Header Ads



தற்கொலை குண்டுத்தாக்குதல் முன்கூட்டியே, அரசாங்கத்திற்கு தெரிந்திருந்தமை உறுதியாகி உள்ளது

இலங்கையின் பல்வேறு பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட தற்கொலை குண்டுத்தாக்குதல் முன்கூட்டியே அரசாங்கத்திற்கு தெரிந்திருந்தமை உறுதியாகி உள்ளது.

தேசிய புலனாய்வுத்துறையின் தலைவர் சிசிர மெண்டிஸ், பொலிஸ் மா அதிபர் பூஜித்த ஜெயசுந்தரவுக்கு அறிவித்திருந்த கடிதம் இன்று -30- வெளியாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 21ம் திகதி தேசிய தவ்ஹீத் ஜமாத்தின் தலைவர் சஹ்ரான் உள்ளிட்ட குழுவினர் பயங்கரவாத தாக்குதல் நடத்தவுள்ளதாக முன்னரே அரசாங்கத்திற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பான கடிதம் கடந்த ஏப்ரல் மாதம் 9ம் திகதி தேசிய புலனாய்வுத்துறையினால் அறிவிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற தெரிவுக் குழு முன்னிலையில் நேற்று ஆஜரான தேசிய புலனாய்வுத்துறையின் தலைவர் சாட்சியம் அளித்திருந்தார்.

இதன்போது பயங்கரவாத தாக்குதல் அச்சுறுத்தல் குறித்து முன்னதாக எழுத்துமூலம் பொலிஸ் மா அதிபருக்கு தெரியப்படுத்தியிருந்ததாக குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில் தாக்குதலுக்கு முன்னரே அரசாங்கத்திற்கு எச்சரிக்கை விடுத்த கடிதம் வெளியாகி ஒட்டுமொத்த மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இதேவேளை தாக்குதல் குறித்து எந்த முன்னெச்சரிக்கையும் தனக்கு கிடைக்கவில்லையென மீண்டும் இன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

கடந்த 21ம் திகதி நடத்தப்பட்ட தொடர் தற்கொலை குண்டுத்தாக்குதல் காரணமாக 225 பேர் கொல்லப்பட்டும், 400 இற்கும் அதிகமானோர் காயமடைந்திருந்தனர்.

அந்த கடிதத்தில்,

இலங்கையில், உள்ளூர் அமைப்பான தேசிய தவ்ஹித் ஜமாத் அமைப்பின் தலைவர் சஹ்ரான் உட்பட குழுவினரால் தற்கொலை குண்டுத் தாக்குதல் நடத்தப்படவுள்ளதாக தேசிய புலனாய்வு பிரிவிற்கு தகவல் கிடைத்துள்ளது.

இலங்கையின் சில முக்கிய தேவாலயங்கள் மீதே தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக புலனாய்வு பிரிவினர் குறிப்பிட்டுள்ளனர்.

வெளியாகிய தகவல்களுக்கமைய இலங்கையில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயமும் ஒன்றாகும்.

அதற்கமைய இந்த தாக்குதல்களில் தற்கொலை குண்டுத்தாக்குதல், ஆயுத தாக்குதல், வாள் தாக்குதல், வாகன தாக்குல்கள் போன்றவைகள் அடங்கும்.

பின்வரும் பெயருடையவர்களே தற்கொலை குண்டுத்தாக்குதல் நடத்தவுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

சஹ்ரான் ஹசீம்
ஜல் அலெ் குய்தால்
ரில்வான்
சஜிட் மௌவி
ஷஹிட்
மிலான மற்றும் சிலர்
இந்த முக்கிய எச்சரிக்கை தொடர்பில் சட்ட பிரிவுகள் அவதானம் செலுத்த வேண்டும்.



No comments

Powered by Blogger.