June 10, 2019

மட்டக்களப்பு ஷரிஆ பல்கலைக்கழகம், வெடிகுண்டு தயாரிக்கும் தொழிற்சாலையாக உள்ளது

தெற்காசியாவின் மிகப்பெரிய இனவாத ஸ்தலமாக மட்டக்களப்பு ஷரிஆ பல்கலைக்கழகம் உள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்ன தேரர் தெரிவித்துள்ளனர்.

ஷரிஆ பல்கலைக்கழகம் தொடர்பில் இன்று -10 நடத்தப்பட்ட ஊடகவியலாளர் சந்தித்தில் தேரர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

குறித்த பல்கலைக்கழகம் தெற்காசியாவில் மிகப்பெரிய ஷரிஆ சட்டம் மற்றும் இஸ்லாம் பயங்கரவாதம் கற்பிக்கும் இடமாகும்.

அத்துடன் அந்த பல்லைக்கழகம் வெடிகுண்டு தயாரிக்கும் தொழிற்சாலையாக உள்ளது. அதற்கு சவுதி உட்பட இஸ்லாமிய நாடுகளில் இருந்து பெருமளவு பணம் கிடைப்பது எங்களுக்கு தெரியும்.

பங்களாதேஷ் போன்ற நாடுகள் பௌத்த துறவிகளால் நடத்தப்பட்டு வந்த நாடாகும். எனினும் தற்போது அது முழுமையான முஸ்லிம் நாடாக மாறியுள்ளது. அதனை இஸ்லாமிய அரசு என்றே கூறுகின்றனர்.

அவ்வாறே இலங்கையையும் மாற்ற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இன்று தீவிரவாதிகள் ஆயுதத்தை விட தொழில்நுட்பத்தையே அதிகம் பயன்படுத்துகின்றனர். சைபர் யுத்தமே இன்று அதிகரித்து காணப்படுகின்றது.

எனவே மட்டக்களப்பு ஷரிஅ பல்கலைக்கழம், இராணுவத்தினருக்கு தொழில்நுட்ப திறனை வழங்கும் பல்கலைக்கழமாக மாற்றுமாறு நாங்கள் கேட்டுக்கொள்கின்றோம்.

இந்த பல்கலைக்கழகம் முழுமையாக அரசாங்கத்திற்கு எடுத்து தொழில்நுட்ப பல்கலைக்கழகமாக மாற்ற வேண்டும்.

சமகாலத்தில் போர் தொழில்நுட்ப போராகவே உள்ளது. எனினும் இந்த யோசனைக்கு யாரிடம் அனுமதி பெறுவது என்பதனை பின்பு பார்ப்போம். முதலில் அதனை அரசாங்கத்திற்கு எடுப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் உடனடியாக மேற்கொள்ளப்பட வேண்டும்.

அதற்காக யோசனை, சட்டமூலம் அனைத்தும் எதிர்வரும் 10 நாட்களுக்குள் முன்னெடுக்கப்படும் என தேரர் மேலும் தெரிவித்துள்ளார்.

கடந்த வாரம் ஆளுநர்களாக செயற்பட்ட ஹிஸ்புல்லா, அசாத் சாலி மற்றும் அமைச்சராக செயற்பட்ட ரிசாத் பதியுதீனை பதவி நீக்கக் கோரி ரத்ன தேரர் சாகும் வரை உண்ணாவிரதம் இருந்தார்.

தேரரின் உண்ணாவிரத அழுத்தம் காரணமாக ஹிஸ்புல்லா மற்றும் அசாத் சாலியின் பதவிகளை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பறித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மட்டக்களப்பு ஷரிஆ பல்கலைக்கழகம் முன்னாள் ஆளுநர் ஹிஸ்புல்லாவுக்கு சொந்தமான தனியார் நிறுவனமாகும்.

9 கருத்துரைகள்:

ரத்ன தேரருக்கு கெட்டகாலம் பிடிச்சிருக்கு எனவே அவர் வாய்க்கு வந்ததெல்லாம் உளருவார். நாம் பொறுமையாகத்தான் கையாள வேண்டும்.

மட்டக்களப்பு தனியார் பல்கலைக்கழகம் இந்த தேரர் கூறுவதுபோல் வெடிகுண்டு தயாரிக்கும் தொழிற்சாலையாக இயங்குகின்றது என்ற குற்றச்சாட்டு மிகவும் பயங்கரமானதாகும். இதுவரை அப்படியான குற்றச்சாட்டுகளை யாரும் சுமத்தவில்லை. அதற்காக தேரருக்கு நன்றி சொல்லக் கடமைப்பட்டுள்ளோம். இதன் மூலம் இத் தேரர் பெரும் விஞ்ஞானியாகவும் துப்புத் துலக்குவதில் வல்லவராகவும் விளங்குகின்றார். ஹிஸ்புல்லா சேர் இதற்காகக் கைது செய்யப்படவேண்டியவர். உடனடியாக இந்த ஆதாரங்களை வைத்து தேரர் அவரகளிடம் இந்த அவரது அறிக்கையின் உண்மைத் தன்மையினை புலனாய்வுப் பகுதியினர் கண்டுபிடிக்க வேண்டும். தேரர் தவரான தகவல்களைத் தந்திருந்தால் இலங்கைத் தண்டக் கோவையின் சட்டப்பிரிவுகளின் அடிப்படையில் அவருக்குத் தகுந்த தண்டனை வழங்க வேண்டும்.

This racist monk must be prosecuted and punished for telling consummate lies.

He is the big lier and modayan. Don't believe him anybody

Please close your Shift mouth your terror racist Thero...
Go to temple and tell Bana for your Bothalay(Alcoholic)/Sinhalay people.

தேரர்கள் எதையும் பேசலாம் ஆகவே நாம் அதைப்பற்றி அலட்டவே தேவை இல்லை.அதிலும் இவர் பற்றி எப்போதும் நாம் கணக்கே எடுக்க வேண்டியதில்லை.

How many bombs made there? and where is he hide them? Security measures should be taken against him...?

இவனுக்கு பைத்தியம் முத்திவிட்டது. சர்வதேச பைத்தியகார ஆஸ்பத்திரியில் தான் சேர்க்க வேண்டும்.

Post a comment