Header Ads



உலக அமைதி தரவரிசையில், இலங்கைக்கு பின்னடைவு - முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறையும் காரணம்

அமெரிக்காவின் பொருளாதார மற்றும் அமைதி தொடர்பான நிறுவனம் வருடாந்தம் மேற்கொள்ளும் மதிப்பீட்டு தரவரிசைப் பட்டியலில், இந்த வருடம் இலங்கை 72 ஆவது இடத்தில் உள்ளது.

கடந்த 2018 ஆம் ஆண்டில், 67 ஆவது இடத்தில் இருந்த இலங்கை, இந்த வருடம் (2019) 72 ஆவது இடத்துக்கு பின்தள்ளப்பட்டுள்ளது.

உலகில் உள்ள 163 நாடுகளுக்கிடையில் குறித்த மதிப்பீட்டுப் பணி மேற்கொள்ளப்படுகிறது. தென்னாசிய நாடுகளில் அமைதியான நாடாக நேபாளம் முன்னணியில் உள்ளது.  இதற்கமைய, தரவரிசையில் நேபாளம் 15 ஆவது இடத்தில் உள்ளமை  குறிப்பிடத்தக்கது.

அத்துடன், உலகில் அமைதி நாடு என்ற வகையில், ஐஸ்லாந்து உலக நாடுகள் மத்தியில் முதலிடத்தை வகிக்கும் அதேவேளை, உலகில் அமைதியற்ற நாடாக ஆப்கானிஸ்தான் இடம் பிடித்துள்ளது. இதற்கமைய, ஆப்கானிஸ்தான் 163 ஆவது இடத்தில் உள்ளது.

கடந்த வருடம் (2018) அமைதியற்ற நாடு என்ற வகையில் சிரியா 163 ஆவது இடத்தில் இருந்ததுடன், இந்த வருடம் ஒரு இடம் முன்னேறி 162 ஆவது இடத்தை பிடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த வருடத்தில் இலங்கையில் பல பகுதிகளில் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகள் நடத்தப்பட்டமை இங்கு கவனிக்கத்தக்கது.

No comments

Powered by Blogger.