Header Ads



பாதுகாப்பு தரப்பை நம்ப முடியாது - முஸ்லிம்களின் பாதுகாப்பை, பிக்குவால் மட்டுமே உறுதிப்படுத்த முடியும் - ஹரீஸ்

(றியாத் ஏ. மஜீத்)

முஸ்லிம் கட்சிகள் அரசியல் சூழ்நிலைக்கு ஏற்றாப்போல் முடிவுகளை எடுக்காமல் எதிர்காலத்தில் முஸ்லிம் சமூகத்திற்கென பாதுகாப்பு கோப்பாடுகளை வகுத்து செயற்படுதல் வேண்டும். பாதுகாப்பு ஏற்பாடுகள் இல்லாததால் இன்று முஸ்லிம் சமுகம் நடுவீதியில் நிற்கின்றது என இராஜாங்க அமைச்சர் சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் தெரிவித்தார்.

மெஸ்ரோ அமைப்பின் வருடாந்த இப்தார் நிகழ்வு இன்று (25) சனிக்கிழமை கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரியில் இடம்பெற்றது.

மெஸ்ரோ அமைப்பின் தலைவர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.நசீல் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இராஜாங்க அமைச்சர் ஹரீஸ் மேற்கண்டவாறு தெரிவித்தார். தொடர்ந்து அங்கு உரையாற்றுகையில்,

தென்னிலங்கை முஸ்லிம்களின் பாதுகாப்புக்கு பொலிசாரையோ, பாதுகாப்பு படையினரையோ நம்ப முடியாது. அவர்களின் பாதுகாப்பை அப்பிரதேசத்தில் பெரும்பான்மை ஆதரவைக் கொண்ட ஒரு அரசியல் தலைமை அல்லது பெளத்த மத குருவால் மட்டுமே உறுதிப்படுத்த முடியும். இன்று அவ்வாறானதோர் நிலைமை அம்மக்களுக்கு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

முஸ்லிம் கட்சிகள் அரசியல் சூழ்நிலைக்கு ஏற்றாப்போல் முடிவுகளை எடுக்காமல் எதிர்காலத்தில் முஸ்லிம் சமூகத்திற்கென பாதுகாப்பு கோப்பாடுகளை வகுத்து அதற்கேற்றவாறு செயற்படுதல் வேண்டும். இன்று முஸ்லிம் கட்சிகளிடத்தில் அவ்வாறான பாதுகாப்பு ஏற்பாடுகள் இல்லாததால் இன்று முஸ்லிம் சமூகம் நடு வீதியில் நிற்கின்றது.

குருநாகல் மற்றும் புத்தள தாக்குதல்கள் அரசியல்வாதிகளால் நன்கு திட்டமிடப்பட்டு அரங்கேற்றப்பட்டவை. இதன் மூலம் அப்பிரதேச முஸ்லிம்களுக்கு ஒரு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

எதிரே வருகின்ற ஜனாதிபதித் தேர்தல் முஸ்லிம் சமூகத்தை மேலும் நெருக்கடிக்குள் தள்ளும் அளவுக்கு நிலைமைகள் மோசமடையலாம். எனவே முஸ்லிம் சமூகம் குறிப்பாக இளைஞர்கள் உணர்ச்சிகளுக்கு இடம் கொடுக்கமல் புத்தியுடன் செயற்படுதல் வேண்டும். இதற்கு இளைஞர்களை வழிப்படுத்தல் வேண்டும் எனவும் தெரிவித்தார்.

1 comment:

  1. இந்த கருத்துத்தெரிவிக்கும் பாணிக்குத்தான் நிபாக் அல்லது நயவஞ்சகம் எனப்பொருள்படும். அளவு சரியாக இருந்தால் தொப்பியைத் தலையில்போட்டுக்கொள்ளுங்கள்.

    ReplyDelete

Powered by Blogger.