Header Ads



தற்கொலை குண்டுதாரியின் சடலத்தை, புதைக்க முடியாமல் திண்டாடும் பொலிஸார்


மட்டக்களப்பு, சீயோன் தேவாலயத்தில தற்கொலை குண்டு தாக்குதல் மேற்கொண்ட தற்கொலையாளி முகமது நாசார் முகமது ஆசாத்தின் சடலத்தை தமது பிரதேசங்களில் புதைக்க மக்கள் எதிர்ப்பு தெரிவிப்பதன் காரணமாக சடலத்துடன் மட்டக்களப்பு பொலிஸார் திக்கு முக்காடுவதாக தெரிவிக்கப்படுகின்றது. 

கடந்த 21 ஆம் திகதி இடம்பெற்ற தற்கொலை குண்டு தாக்குதலை மேற்கொண்ட காத்தான்குடியைச் சேர்ந்த முகமது நாசார் முகமது ஆசாத்தின் தலை மற்றும் உடற்பாகங்கள் மரபணு பருசோதனையில் அவருடையது என உறுதிப்படுத்தப்பட்டது. 

இந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை 7 ஆம் திகதி மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் சடலத்தை அரச செலவில் அடக்கம் செய்யுமாறு அரசாங்க அதிபருக்கு கட்டளை பிறப்பித்திருந்தார். 

இதனை அடுத்து பொலிஸார் சடலத்தை மட்டு. விமான நிலையப் பகுதில் உள்ள புதூர், ஆலையடி இந்து - கிறிஸ்தவ மயானப் பகுதியில் செவ்வாய்க்கிழமை அடக்கம் செய்ய முற்பட்டதை அடுத்து அங்கு பிரதேச மக்கள் எதிர்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் செய்தனர். 

இதனை அடுத்து பொலிஸார் சடலத்தை புதன்கிழமை (12) காத்தான்குடி பஸ் டிப்போக்கு அருகிலுள்ள முஸ்லிம் மயானத்தில் அடக்கம் செய்ய முற்பட்டட போது அப்பிரதேச மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வீதியை மூடினர். 

இந்நிலையில் பொலிஸார் நேற்று (13) மட்டக்களப்பு பொலநறுவை எல்லைப் பகுதியான ரிதிதென்னை இராணுவ முகாமிற்கு அருகில் வனபரிபாலன திணைக்களத்துக்கு சொந்தமான காட்டுப் பகுதியில் சடலத்தை புதைப்பதாக இருந்த நிலையில், அங்கும் மக்களின் எதிர்ப்பு காரணமாக சடலம் மட்டு. போதனா வைத்தியசாலை பிரேத அறையில் கொண்டு செல்ப்பட்டு தற்போது வைக்கப்பட்டுள்ளது. 

(நிருபர் சரவணன்)

1 comment:

  1. பயங்கரவாதி பிரபாகரன் எந்த இடத்தில் புதைக்கப்பட்டனோ அந்த இடம் சிறப்பாகயிருக்கும். பயங்கரவாதிகளை கண்டு சமூகம் விழிப்படையும்

    ReplyDelete

Powered by Blogger.