Header Ads



முதலை கண்ணீர் வடிக்கும் மங்கள சமரவீர - நாமல்

அமைச்சர் மங்கள சமரவீர தனது இயலாமையை மூடி மறைப்பதற்காக அவ்வப்போது பல்வேறு கருத்துக்களை வெளியிட்டு வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

கொழும்பில்  செய்தியாளர்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

நிதியமைச்சு வீழ்ச்சியடைந்துள்ளது.மக்களுக்கு வழங்கிய உறுதிமொழிகளை நிறைவேற்ற முடியாமல் போயுள்ளதால், மக்களை திசை திருப்ப அமைச்சர் மங்கள சமரவீர பல்வேறு கருத்துக்களை வெளியிடுகிறார்.இறுதி பிரதிபலனாக அமைச்சர் மங்கள, அமைச்சர் என்ற வகையில் தோல்வியடைந்துள்ளார்.

இன்று சிறுபான்மை மக்களுக்காக முதலை கண்ணீர் வடிக்கும் மங்கள சமரவீர கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வன்முறைகளினால் சேதமாக்கப்பட்ட அம்பாறை பள்ளிவாயலுக்கு 27 மில்லியன் இழப்பீடு வழங்க முன்வைக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்தை நிராகரித்ததுடன் 1 மில்லியன் மாத்திரமே வழங்க முடியும் என கூறியவர்.

பேச்சினால் மாத்திரம் சிறுபான்மை மக்களை ஆதரிக்கும் இவர்கள் செயலில் எதையும் செய்து காட்ட மாட்டார்கள்.

நாட்டில் ஏற்பட்டுள்ள பிரச்சினை உலகத்திற்கு மத்தியில் இன்று கேலிக்குரியதாக மாத்திரமல்ல, நாட்டு மக்களின் பிரச்சினைகளை மூடி மறைக்கும் வேலைத்திட்டமாக மாறியுள்ளது. ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலின் பொறுப்பில் இருந்து அரசாங்கம் விலகிச் செல்ல முடியாது.

பொலிஸ் மா அதிபருக்கு வெளிநாட்டில் தூதுவர் பதவி தருகிறேன், பதவி விலகுங்கள் என்று கூறி தப்பிக்க முடியாது. நாடு படுமோசமான நிலைமைக்கு சென்றுள்ளது. பொருளாதாரம் தரை மட்டமாக்கப்பட்டுள்ளது.

நாங்கள் றக்பி விளையாடினோம், இரும்பு கம்பிகளை வைத்தோம் என்று கூறி எங்களை பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவுக்கு கொண்டு சென்றனர்.

தூதுவராக பதவி தருகிறேன். பதவி விலகுங்கள் என்று கூறுபவர்களை எங்கே கொண்டு செல்வது எனவும் நாமல் ராஜபக்ச கேள்வி எழுப்பியுள்ளார்.

1 comment:

  1. விசாரிக்கப்படுபவர் ஆணைக்குழுவிடம் எதனையும் கூறலாம். ஆனால் அவை நிரூபிக்கப்படல் வேண்டும். அல்லாவிடில் அப்படி பொய்ச் சாட்சியம் அளிப்பவர்களுக்கு அல்லது குற்றம் சாட்டப்பட்டவருக்கு கடும் தண்டனை வழங்க வேண்டும். அதுதான் இயற்கை நீதி.

    ReplyDelete

Powered by Blogger.