Header Ads



அமெரிக்க - சிறிலங்க உறவுகளில் புதிய அத்தியாயம் ஆரம்பமாகிறது, தீவிரவாதத்தை முறியடிக்க பேச்சு

அமெரிக்க- சிறிலங்கா இருதரப்பு உறவுகளில் புதிய அத்தியாயம் ஒன்றைத் திறக்கும் வகையில், அமெரிக்க இராஜாங்கச் செயலர் மைக்கேல் றிச்சர்ட் பொம்பியோ தலைமையிலான குழுவுக்கும், சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன தலைமையிலான குழுவுக்கும் இடையில், உயர்மட்டப் பேச்சுக்கள் இடம்பெறவுள்ளன.

வரும் வியாழக்கிழமை அமெரிக்காவில் இந்தப் பேச்சுக்கள் இடம்பெறவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களுக்குப் பின்னர், நடைபெறும் இந்தப் பேச்சுக்களில், பிரதானமாக தீவிரவாத முறியடிப்பு, பாதுகாப்பு, மற்றும் ஒருங்கமைக்கப்பட்ட, நாடுகடந்த குற்றங்கள் உள்ளிட்ட விடயங்களில் முக்கிய கவனம் செலுத்தப்படவுள்ளது.

இந்தப் பேச்சுக்களின் போது, இரண்டு நாடுகளினதும் அதிகாரிகள் மற்றும் பிரதிநிதிகள் இந்தோ-பசுபிக் மூலோபாயம், சிறிலங்கா மற்றும் ஆசியப் பிராந்தியம், இராணுவ- இராணுவ உறவுகள், வருகைப் படைகள் உடன்பாடு மற்றும் சிறிலங்காவின் அமைதிகாப்புக்கான உதவி, கண்ணிவெடிகளை அகற்றும் ஆற்றல்கள் உள்ளிட்ட விடயங்கள் குறித்தும் கலந்துரையாடுவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அத்துடன், மனித உரிமைகள், நிலைமாறுகால நீதி, ஈரான் மீதான தடைகள், மிலேனியம் சவால் நிதிய  மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு, வணிக மற்றும் முதலீடு, விஞ்ஞானம், தொழில்நுட்ப, கண்டுபிடிப்பு ஒத்துழைப்பு, இணையவெளிப் பாதுகாப்பு உள்ளி்ட விவாகரங்கள் குறித்தும் இந்த இருதரப்பு கலந்துரையாடலில் பேசப்படவுள்ளன.

அமெரிக்காவில் இந்தப் பேச்சுக்களை முடித்துக் கொண்டு சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன, மெக்சிக்கோவுக்கு சென்று அந்த நாட்டின் வெளிவிவகார அமைச்சர் மார்சிலோ எப்ராட்டைச் சந்தித்துப் பேசவுள்ளார்.

அமெரிக்கா செல்லவுள்ள சிறிலங்கா குழுவில், வெளிவிவகார செயலர் ரவிநாத ஆரியசிங்க, அமெரிக்காவுக்கான சிறிலங்கா தூதுவராகப் பெயரிடப்பட்டுள்ள றொட்னி பெரேரா, பாதுகாப்பு அமைச்சின் மேலதிக செயலர் அனுராத விஜேகோன், வெளிவிவகார அமைச்சின் வட அமெரிக்கா, இலத்தீன் அமெரிக்கா, கரீபியன் நாடுகளுக்கான பணிப்பாளர் சானிகா திசநாயக்க, வெளிவிவகார அமைச்சின் சட்ட மற்றும் ஐநா விவகாரங்களுக்கான பணிப்பாளர் சோபினி குணசேகர, மற்றும் ஜெயந்த பெர்னான்டோ, அனுஸ்க விஜேசிங்க உள்ளிட்டோர் இடம்பெறவுள்ளனர்.

திலக் மாரப்பன தலைமையிலான இந்தக் குழு வரும் செவ்வாய்க்கிழமை அமெரிக்காவுக்குப் புறப்படவுள்ளது.

3 comments:

  1. எதிர் பார்க்க பட்டது தானே! இதுதான் அவர்களின் இலக்கு.வழங்களை சுரண்டல்.

