Header Ads



கைது செய்யப்பட்டுள்ள அப்பாவி முஸ்லிம்களின் துயரில், துஆக்களோடு பங்குகொள்வோம் (ஒரு உருக்கமான பதிவு)

- Rauf Hazeer -

கைது செய்யப்பட்டுள்ள அப்பாவிகளை விடுதலை செய்வதற்கான தகவல் திரட்டலை சில தினங்களாக செய்து வருகிறோம்.

இன்றைய சம்பவம் : 1

தனது மகனது கைது சம்பந்தமான விபரங்களுடன் இன்று அக்குறனையை சேர்ந்த ஒருவர் வந்தார் .
SLTJ அங்கத்தவறான 22 வயதேயான அந்த இளைஞன், SLTJ பயிற்சி முகாம்களில் தான் பெற்ற நற்சான்றிதழ்கள் ,

வெளியீடுகள் போன்றவற்றை வீட்டில் வைத்திருப்பதன் ஆபத்தை உணர்ந்து அவற்றை இயக்கக் காரியாலயத்தில் வைக்க எடுத்துக் கொண்டு போயுள்ளார்.

வழியில் , அவருக்கான விதி காத்துக்கொண்டிருந்திருக்கிறது.

சோதனைக்காக இடைவழியில் மறிக்கப்பட்ட அவர் ஆவணங்களுடன் கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்செய்யப்பட்டு இப்போது விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

போலீசாரல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையை வாசித்துப் பார்த்தேன்.

தான் தௌஹீத் ஜமாஅத் அங்கத்தவர் , பல பயிற்சி முகாம்களில பங்கேற்றுள்ளேன் ,

என்பதுடன் தற்போது மாவனல்லையில் பிரத்யேக நிறுவனம் ஒன்றில் தொழிற்பயிற்சி பெறுவதாகவும் அவர் தனது வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.

இங்கே தான் பிரச்சினை சிக்கலாகி உள்ளது.

அவர் SLTJ வேறு NTJ வேறு என்பதை தெளிவுபடுத்துகிறவிதத்தில் வாக்குமூலம் அளிக்காததனால் ,
வெறுமனே தௌஹீத் ஜமாஅத் என இவர் குறிப்பிட்டுள்ளதை வைத்து இவ் இளைஞன் NTJ என்று வழக்கு பதிவாகியுள்ளது. போதாக்குறைக்கு பிரத்யேக வகுப்புக்காக செல்வது மாவனல்லை என்பது சந்தேகத்தை மேலும் பலப்படுத்தியுள்ளது.

இன்றைய சம்பவம் : 2

இன்று மாலை எமது முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அஸ்லம் அவர்கள் ஒரு file ஐக் கொண்டு வந்தார்.

பள்ளிவாயல் என சந்தேகிக்கும் ஓர் இடத்தை தாம் சோதனையிட்டபோது மூவரை கைது செய்ததாக அப் போலீஸ் அறிக்கை தெரிவிக்கிறது.

பதிவு செய்யப்படாத பள்ளிவாயல் என்கிற கட்டிடத்தில் இவர்கள் இருந்ததாகவும் , பயங்கரவாத இயக்கத்தின் பிரசுரங்கள் , நிதி சேகரித்ததற்கான ரசீதுகள் சகிதம் இந்த NTJ உறுப்பினர்களை கைது செய்ததாக மேலும் அவ்வறிக்கை நீள்கிறது.

அவ் அறிக்கையுடன் நமது அஸ்லம் ( மு.பா.உ) அவர்கள் தந்த எமது விபரத்திரட்டுப் படிவத்தில் இருந்த சந்தேக நபர் ஒருவரின் மனைவியை தொலைபேசியில் தொடர்புகொண்டு அவரின் கணவரும் மற்ற இருவரும் NTJ உறுப்பினர்களா என விசாரித்தேன்.

இல்லை, அவர்கள் CTJ என்றார்.

அவரின் கணவர் இந்துவாக இருந்து இஸ்லாத்தை தழுவிய ஒருவர் என்றும் SLTJ யிலிருந்து CTJ ஆக பிரிந்தவர்கள் என்பதனால் பள்ளிவாசலை பதிவு செய்து கொள்ள கால அவகாசம் இருக்கவில்லை என்றும் அறியமுடிந்தது .

இதனை ஏன் இங்கே பதிவிவிடுகிறேன் எனக் கேட்பீர்கள்!

