Header Ads



அபாயா அணிந்த ஆசிரியைகளை, திருப்பியனுப்பியது சட்டவிரோதமானது - இலங்கை ஆசிரியர் சேவை சங்கம்

பாடசாலைகளில் தோன்றும் பல்வேறு முரண்பாடுகளில் தலையிடும் உரிமை அதிபர்களுக்கு உள்ளதே தவிர  பெற்றோர்கள் சட்டத்தை கையில் எடுத்து பாடசாலையின் நிர்வாக நடவடிக்கைகளுக்கு குந்தகம் விளைவித்தல் கூடாது .

இது மாணவர்களின் கல்வியை பாதிக்கும் என்கிறார். இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின்  பொதுச்செயலாளர் மகிந்த ஜெயசிங்க.

திருகோணமலை மக்கள் விடுதலை காரியாலயத்தில் நடைபெற்ற பொதுமக்கள் சந்திப்பொன்றின் போதே மேற்படி கருத்தை தெரிவித்தார். நாட்டில் அண்மையில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலை காரணமாக மக்களின் இயல்பு வாழக்கை மற்றும் மாணவர்களின் கற்றல் நடவடிக்கைகள் வெகுவாக பாதிக்கப்பட்டிருந்தன.

 தற்போது அவை வழமைக்கு திரும்பிக் கொண்டிருக்கின்றன. இந்த நிலையில் இங்கு விஜயம் செய்த மகிந்த ஜெயசிங்க அவர்கள். அண்மையில் அவிசாவெலை புவக்பிட்டி பாடசாலை முஸ்லீம் பெண் ஆசிரியர்கள் சர்ச்சை பற்றி குறிப்பிட்டார்.

அங்கு கடமை புரியும் பண்ணிரண்டு பெண் ஆசிரியர்களும்  அபாயா அணிந்து சென்ற காரணத்திற்காக அப்பாடசாலை பெற்றோர்களால் வழிமறிக்கப்பட்டு அபாயாவை கழற்றி சாரி அணிந்து வருமாறு கட்டாயப்படுத்தப் பட்டு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர் மேற்படி விடயமானது சட்ட விரோதமானது.

 பெற்றோர்கள் சட்டத்தை கையில் எடுக்க முடியாது.  இது அதிபரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட வேண்டும் அல்லது வலயக் கல்வி அலுவலரின் கவனத்திற்கு கொண்டு சென்றிருக்க வேண்டும் அதனை விடுத்து தமது பிள்ளைகளுக்கு கல்வி சொல்லித்தரும் ஆசிரியர்களை பயங்கரவாதிகளாக நோக்குவதும் அவர்களை நடுவீதியில் வைத்து அவமானப்படுத்திடுவதும் எந்த சட்டத்தில் உள்ளது.என்றார் .

தொடர்ந்து பேசிய அவர் மேற்படி பிரதேசங்கள் மிகுந்த ஆசிரியர் தட்டுபாட்டைக் கொண்ட பிரதேசமாகும். ஏற்கனவே மேற்படி பாடசாலையில்ஆசிரியர் தட்டுப்பாடு உள்ளது.

இந்த நிலையில் கணித ஆசிரியர் உற்பட 12 ஆசிரியர்கள் இடமாற்றமானது ஈடு செய்ய முடியாத ஒன்றாகும் இதனால் பிள்ளைகளின் கல்வி தான் மிகுந்த பாதிப்பை அடையும்.  இந்தப் பெற்றோருக்கு முதலில் தெளிவு வேண்டும் முகத்தை மறைத்தல் கூடாது என்று தான் அரசு சுற்றறிக்கை அனுப்பி உள்ளது. ஆனால் அபாயாவை நீக்குமாறு கூறவில்லை.

பெற்றோருக்கு சந்தேகம் இருப்பின் அவர்கள் அதிபரை நாடி இருக்க வேண்டும்  எனவே மேற்படி செயற்பாடுகளினால்  பிள்ளைகளின் கல்வியை எவ்வாறு ஈடு செய்யப்போகிறார்கள் என்பது தற்போது மிகப் பெரிய பிரச்சினையாகும் என்று  குறிப்பிட்டார்.

- ஹஸ்பர் A. ஹலீம் -

4 comments:

  1. principal or police can interfere in the matter of dress code of muslim teachers. definitely not those parents who blocked the entrance to the teachers and hindering the duties of those government teachers. punishment must be swift and severe.

    ReplyDelete
  2. Better to form a Muslim Teachers association.

    ReplyDelete
  3. When the jokers rule the country this is unavoidable.....

    ReplyDelete
  4. Good explanation about the ban and this must be a lesson for other racists too.

    ReplyDelete

Powered by Blogger.