Header Ads



முஸ்லிம்களை மாத்திரம் நீதிமன்றத்திலிருந்து, வெளியேறுமாறு கூறிய நீதிபதி - குளியாப்பிட்டியில் கொடூரம்

- மொஹமட் அசாம் -

முஸ்லிம்கள் மட்டும் நீதிமன்ற கட்டிடத்திலிருந்து வெளியேறுமாரு கூறிய சம்பவமொன்று 2019.05.31 வெள்ளிக்கிழமை குளியாப்பிட்டிய உயர் நீதிமன்றத்தில் இடம்பெற்றுள்ளது.

முஸ்லிம்களின் கடைகள், வர்த்தக நிலையங்களை தாக்கிய சம்பவத்திற்காக கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் கடந்த வெள்ளிக்கிழமை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளனர்.

குறித்த சந்தேக நபர்களை மஞ்சள் நிற துனியினால் உடல் முழுவதும் மறைக்கப்பட்டு பொலீஸாரினால் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.

அதனை தொடர்ந்தே குளியாப்பிட்டிய உயர் நீதிமன்ற நீதவான் அங்கிருந்த முஸ்லிம்களை சிறிது நேரம் வெளியே செல்லுமாறு கட்டளை பிறப்பித்துள்ளார்.

2 comments:

  1. கௌரவமிக்க நீதிபதியின் இந்த கட்டளை பற்றி சந்தேகம் கொள்ளவோ இனவாதமாக அதனைப் பார்க்கவோ வேண்டாம். நீதிமன்றத்துக்குக் கொண்டுவந்தவர்கள், முஸ்லிம்களின் கடைகள்,வீடுகள், பள்ளிவாயல்களை கல்லெறிந்து தாக்கியவர்கள் என சந்தேகத்தின்பேரில் கைது செய்யப்பட்டவர் களை பாதிக்கப்பட்ட முஸ்லிம்கள் அல்லது ஏனையவர்கள் அந்த சந்தேக நபர்களை இனங்காணவேண்டும். அந்த செயல்பாட்டுக்கு அங்கிருந்த முஸ்லிம்கள் அந்த சந்தேக நபர்களைக் கண்டுகொண்டால் சிலவேளை பாரபட்சமாக அவர்கள் நடந்துகொள்ளக்கூடும் எனக்கருதி நீதிபதி அவர்கள் முஸ்லிம்களை சிலநேரம் வெளியில் செல்லுமாறு பணித்திருக்கலாம். அந்த கட்டளை நீதியுடன் சம்பந்தப்பட்டதேயன்றி இனவாதத்துடன் அதனை நோக்கவேண்டாம்.

    ReplyDelete
  2. அவ்வாறு ஒரு சட்டம் உள்ளதா

    ReplyDelete

Powered by Blogger.