May 30, 2019

அரபு மொழி, ஷரீஆ சட்டம் என்­ப­­வற்றை ஒருபோதும் இந்­நாட்டில் நடை­மு­றைப்­ப­டுத்த முடி­யாது

‘நாட்டு மக்கள் அனை­வ­ருக்கும் ஒரு சட்­டமே அமுலில் உள்­ளது. சமய ரீதியில் சட்­டங்கள் மாறு­ப­ட­மாட்­டாது. அரபு மொழி, அரே­பிய சட்டம் மற்றும் ஷரீஆ சட்டம் என்­ப­ன­வற்றை ஒரு போதும் இந்­நாட்டில் நடை­மு­றைப்­ப­டுத்த முடி­யாது’ என உள்­நாட்­ட­லு­வல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்­ளூ­ராட்சி அமைச்சர் வஜிர அபே­வர்­தன தெரி­வித்தார்.

உள்­நாட்­ட­லு­வல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்­ளூ­ராட்சி அமைச்சில் நடை­பெற்ற அரச அதி­கா­ரி­களைத் தெளிவு படுத்தம் நிகழ்வில் கலந்து கொண்டு உரை­யாற்­று­கை­யிலே அவர் இவ்­வாறு கூறினார்.அவர் தொடர்ந்தும் உரை­யாற்­று­கையில் தெரி­வித்­த­தா­வது, 

நாட்டில் சிங்­களம், தமிழ் மற்றும் ஆங்­கிலம் ஆகிய மொழி­க­ளுடன் கூடிய பெயர் பல­கை­க­ளையும் அறி­விப்புப் பல­கை­க­ளையும் மாத்­தி­ரமே காட்­சிப்­ப­டுத்­த ­மு­டியும். அரபு மொழியில் எந்த அறி­விப்­பு­க­ளையும் காட்­சிப்­ப­டுத்­த மு­டி­யாது. வீதி­களின் பெயர்கள் கூட சிங்­களம், தமிழ், ஆங்­கிலம் ஆகிய மொழி­களில் மாத்­தி­ரமே பொறிக்­கப்­பட்­டி­ருக்க வேண்டும். அரபு மொழியில் காட்சிப் படுத்­தப்­பட்­டுள்ள பெயர்­ப­ல­கைகள் மற்றும் அறி­விப்புப் பல­கை­களை அப்­பு­றப்­ப­டுத்­து­மாறு அரச அதி­கா­ரி­க­ளுக்கு ஆலோ­சனை வழங்­கி­யுள்ளேன்.

கிழக்கு மாகா­ணத்தில் சில பகு­தி­களில் அரபு மொழி­யி­லான பெயர்ப்­ப­ல­கைகள், அறி­விப்புப் பல­கைகள் காணப்­ப­டு­வ­தாக முறைப்­பா­டுகள் கிடைக்கப் பெற்­றுள்­ளன. இதனால் அரபு மொழி­யி­லான அனைத்து அறி­விப்­புக்­க­ளையும் பெயர் பல­கை­க­ளையும் அகற்றி விடு­மாறு கோரி அனைத்து திணைக்­க­ளங்­களின் செய­லா­ளர்கள் மற்றும் அர­சாங்க அதி­பர்கள், பிர­தேச செய­லா­ளர்கள், மாகாண உள்­ளூ­ராட்சி நிறு­வ­னங்­களின் செய­லா­ளர்கள் என்­போ­ருக்கு சுற்று நிருபம் அனுப்பி வைக்­கப்­பட்­டுள்­ளது. பிர­தமர் மற்றும் ஜனா­தி­ப­தியின் ஆலா­ச­னையின் பேரிலே  சுற்­று­நி­ருபம் அனுப்பி வைக்­கப்­பட்­டுள்­ளது.

