்காக பாவிக்கவில்லை. 

கேள்வி:- ஜனாதிபதிக்கு கட்சி உறுப்பினர்களுடன் பேச வேண்டும் என்றால் வேறு இடத்தில் பேச வேண்டும். ஜனாதிபதி இதனை தெரிந்துகொள்ள வேண்டும்?

பதில்;- ஜனாதிபதிக்கு நீங்கள் கற்பிக்க முடியாது. எங்காவது அப்படி இருந்தால் கூறுங்கள். 

கேள்வி;- பேரவை விடயங்களை அடிப்படையாக கொண்டு நீங்கள் சில விடயங்களை வெளிப்படுத்தினார்களா? 

பதில்: இல்லை நான் அதனை வெளிப்படுத்தவில்லை. 

கேள்வி:-  பேட்டியில் வழங்கிய தகவல்கள் அனைத்தும் நீங்கள் அறிந்த விடயஙக்ளாக இருக்கின்றனவா?

பதில் : ஆம் நான் அதனை அறிந்தே கூறினேன். 


1 comment:

  1. போக மாட்டேன் என வீர வசனம் பேசினார்,இப்போ எவ்வாறு போனார்.

    ReplyDelete

Powered by Blogger.