June 09, 2019

முஸ்லிம் அரசியல்வாதிகளுக்கிடையில் ஏற்பட்ட, ஐக்கியத்ததை குலைப்பதற்கு பல்வேறு முயற்சிகள் - ஹக்கீம்

‘முஸ்லிம் அரசியல் தலைமைகளுக்கிடையிலான தற்போதைய உறவு கஷ்டப்பட்டுக் கட்டியெழுப்பப்பட்ட ஒன்றாகும். எனவே, எமது கட்சியைச் சேர்ந்தவர்கள் இந்த உறவைத் தொடர்ந்து கட்டியெழுப்புவதில் கரிசனையுடனும் கவனமாகவும் செயற்படவேண்டும்’ என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான நாடாளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

நேற்றிரவு (08) கட்சியின் அரசியல் பீடக் கூட்டம் கொழும்பில் நடைபெற்றபோது அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அவர், “சமூக வலைத்தளங்களில் வெளிநபர்களால் எவ்வாறான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டாலும் கட்சியைச் சேர்ந்தவர்கள் இந்த விடயத்தில் முரண்பாடான தகவல்களை வெளியிடக் கூடாது.

தற்போது ஏற்பட்டுள்ள இந்த உறவை நாங்கள் முன்னெடுத்துச் செல்ல வேண்டும். இந்த விடயத்தில் யார் தலைமைத்துவம் வகிப்பது என்ற விடயங்களை நாங்கள் பின்னர் பார்த்துக் கொள்ள முடியும்.

இவ்வாறன ஐக்கியப்பட்ட செயற்பாட்டினால் எம்மால் அதிகமாக விடயங்களைச் சாதிக்க முடியும். தற்போது முஸ்லிம் சமூகம் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகளுக்குத் தீர்வு காண வேண்டியுள்ளது. இதற்கு தற்போதைய ஐக்கியம் தொடர்ந்து பேணப்பட வேண்டும்.

முஸ்லிம் அரசியல்வாதிகளுக்கிடையில் தற்போது ஏற்பட்ட இந்த ஐக்கியத்ததை குலைப்பதற்கு வெளிச் சக்திகளால் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இவ்வாறான சதி முயற்சிகளுக்கு நாங்கள் உடந்தையாகி விடக் கூடாது.

மேலும், அடுத்த கட்ட நடவடிக்கையாக எமது நிலைப்பாடுகளை, எம்மைப் பற்றிய புரிந்துணர்வை சிங்கள சமூகத்தின் மத்தியில் கொண்டு செல்ல வேண்டும். சிங்கள மக்கள் மத்தியில் எம்மைப் பற்றி தவறான விளக்கங்கள் கொடுக்கப்பட்டு வருகின்றன. அவர்களிடம் முஸ்லிம் சமூகம் தொடர்பில் உள்ள நல்ல எண்ணங்களைச் சிதறிடித்து அவர்களை வேறு திசைகளில் திருப்பி பிழையான வழியில் இட்டுச் செல்லும் முயற்சிகள் முன்னெடுக்கப்படுகின்றன. எனவே, சிங்கள மக்கள் மத்தியில் எமது பக்க நியாயங்களை எடுத்துக் கூறக் கூடிய தேவைப்பாடு உள்ளது. அதனை நாம் செய்ய வேண்டும்.

சில சிங்கள தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நான் கலந்து கொள்வதில் கட்சி உறுப்பினர் சிலரிடையே முரண்பாடான நிலைப்பாடுகள் காணப்படுகின்றன. ஆனால், அவ்வாறான தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதன் மூலமே எமது நிலைப்பாட்டை சிங்கள் மக்கள் மத்தியில் கொண்டு செல்ல முடியும் என்பதே எனது நிலைப்பாடாகும். எனவே, இதனை ஒரு சந்தர்ப்பமாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

மேலும், முஸ்லிம் பெண்களின் ஆடை தொடர்பில் தற்போது எழுந்துள்ள பிரச்சினைகளுக்கு நாளை (10) திங்கட்கிழமை தீர்வை வழங்குவதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

மேலும், உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற தற்கொலைக்குண்டுத் தாக்குதலின் பின்னர் எவ்வித குற்றமும் செய்யாத நிலையில் அநியாயமாகக் கைது செய்யப்பட்ட முஸ்லிம்களை வழக்குகளிலிருந்து விடுவிப்பது தொடர்பில் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறோம். விசேடமாக, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்களை அந்தச் சட்டத்தின் கீழிலிருந்து விடுவிக்க வேண்டுமென்றும் பிரதமரை வலியுறுத்திறுத்தியுள்ளோம். இது தொடர்பில் சட்டமா அதிபரிடமும் பேசியுள்ளோம்”  என்றும் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

                           (ஏ.எச்.சித்தீக் காரியப்பர்)

5 கருத்துரைகள்:

எப்படியோ, அடுத்த ஆட்சியை “யார் பிடித்தாலும்”, ஓடிப்போய் ஒட்டிக்கொண்டு பதவிகளுக்கான சண்டை பிடிப்பீர்கள் தானே?

Ajan இல்லயெண்டா கிழட்டு தமிழ் அரசியல்வாதிகளை போல் இல்லாத ஈழம், கிடைக்கமுடியாத சமஸ்டியை பற்றி பேசி தமிழ் கூட்டத்தை போல் முஸ்லிம்களையும் பிச்சையெடுக்கவைக்க முடியுமா?

@NGK, உங்கள் மின்ஸ்டர்கள் எல்லாருக்கும் ISIS முத்திரை குத்தி, பதவிகளை பறித்து. ஓட ஓட சிங்களவர்கள் விரட்டியதை, பார்க்கவில்லையா?
ஒருவர் தனக்கு பதவி வேண்டுமென TV அழுதாரமே
இதெல்லாம் ஒரு பொழப்பு.

Sabash, NGK Ajan ponra pinam thinnihalukku valavum theriyathu nalla valravanayum pidikkathu, antha mukkuva naikku soppirathukku thumbukattayum palayatha kanavillai

Post a Comment