இலங்­கையின் அர­சி­ய­ல­மைப்பு யாப்பின் அடிப்­ப­டையில் மூன்று மொழி­களை மாத்­தி­ரமே உப­யோ­கிக்க முடியும். மூன்று மொழி­களும் சிங்­களம், தமிழ், ஆங்­கி­ல­மாகும். அரபு மொழியில் பெயர் மற்றும் அறி­விப்பு பல­கைகள் காட்சிப் படுத்­தப்­பட்­டி­ருந்தால்  அவை அப்­பு­றப்­ப­டுத்­தப்­பட வேண்டும்.

நாட்டில் இரண்டு சட்­டங்கள் இருக்க முடி­யாது. ஒரு சட்­டமே அமுலில் இருக்க வேண்டும். எந்த சம­யத்தைச் சேர்ந்­த­வர்­க­ளென்­றாலும் அவர்கள் இந்தச் சட்­டத்­துக்கு கட்­டுப்­பட்­ட­வர்­க­ளாவர். ஷரீஆ சட்­டத்தை இங்கு அமுல் நடத்த முடி­யாது. கல்­லெ­றிந்து கொலை செய்­வது, கழுத்தை வெட்டி கொலை செய்­வ­தெல்லாம் இங்கு முடி­யாது.  அதற்கு ஒரு­போதும் இட­ம­ளிக்­கப்­ப­ட­மாட்­டாது.

இந்­நாட்டில் 2010 –2015 ஆண்டு காலப்­ப­கு­தியில் பாரா­ளு­மன்­றத்தில் அவ­சர சட்­டங்கள் சில நிறை­வேற்றிக் கொள்­ளப்­பட்­டுள்­ளன. இந்த சட்­டங்­க­ளுக்குள் ஷரீஆ சட்­டமும் உள்­ள­டங்­கி­யி­ருக்­கி­றது.  சில அரச வர்த்­த­மா­னிகள் கூட இக்­கால கட்­டத்தில்  வெளி­யி­டப்­பட்­டுள்­ளன. இந்த அரச வர்த்­த­மா­னிகள் அனைத்­தையும் இரத்துச் செய்­வ­தற்குத் தீர்­மா­னித்­துள்ளோம். தவ­றான முறையில் நிறை­வேற்­றிக்­கொள்­ளப்­பட்­டுள்ள சட்­டங்­களில் திருத்­தங்­களைச் செய்யவுள்ளோம்.

அவசர அவசரமாக நிறைவேற்றிக் கொள்ளப்பட்ட சட்டத்தின் கீழ் பல அரச சார்பற்ற நிறுவனங்களும் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவை தொடர்பில் தேடிப்பார்த்து உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளோம். ஜனாதிபதி மற்றும் பிரதமரின் ஆலோசனையின் பேரில் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன என்றார்.
-Vidivelli

3 கருத்துரைகள்:

Better Translate this and Share it to Arab medias. They want to see how this racist barking. You need money from arabs petrol from arabs dates from arabs support from arabs but don't want arabic. If they start to send your all beggars from their country then you will understand.

YES MR VAJIRA.
YOUR1000%TRUE
SHARIA ONLY FOR MUSLIMS
NOT FOR SRILANKA OR ANY OTHER COUNTRY.NOT EVEN FOR ANY OTHER RELIGION

..Then Return back old Arabic Aids your stupid you racist, Terror, Uneducated Shit Politician.

“..Demolish Katugastota Bridge(Kuwait). Demolish Kinniya Bridge(Saudi Bridge)
Demolish All the Hospitals, buildings ect built by Saudi Arabia, Kuwait, Oman Aid.”

SriLanka's Ancient language is Tamil then later Sinhala.. Arabic... Portugal...Dutch... Later only came English and Malay (Languages).
You Stupid Politician.. Arabic was Srilanka's 3rd (Third) Language. Arabs had a very good relationship with our countries Great Kings. Go and Study History you stupid.

Very Soon all SriLanka will start begging. Will change into another Somalia.

Post a comment