Header Ads



2015 இன் வலி, 2020 இலும் உணருவாரா மகிந்த...?

2020 ஜனாதிபதி தேர்தலுக்கான முஸ்தீபுகள் முடுக்கிவிடப்பட்ட நிலையில் இருமுனை தேர்தலா அல்லது மும்முனை தேர்தலா அல்லது பலமுனைத் தேர்தலா என்ற அங்கலாய்ப்புக்கள் தொடர்ந்த வண்ணம் உள்ளன.

சிறுபான்மை இனங்களின் தேவைப்பாடோ பங்குபற்றுதலோ இன்றி வெற்றி கொள்ள முடியும் எனும் மோடியின் சித்தாந்தம் சார் கடும்போக்கினை கடைப்பிடிக்கும் மகிந்த அணிக்கும், சிறுபான்மை ஒத்துழைப்பின்றி வெற்றிக் கோஷம் வெற்றுக் கோசமாகப் போகும் எனும் சிந்தனை சார் ரணில் அணிக்கும் மத்தியிலான இருமுனை தேர்தலாக நோக்குவதா?

அல்லது ஒட்டு மொத்த சிறுபான்மை மக்களின் வாக்குகளினாலும் அரியணையேறி நன்றிக்கடன் தீர்த்துவிட்டு, மீண்டும் நானும் அடுத்தமுறையும் அதிகாரக் கதிரையில் அமரவிருக்கின்றேன்; என்ற சேதியை சொல்லவும் மெல்லவும் முடியாமல் பரிதவித்து நிற்கும் மைத்திரி அணியும் சேர்ந்த மும்முனை போட்டியாக நோக்குவதா? எனும் புதிர் தொடர்கிறது.

2005, 2010 ஜனாதிபதி தேர்தல்களில் தான் வென்றிருந்தும் சிறுபான்மை மக்களை எந்த வழியிலும் கவரமுடியாதுபோய், இனி அவர்களை அச்சுறுத்தியேனும் வெற்றிபெறவேண்டும் எனும் பரீட்சாட்த முன்னெடுப்பு மகிந்த தரப்பினரால் முடிக்கிவிடப்பட்டதன் எதிரொலி 2015 ல் தனது கட்சியின் செயளாளர் மைத்திரியிடம் மகிந்த தோற்றுப்போன நிலையை தோற்றியிருந்தது.

அதிகாரக்கதிரையின் வெறி, மீண்டும் செயலாளரை செல்லப்பிள்ளையாக்கிக் கொண்டு ஒரு இனத்தின் மீது அத்தனை வன்மங்களை பிரயோகிப்பதற்கும் 19 வது திருத்தம் உடந்தையாய் போனது.

இலங்கையில் மகிந்த தூண்டிய இனவாதத்துக்கான பாமரமக்களின் ஆதரவுத்தளம் 2015 தேர்தலிலே 3% மாத்திரமே இருந்தது. ஆனால் மைத்திரி ஆட்சியில் மீண்டும் தூண்டப்பட்ட இனவாதம் பாமரர் மத்தியில் 10% இனையாவது எட்டியிருத்தல் வேண்டும்.

தமது அரசியல் வாழ்வில் மென்மைத் தன்மையை கடைப்பிடித்த பாராளுமன்ற உறுப்பினர்களையெல்லாம் வன்மைதன்மையை வெளிக்காட்டத் தூண்டியது மகிந்தவின் அதிகார ஆசையே.

ஆனால் கண்டியிலே நேற்றைய பொதுபலசேனா கூட்டம் ஆளணியில்லாது தோல்வியுற்றது மாத்திரமன்றி முஸ்லிம் அமைச்சர்கள் ஆளுனர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள், டொக்டர் ஷாபி மீதான வன்மம் அத்தனையும் கட்டவிழ்க்கப்பட்ட பொய்புழுகு மூட்டைகள் என்பதனை பெரும்பான்மை சமூகம் அடையாளம் கண்டு கொண்டது.

இந்த நிலையில் இனவாதக் கருத்துக்களுக்கு கல்வியறிவு படைத்த பெரும்பான்மை சமூகத்தின் மத்தியில் ஆதரவுத்தளம் இருக்குமா ? என்பது கேள்விக்குறியே!

இவை அத்தனையையும் வைத்து நோக்கும் போது இனவாதத்தினை ஆயுதமாக எடுத்துக்கொண்ட மகிந்த தரப்பு மீண்ணும் ஒரு முறை தோற்கடிக்கப்படல் வேண்டும்.

2015 தேர்தலின் வலியை 2020 ல் மீண்டும் ஒரு முறை மகிந்தர் உணர வேண்டும். ஒட்டு மொத்த இலங்கையில் அரைவாசிக்கு அதிகமானோர் இனவாதத்துக்கு எதிரானவர்கள், சீச்சி இந்தப் பழம் புளிக்கும் நாமும் ஜனநாயக வழிக்குத் திரும்பி மக்கள் மனங்களை வென்று அதிகாரபீடம் ஏறவேண்டும்; என்ற சேதியை உறைக்க உரைக்கும் தேர்தலாக எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் சிறுபான்மையினரால் பயன்படுத்தப்படல் வேண்டும்.



ஷிபான் BM

3 comments:

  1. மஹிந்த இனவாதத்தினை தூண்டினாலும்,அனத்து அதிகாரங்களும் இருப்பது கடந்த 4 வருடங்களாக ஜனாதிபதி மற்றும் பிரதமரின் கைகளில்,ஆனால் அவர்கள் இருவரும் கைகட்டி பாத்திருக்கும் ஒரு வகையான யுக்தியை கையாலுகின்ரனர்.ஆக நீங்கள் சொல்வது போல் இனவாதத்தை தூண்டும் எதிர்க்கட்சியை விட அந்த இனவாதத்தை கைகட்டி பார்த்துக் கொண்டிருக்கும் இருவரும் மிக ஆபத்தானவர்கல்.ஆதனால்தான் மஹிந்த ஆட்சியை விட நல்லாட்சியில் அதிகமான கலவரங்கலையும்,இழப்புக்களையும் சந்தித்தோம்.

    ReplyDelete
  2. Whatsoever Mahinda team is not a solution????

    ReplyDelete
  3. then what is the solution

    ReplyDelete

Powered by Blogger.