Header Ads



முஸ்லிம்களை அதிகமாக சீண்டுவது நானா நீயா என்ற போட்டி

யாரை நாய்க்கூட்டில் அடைப்போம் வாக்குப்போடுங்கள் என்று கூறி, பொய்யாலும், துரோகத்தாலும், சிறுபான்மை மக்களை ஏமாற்றி வாக்குப்பிச்சை எடுத்து ஆட்சிக்கு வந்த பெட்டைகளின் அரசாங்கத்தில், நாய்க்கூட்டில் இருக்கவேண்டிய அந்த தேரருக்கு பொதுமன்னிப்பும், செங்கம்பள வரவேற்பும்...

தன்னால் இனி முடியாத எனும்போது இன்னொருத்தரை காட்டி பெட்டைத்தனமாக ஆட்சிக்கு வந்த பிரதமருக்கு தான் சொல்லி வைத்தால்போல் தனது பெரும்பான்மை வாக்குகளை காவுகொள்ள, சிறுபான்மைக்கு எதிராக செயல்பட ஒரு அத்துரலிய தேராவும், அதுபோலவே சனாதிபதி என்ற பொம்மைக் காரருக்கு ஒரு ஞானசாராவும் நானா நீயா என்ற போட்டியில் சிறுபான்மையை சீண்ட,

அதிகாரத்தில் உள்ளோர், அரசில் உள்ளோர், அது நாங்கள் இல்லை, மகிந்தவின் வேலை, எதிரனியின் வேலை, என்ற பதிலோடு படுக்கைக்குச் சென்றுவிடுகிறார்கள். நானும் ஏற்றுக்கொள்கிறேன், சிறுபான்மைக்கு எதிராக இயங்குவது, மற்றவர்களை இயக்குவது அனைத்துமே மகிந்த தரப்பின் செயல்தான், நெசம்தான், சரி.

அப்போ, 
உங்களை சனாதிபதியாக்கியதும், உங்களை பிரதராக்கியதும், அதிகாரத்தை உங்கள் கைகளில் தந்ததும் எதற்காக? அதிகாரத்தில் இருக்கும் உங்களால் கேவலம் பகிரங்கமாக சிறுபான்மைக்கு எதிராக கருத்துக்களை கக்கும் ஒரு இனவாத மதகுருவையே கட்டுப்படுத்த முடியவில்லை என்றால், இன்னுமின்னும் மகிந்த புராணம் பேசிக்கொண்டிருக்கத்தான் முடியும் என்றால் நீங்கள் பெட்டைகள் தானே.

இதோ நீங்கள் நாய்க்கூண்டில் அடைப்பேன் என்ற அந்த குற்றவாளி, உங்களது ஆட்சியில் ஓர் பகிரங்க மாநாட்டில் கதாநாயகனாக வீற்றிருக்கிறான். இதற்கும் உங்களுக்கும் சம்பந்தம் இல்லை என்று சொன்னால் அது எவ்வளவு அழகான கதை.

முஸ்லிம்களை அதிகமாக சீண்டுவது நானா நீயா என்ற போட்டியில் பிரதமர் தரப்பிலிருந்து அத்துரலியவும், சனாதிபதி தரப்பிலிருந்து ஞானமும், மகிந்த தரப்பிலிருந்து இன்னும் பலரும். இதில் ஆச்சரியத்திற்குரிய விடயம் என்னவென்றால் இந்த நாடகங்களில் நமது பிரதிநிதிகளும் அன்று தொடக்கம் கௌரவ பாத்திரமேற்று நடித்துக்கொண்டிருப்பது தான்.

இதோ இன்று அந்த நாய்க்கூண்டில் அடைப்பேன் என்று சொல்லப்பட்ட, நமது நாட்டு ஜனாதிபதியின் செல்லப்பிள்ளை, அதிகாரங்களால் சீண்ட முடியாத தலைமகன், ஆட்சிமாற்றத்தின் சிரேஷ்ட கதாநாயகன் ஞானம், கண்டியிலிருந்து, முஸ்லிம்களுக்கு எதிரான அதே கோசத்துடன்....

Ashraf AhamethFollow

4 comments:

  1. கடந்த மஹிந்த ஆட்சியில் Muslim களை மஹிந்தவுக்கு எதிராக திசை திருப்ப பாவிக்கப்பட்டவர்தான் ஜானாசாரா.ஆனால் கோத்தாபாய அவரை முழுமையாக நம்பி இறுதியில் ஏமாந்து போனார்.அப்போதுதான் கோத்தாவுக்கு புரிந்தது ஜானா நம்மை முட்டாலாக்கி விட்டது.ஆனால் மஹிந்த செய்த தவறு கோத்தா ஜானாசாராவுக்கு கொடுத்த பெரும் ஆதரவை தடுத்து நிறுத்தவில்லை.ஆனால் மஹிந்தவின் ஆட்சி காலத்தில் நடந்ததோ ஒரே ஒரு கலவரம்.ஆனால் நாம் கொஞ்ஞம் சிந்தித்து இருந்தால்,my3 and ரனில் ஆட்சியில் கடந்த 3 வருடங்களாக எத்தனயோ வன்முறை சம்பவங்கள் இடம் பெற்ரிருக்காது.ஆனால் யாரை நல்லவர்கள் என ஆட்சிக்கு கொண்டு வந்தோமோ அவர்கள் இருவரும் வெறும் பொம்மைகள் கைகட்டி பார்துகொண்டிருக்கும் கோமாளிகள்.எனவே நல்லாட்சியில் Muslim கள் மிக அதிகமாக இனவாத தீக்குள் அகப்பட்டுல்லோம்.மஹிந்தவை நாம் தோற்கடித்தோம் ஆனால் அதை நிம்மதியாக,சந்தோசமாக அனுபவிப்பது தமிழர்கள்.ஆனால் எந்த நல்லாட்சி என இரண்டு பொம்மைகளை நாம் ஆட்சிக்கு கொண்டு வந்ததுதான் நாமே எமக்கு செய்து கொண்ட மிகப் பெரும் பாவம்.

    ReplyDelete
  2. சட்டம் கூட்டில் அடைத்த நாயை முஸ்லீம்கள் தேர்ந்தெடுத்த நாய் வெளியில் திறந்து விட்டது. கடைசியில் கேனயனானது முஸ்லிம்கள் தான்.

    ReplyDelete
  3. Unamayyay nambunkal nallathu nadakkum....em makkal muslimkalaaha wanlnthaal yaaridamum manraada awasiyam ethu????
    Nicchayam awanin paathuhaappu periythu....allah oruwan enpathu em makkalin unarwu...athay unamy paduttha naanayamaaha madanthaal perithu...m

    ReplyDelete

Powered by Blogger.