போலீசாரை பொறுத்தவரை 

ACTJ , SLTJ ,CTJ எல்லாமே NTJ என்கிற மனப்பான்மைதான் உள்ளது . 

எனவே இவ் இயக்க உறுப்பினர்கள் எவராவது முறைப்பாடொன்றை பதிவு செய்ய நேர்ந்தால் தாம் எவ்விதத்திலும் NTJ உடன் சம்பந்தப் படாதவர்கள் , தம் இயக்கம் முற்றிலும் வேறானதென்பதை போலீசாருக்கு தெளிவாக சொல்வதுடன் தமது இயக்கப் பெயரையும் அதன் பதிவிலக்கத்தையும் முறைப்பாட்டில் பதிந்து கொள்வதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

நாமோ அல்லது உங்கள் வழக்கறிஞர்களோ அப்போதுதான் உதவ முடியும்.

நான் SLTJ தலைமைக்கு இதனை இன்று தெரிவித்தேன். CTJ ரஸ்மின் சகோதரரின் தொலைபேசி மூன்று தடவைகளும் பிஸியாக இருந்ததனால் கூற முடியாது போய்விட்டது.

இன்ஷா அல்லாஹ் CTJ ,ACTJ மற்றும் அமைப்புகளுக்கு நாளை கதைப்பேன்.

( மனதை வருத்தும் பின் குறிப்பு : அளுத்கமையில் கைதாகியுள்ள அந்த CTJ சகோதரருக்கு 4 பிள்ளைகள். மூத்தவனுக்கு 4 வயதே ஆகிறது .கடைசிக் குழந்தைக்கு வயது 18 நாட்களே. தந்தை கைதான பிறகுதான் மகன் பிறந்திருக்கிறான்.

அந்த சகோதரியின் துன்பத்திலும் துயரிலும் துஆக்களோடு பங்குகொள்வோமாக )

6 comments:

  1. In the name of war on terror, George Bush killed thousands of innocent people, Now, Sri Lanka in the name of suspect, taken many innocent people into jails. We hope all these people are freed soon. there is no need to this ..

    ReplyDelete
  2. கேட்பதர்கு மிகவும் மனக் கக்ஷ்டமாக உள்ளது,முடியுமானவரை அவர்களுக்காக வாதாடுங்கல்,பிரார்த்தனை செய்யுங்கள்.அடுத்தது கட்டாயமாக எனக்கு ஒரு விளக்கம் தாருங்கள்.ஏன் SLTJ,CTJ,UTJ,ACTJ என இவர்கள் ஒரே குடையின் கீழ் இருந்து விட்டு ஏன் பிரிந்தார்கல்.அடுத்தது பயங்கரவாதி shahran னும் அந்த குடையில் இருந்து NTJ எனும் தீவிரவாத அமைப்பை உருவாக்கினான்.இப்படியான நிலமயில் பொலிசாருக்கு சந்தேகம் வரத்தான் செய்யும்.எம்மவர்கல் கொஞ்ஞம் புத்தியோடு நடக்க வேண்டும்.நாட்டில் குண்டு வெடிப்பு அதுவும் எமது இனத்தை சேர்ந்தவன் பயங்கரவாதிகள்,இதை விட மார்க்கத்தோடு சம்பந்தப்பட்டவர்கள்.இப்படியான நிலமையில் பள்ளி அதுவும் பதிவு செய்யவும் இல்லை.அங்கே இருப்பது எவ்வளவு முட்டாள் தனம்.சகோதரரே ஒரு விடயத்தை மட்டும் தெளிவு படுத்துங்கல்.ஏன் இவர்கள் இத்தனை பிரிவுகளாக பிளவு பட்டார்கல்? ஏன் இவ்வாறு அல்லஹ்வின் வீட்டை கூட பிளவு பட்டதும் தங்களது குடும்ப சொத்தை பிரித்து கொள்வது போல் பிரித்து அதையும் பதிவு செய்வது வேறு.எனவே Muslim ஆகிய எனக்கே இவர்களின் பிளவு,புதிய பெயரில் புதிய இயக்கம் போன்ர விடயங்கல் புரியவில்லை எவ்வாறு சிங்கலவருக்கு புரியும்.தயவு செய்து யாராவது விளக்கம் தாருங்கள் .இவர்கள் ஒரு தவ்ஹீத் ஜாமத்தில் இருந்து பல பிரிவுகளாக பிரிந்தது ஏன்? கொள்கை பிரச்சினையா? தலமத்துவ,பதவி பிரச்சினையா? பணப் பிரச்சினயா? இல்லை கேடு கெட்ட அனைத்து பித்னாக்கலையும் பணத்துக்காக செய்யும் தமிழ் நாட்டு தவ்ஹீத் குழப்பங்கலின் பின் விளைவுகலா.ஏன் பிரிந்தார்கல்? (எப்போது இங்கிருந்து தமிழ் நாட்டுக்கு ஓத,பிள்ளைகளினை அனுப்பினார்கலோ அதுவே இந்த பிரச்சினகலுக்கு பிரதான காரனமாக போனது) இங்கே கூட தவ்ஹீத் மேடைகளில் அதிகம் தவ்ஹீத் தலமையில் இருப்பவர்கள் பேசுவது கூட தமிழ் நாட்டின் தமிழ் style தான்.30 கோடிக்கு அதிகமாக உள்ள அங்கேயே Muslim கலுக்கு நடக்கிற தினம் தினம் கேவலம் 1 துண்டு மாட்டிரச்சிக்காக கொல்லப்படும் நாட்டில அதை தட்டிக் கேட்டு நியாயத்தை வழங்க முடியாதவர்கலினை எமது நானாமார் follow பண்ணப் போய்த்தான் இவ்வலவு பிரச்சினையும்.25 இலட்சம் Muslim களாக வாழ்ந்தாலும் கொஞ்ஞம் தன்மானத்துடன் வாழ்ந்தோம், வீட்டிலயே விசேசங்கலுக்காக பல மாடுகளை வெட்டி விருந்தாக்கினோம்.ஆனால் 30 கோடி Muslim கள் இருந்தும் 1 துண்டு மாட்டிரைச்சி வீதியால் கொண்டு செல்ல முடியாது.எனவே இப்போது அனைவரும் சுய பரிசோதனை செய்யுங்கள் இந்த நாட்டிலே நாம் அனுபவித்த சுதந்திரத்தை,தமிழ் நாட்டிலே பித்து பிடித்த சிலரினால் எமது வாலிபர்கள் மூளை சலவை செய்யப்பட்டு,தீவிர,அதிரடியான சித்தாந்தங்களினால் ஊர வைக்கப்பட்ட விளைவுகல்தான் இப்போது அனுபவிக்கும் பாதுகாப்பு கெடுபிடிகள்

