Header Ads



முஸ்லிம்களை எதிரிகளாக, பார்ப்பதை நிறுத்துங்கள் சபாநாயகர்

நாட்டின் சட்­டத்தை அனை­வரும் பின்­பற்றி செயற்­பட வேண்டும் என்றும் தற்­போது நாட்டில் இயங்கி வரு­கின்ற அடிப்­ப­டை­வாத கல்வி செயற்­பா­டுகள், சிறுவர் உரி­மை­களை மீறு­வ­தான இள­வ­யது திரு­ம­ண­முறை போன்ற விட­யங்கள் குறித்து பாரா­ளு­மன்றம் விரைவில் நடவடிக்­கை­களை மேற்­கொள்ளும் என  சபா­நாயகர் கரு ஜய­சூ­ரிய தெரி­வித்­துள்ளார்.

திறைசே­ரியின் கேட்போர்கூடத்தில் இடம்­பெற்ற டீ.பீ. ஜய­தி­லக நினைவு தின நிகழ்வில் சிறப்பு விருந்­தி­ன­ராக கலந்துகொண்டு உரை­யாற்றும்போதே அவர் இவ்­வாறு குறிப்­பிட்டார்.  அவர் மேலும் கூறி­ய­தா­வது, 

அடிப்­ப­டை­வாதப் போக்கைக்கொண்ட முஸ்­லிம்கள் சிலரால் மேற்­கொள்­ளப்­பட்ட தாக்­கு­தல்கள் தொடர்பில், அனைத்து முஸ்லிம் மக்­க­ளையும் எதி­ரி­க­ளாக பார்ப்­பதை நிறுத்திக்கொள்ள வேண்டும். இந்த அடிப்படைவாதத்­திற்கு எதி­ராக எம்­முடன் இணைந்து செயற்­பட ஏனைய அனைத்து முஸ்­லிம்­களும் தயா­ரா­கவே உள்­ளனர். 

அதே­வேளை இலங்­கைக்கு பொருத்­த­மற்ற புர்கா ஆடையைத் தடை செய்­வது குறித்தும் முஸ்­லிம்­களும் தொடர்ந்தும் வலியுறுத்தித்தான் வரு­கின்­றனர்.

நாட்டின் சுதந்­திர போராட்­டங்­களின்போது டீ. பீ.ஜய­தி­லக, டீ.எஸ். சேனா­நா­யக்க ஆகி­யோர்­க­ளுடன் இணைந்து நாட்­டுக்­காக முஸ்லிம் தலை­வர்­களும்  செயற்­பட்­டனர் என்­பதை நினைவில் கொள்ள வேண்டும். தற்­போதும் பயங்­க­ர­வா­தி­களை ஒழிப்­ப­தற்­காக அடிப்படைவாதிகள் சிலரை தவிர ஏனைய அனைத்து முஸ்லிம் மக்­களும் முன்­வந்­துள்­ளனர்.

நாட்டின் சுமு­க­மான நிலை­மைக்கு பங்கம் விளை­விக்கும் வகையில் நாட்­டுக்குள் குழப்­பத்தை ஏற்­ப­டுத்­தி­ய­வர்­க­ளி­னாலே இன்று நாடு பின்­ன­டைவைக் கண்­டுள்­ளது.  பௌத்த சமயம் ஒருபோதும் இன மற்றும் மத பேதங்­களை போதிக்கவில்லை.  

சில அடிப்ப­டை­வாத முஸ்­லிம்களால்  மேற்­கொள்­ள­ப்படும் செயற்­பா­டு­க­ளினால் பாதிக்­கப்­ப­டு­வது முஸ்லிம் மக்­களே.மற்றும் அடிப்­ப­டை­வாத கல்வி முறை, முஸ்லிம் விவாக, விவாகரத்து சட்டம் குறித்தும் பாராளுமன்றில் விரைவில் தீர்மானம் எடுக்கப்படும். நாட்டின் சட்டமானது அனைத்து மக்களுக்கும் சமமானது என்றும் குறிப்பிட்டார்.

1 comment:

  1. இந்த நாட்டின் சட்டம் எல்லோருக்கும் சமமானது என்று தொண்டைத்தண்ணி வற்றுமளவுக்கு பேசுகிரீர்கள், ஆனால் எல்லோரும் சேர்ந்து அதிகாரத்தை பயன்படுத்தி முஸ்லீம்களுக்கு எதிராகவே அனைத்துச் சட்டத்தையும் பிரயோகிக்கிரீர்கள் இதைத்தான் நீங்கல் இந்த நாட்டின் சமமான சட்டம் என்று சொல்கிரீர்கள்.

    ReplyDelete

Powered by Blogger.