    ReplyDelete
  2. 21/4/2019 அன்று சில முஸ்லிம் பெயர்களை கொண்ட மூளைச்சலவு செய்யப்பட்ட கயவர்களுக்கு இந்த அளவுக்கு பயிற்சிகளும் வெடிப்பொருட்களும் இந்த அமெரிக்காவால்தான் தயார்பன்னி கொடுக்கப்பட்டுள்ளது.
    அதை ஏன் அமெரிக்கா செய்துள்ளது இதோ இந்த பேச்சுவார்தையில் அவர்களின் நோக்கங்கள் தெளிவாக உள்ளடக்கப்பட்டுள்ளது

    நமது நாட்டு புலனாய்வுத்துறை இந்த அமெரிக்க உலக மஹாகள்ளர்களுடன் சேர்வதானது நம் நாட்டின் இறையான்மையை,பாதுகாப்பு இரகசியங்கள்,சுகந்திரம், நம் நாட்டு பொக்கிசங்கள் அனைத்தையும் சூறையாடிவிட்டான் என்று அருத்தமாகும்

    நம் நாடு இந்த ஒப்பந்தங்களை நம் அண்டை நாடுகளான ஏகாதிபத்திய ரசியா,சீனா போன்ற நாடுகளுடன் செய்து கொள்ளலாம் மாற்றமாக இந்த அமெரிக்க கள்ளர்களுடன் செய்தால் நம் நாட்டின் இன அமைதி,தேசியபாதுகாப்பு,கணியவளங்கள் அனைத்தும் நாசமாகிபோய விட்டது

    அவனை நம் நாட்டுக்குள் செயல்படவிட்டால் பல்லின வாழ் மக்களுக்கிடையில் இனப்போரை உண்டுபன்ன அடிக்கடி ஆங்காங்கே பொம்புகளை வெடிக்க வைத்துக்கொண்டே இருப்பான்

    தற்போது அமெரிக்க ஒரு நாட்டுக்குள்ள அவன் இரகசிய படையுடன் ஆக்கிரமிப்பு செய்யவிரும்பினால் அதற்கு அவன் பாவிக்கும் ஒரேஒரு பொறி அவனால் உருவாக்கப்பட்டுள்ள ISIS என்ற பயங்கரவாதே கொள்கையே!

    இந்த ISIS ஆகிய அவனுடய ஆள்களை வைத்து அந்த நாட்டில் உள்ள பலவிதமான மனநோயாளிகளை கண்டுபிடுத்து அவர்களுக்கு நாட்டுக்குள் பிரச்சினையை உண்டுபன்ன அனைத்து தேவைகளையும் அவனுடைய தூதரகமூலம் இரகசியமாக செய்துகொடுத்தவிடுவான்

    பின்பு அந்த நாட்டில் ISIS பயங்கரவாதிகள் நுழைந்துவிட்டார்கள் என்று கூறி அவர்களை பிடிக்க அந்த நாட்டில் ஆக்கிரமிப்பு செய்து அங்குள்ள கணியவளபொக்கிசங்களை தேடுவான் குறிப்பாக பெட்ரோல்,கேஸ் போன்றவைகள் உள்ள நாட்டைத்தான் ISIS என்ற பெயரில் வைத்து நுழைந்திடுவான்

    நம் நாட்டில் மன்னார் பகுதியில் Petroleum கண்டுபிடிக்கப்படு உறுதிபடுத்தப்பட்டுள்ளது

    ReplyDelete
  3. போதும்டா உலக மஹாகள்ளனே இதற்காகத்தானா எங்கள் நாட்டில் தேவாலங்களில் வழிபாடுகளில் ஈடுபட்டுக்கொண்டிருந்த அப்பாவிமக்களை உனது ISIS படைமூலம் கொலை செய்தாய் போதும்டா நிறித்திவிடு

    இந்த உனது நரித்தனதிட்கு மூளைச்சலவு செய்யப்பட்ட இஸ்லாமிய பெயர்கொண்ட சில கயவர்களை மடக்கிவிட்டாயே!

    ReplyDelete

Powered by Blogger.