June 27, 2019

இனவாதத்தை சாறாக, பிழிந்த ஆசு - ஹிஸ்புல்லா கொடுத்த பதிலடி

நேற்றைய -26- ரூபவாஹினியின் 99 நிகழ்ச்சியில் மட்டக்களப்பு பல்கலைக்கழகம் சம்மந்தமான பகிரங்க விவாதத்துக்கு முன்னாள் கிழக்கு மாகாண ஆளுனர் ஹிஸ்புல்லாவும், ஐ.தே.கா வின் கலாநிதி ஆ(மா)சு மாரசிங்கவும் அழைக்கப்பட்டிருந்தனர்.

விவாதத்தின் தொடக்கத்தில் தான் தொகுத்து வந்த கேள்விக்கணைகளை ஆசு சும்மா அள்ளி வீசினார். அவர்களுக்கே உரித்தான சிங்கள மொழிப்புலமையில் ஆசுவும் , செவியேறலில் சிங்களத்தை கற்றுக் கொண்டு கேள்விகளுக்கு சாட்டையாக ஆதாரங்களை முன்வைக்கும் ஒருவராக ஹிஸ்புல்லாவுமான நிகழ்வாக 99 அமைந்திருந்தது.

பல்கலைக்கழகத்தின் ரெஜிஸ்ட்டேசன் தொடக்கம், ஹிறா பெளண்டேசன் அங்கீகாரம், நிதி வந்த வழிமுறைகள், பிரதேச சபையில் பெற்றுக்கொண்ட அங்கீகாரம், மகாவலி அதிகாரசபையில் காணியை பெற்றுக்கொண்டமை, பல்கலைக்கழகத்தின் சரீயாக் கல்வி, இஸ்லாமிய கட்டடக்கலை, அத்தனையையும் வைத்து தம்மிடம் இருந்த இனவாதத்தை சாறாகப் பிழிந்து மாசு மாரசிங்க கேள்விகளை கேட்டிருந்தார்.

முன்னாள் ஆளுனர் ஹிஸ்புல்லா அவர்கள் கேட்கப்பட்ட அத்தனை கேள்விகளுக்கும் ஆதாரபூர்வமாக ஆவணங்களுடன் பதிலை முன் வைத்திருந்த போதும், மாரசிங்கவினால் ஏற்றுக்கொள்ள முடியாத மனோநிலை அவர் கலாநிதியா? அல்லது கல்லாநிதியா? என்ற வினாவுக்கு விடை தேட விளைந்தது.

தம்மால் முடியாதவற்றை அனைத்து இனத்துக்குமாக ஒருவர் செய்கின்றாரே! நமது நாட்டுக்கு ஏதோ ஒரு வழியில் நிதியை அள்ளிவந்து நாட்டை வளப்படுத்த முயற்சிக்கின்றாரே! இதனால் நன்மையடையப்போவது நமது நாட்டின் இளைஞர் யுவதிகள்தானே! சர்வதேச தரம் வாய்ந்த பல்கலைக்கழகம் ஒன்று இலங்கையில் இருப்பதானது இலங்கைக்கும் பெருமைதானே! ,

என்பதையெல்லாம் விடுத்து முஸ்லிம் ஒருவர் அதனை செய்துவிட்டார், அரேபிய கலை அதில் தெரிகிறது, மாற்றுக் கட்சியில் உள்ள ஒருவர் அதனை செய்துவிட்டார், அதனை நாங்கள் பறிமுதல் செய்வோம் எனும் தொனிப்பொருளே மாசு மாரசிங்கவின் பேச்சில் புரையோடியது. மாறாக, ஹிஸ்புல்லாவின் பேச்சில் உண்மையும், இந்த நாட்டுக்காய் செய்த சேவைக்காய் சலிப்பும் இழையோடியது.

இவை அத்தனைக்குக் செக் வைத்தால் போல ஹிஸ்புல்லா அவர்கள் ஒரு சேதி சொன்னார். “நீங்கள் அடாத்தான முறையில் என்னிடம் இருந்து பிடிங்கிவிட முடியாது. ஆனால் பேச்சுவார்த்தை மூலம் பங்குகளை அரசுக்குக் கேட்டால் 50:50 வேண்டுமென்றாலும் தருவதற்கு ஆயத்தமாகவே இருக்கின்றேன்” என்றார்.

இரவு பகலாக வியர்வை சிந்தி நாட்டின் முன்னேற்றதுக்காக உழைக்கும் ஒரு ஜீவனை சங்கடப்படுத்திவிட்டோமே என்ற உறுத்தலுடனே கலாநிதி ஆசு மாரசிங்க நிகழ்ச்சியில் இருந்தும் வெளியேறியிருத்தல் வேண்டும். இருந்தாலும் வீம்புக்காக அடம்பிடித்தார். புலிபோல வந்து பூனையாய் போனார்.

ஷிபான் BM

5 கருத்துரைகள்:

கல்வி கல்லாதவனை விட கற்றவர்கள்தான் இப்போ அதிகம் இனவாதம் பேசுவதும்,நாட்டை குழப்புவதும்

சிங்கள மக்களிடமுள்ள சந்தேகங்களுக்கு விடையினை ஹிஸ்புல்லா அவர்களின் வாயினால் சொல்லுவதற்கான வாய்ப்பினை வழங்குவதற்காக இச்சந்தர்ப்பத்தினை மாரசிங்க அவர்கள் பயன்படுத்தியிருக்கலாம் என ஏன் கொள்ள முடியாது. ஒருவரை மதிப்பிடுவதற்கு அவர் பற்றிய ஏனைய நடைமுறைகளைக் கவனத்தில் கொள்ளுவதும் முக்கியம் என நினைக்கிறேன். என் பார்வையில் அவர் விமர்சனங்களுக்கப்பாற்பட்ட ஒரு அரசியல்வாதியாக இருக்கிறார். நல்லவர்களையும் நாம் பகைவர்களாக்கிக் கொள்ளக்கூடாது என்ற நப்பாசையில் தான் எழுதுகிறேன்.

கல்லாதவனுக்கு ஒன்னுமே தெரியாது என்பது உண்மைதான். அப்படியென்றால் கற்றவன் தன் வாழ்க்கைளை எப்படிக் கொண்டு செல்வான். இப்படித்தான் இல்லாத பொல்லாததை எல்லாம் சொல்லி மக்களை மடையர்களாக்கி அவர்கள் முதுகின்மீது சவாரிசெய்து …….. இல்லாட்டித்தான் கற்ற மடைச்சாம்பிராணிகளால் பிழைக்க முடியாதே.

Asu Marasignha never been in a senior role of an organisation.
A person in a senior role, not necessarily know all rules and regulations. Its responsibility of person who directly deal with specific subject. The minister, as a senior person, gives direction to his staff to carry out duty. Its central bank staff's responsibility to check the legality of in coming funds. I would say Hisbulla won the debate.

Suhail அவர்கள் சொன்னதுதான் சரியாக இருக்கும்

Post a comment