    ReplyDelete
  3. ACTJ, SLTJ,CTJ,NTJ இன்னும் ஏதாவது TJக்கள் இருக்கின்றனவா?

    இத்தனை TJக்கள் நமது சமூகத்தில் அவசியம் தானா?

    ReplyDelete
  4. நாதியற்ற சமூகமாக இன்றுவரை நாம்

    மிகப்பெரும் கவலைக்குரிய விடயம் இன்றுவரை இலங்கை முஸ்லிம்களுக்கான ஒரு (கூட்டுத்) தலைமைத்துவம் உருவாக்கப்படவில்லை.

    நமது மக்களின் பிரச்சினைகளை முறையிட அல்லது அவற்றை நெறிப்படுத்தி வழிப்படுத்த ஒரு தலைமைக்காரியாலயம் இல்லாமல் இருப்பது பெருத்த ஒரு குறைபாடாகும்.

    நமது பிரச்சினைகள் ஒரு பொதுத் தளத்தில் விவாதிக்கப்பட்டு முடிவுகள் எடுக்கப்பட்டு அவை தேசிய சர்வதேசிய மயப்படுத்தப்படுவதற்கான நடவடிக்கை எடுக்கப்படாமல் இருப்பது நம்முடைய மற்றுமொரு பாரிய பலவீனமாகும்.

    அடுத்து நம்மக்கள் மத்தியில் காணப்படகின்ற அநியாயமான பழிவாங்கலும் அநியாயமான காட்டிக்கொடத்தலும் முற்றாகத் தவிர்க்கப்படல் வேன்டும்.

    இவை சமூகத்தலைவர்களாக தம்மை அடையாளப்படுத்திக் கொள்ளுபவர்களின் கவனத்திற்காகவும் உடனடி செயல்பாட்டிற்காகவுமான ஒரு விண்ணப்பமே.

    ReplyDelete
  5. very useful advice .Innocent people should not face trouble .

    ReplyDelete
  6. அநியாயமாக கொல்லப்பட்ட அந்த 250 க்கும் மேற்பட்ட தமிழர்களுக்கும் து ஆ கேட்பீர்களா

    ReplyDelete

Powered by Blogger.