May 30, 2019

முஸ்லிம் வியாபாரிகளே,, சிங்களவர்களிடம் பெருநாளைக்கு உடுப்பு வாங்காது வருபவர்களை ஏமாற்றாதீர்கள்

- Ainifa Begum -

நோன்பு பெருநாளைக்கு புதிய உடை வாங்க இடமில்லாமல் திண்டாடும் கம்பஹா மாவ ட்டத்தின் முஸ்லீம் மக்கள்... 

சிங்கள கடைகளில் எங்கள் முஸ்லீம் மக்கள் உடை வாங்க போக கூடாதெனவும், அதையும்மீறி பெண்கள் போவதை கண்டால், ஊரில் செயல்படும் முஸ்லீம் இளைஞர்களின் குழு, அவர்களை புகைப்படமெடுத்து சமுக வலைத்தளங்களில், போட்டு சீரழிப்பதாக சபதமிட்டு செய்தும் வருவதை அறிந்து, அதற்க்கு பயந்தும்.., அதை நியாயமான காரணமாக ஏற்று பலரின் வேண்டுகோளுக்கிணங்க அதையே ஒரு ஒற்றுமை நோக்கத்துடன் முஸ்லீம் வியாபார ஸ்தலங்களை நோக்கி மக்கள் அலை மோத தொடங்கினர்... 

இந்த சந்தர்ப்பத்தை பயன் படுத்திக்கொண்டு சில நம் முஸ்லீம் வியாபாரிகள் ஏற்கெனவே நொந்து போன அப்பாவி சமுகத்திற்கு வயிற்றில் அடிப்பது போல் விலைகளில் பாரிய மாற்றத்தை செய்து பணத்தை தட்டிப்பறிப்பதை நேற்று பார்க்க கூடியதாக இருந்தது. சிலர் ஆவேசமாக கடையை விட்டு வெளியேறுவதை அவதனித்தேன். சிங்கள கடைகளில் நிறைய தேர்வு இருக்கிறது விலை மிக மலிவாகவும் நியாயமாகவும், தரமானதாகவும் இருக்கும் என்பதே உண்மை. 

முஸ்லீம் வியாபாரிகளிடம் அன்பான வேண்டுகோள் தயவு செய்து அப்படி செய்யாதீர்கள், நியாயமாக நடந்து கொள்ளவும்,ஒரு சிறு குழந்தையின் பாடசாலை உள் ஆடையின் விலையை பாருங்கள். 

உண்மையான விலை தெரிந்தும் நாங்கள் விலை கொடுத்து வாங்கி விட்டு மனம் நொந்தே வெளியேறினோம்...காரணம் நஷ்ட்டத்தை சகிக்கும் எங்களுக்கு, நம் மதம் சார்ந்த மக்கள் இழிவாக்கப்பட்டு, பொருளாதாரத்தால் வீழ்த்த விட கூடாது,..அவர்கள் முஸ்லீம் வியாபாரிகளிடம் போகக்கூடாது என தடுத்தாலும் நாம்மவரிடமே நாம் முன்னேற்றலாம் என்ற தியாகமே,.

ஆனால் நீங்கள் இப்படி. செய்வது எந்த விதத்தில் நியாயம்...?

Sale என்ற பெயரில் தரம் குறைந்த உடைகளை அதே விலைக்கு போட்டிருப்பதை அவதானிக்க முடிந்தது... இப்படி அநியாயம் செய்து வியாபாரம் முன்னேறலாம், ஆனால் ஒரு நோயை உங்களுக்கு கொடுத்து அத்தனையையும் ஒரு வேறு வழியில் இறைவன் அழிப்பான் என்பதை மறவாதீர்கள்..நியாயமான வியாபாரம் செய்யுங்கள் நிரந்தரமாக இறைவன் அருளை வழங்குவான்.


7 கருத்துரைகள்:

நியாயமாகவும்,மனசாட்சியுடனும் வியாபாரம் செயுங்கல்,இல்லா விட்டால் அன்னியரை கொண்டு உங்கள் பொருளாதாரம் அழிக்கப்படும் அல்லாஹ்வினால்

How you treat this subject as Sapatham...???
So, should not go anyone to Singhala shops?
Then how u will expect the Singhalese people to come to your shops (so called Muslims shops)...!!!
This is totally INAVAATHAM...STOP RACISM!!!

Let them go to any shops...they have their own choice...
Those youngsters dont try to split the racism all over the places..try to control by your good habit... this is the teaching of islam

ஐயையோ.....இப்படி ஒரு தற்கொலைப்போட்டி ஆரம்பித்திர்க்குதா? ஒருபோதும் இலங்கை வர்த்தக பெரும் காட்டில் நுனி மரத்தில் இருந்து அடி மரத்தை வெட்டு என்கிற ஆலோசனைகளை ஊக்கப்படுத்தாதீர்கள்.

Yes... treat them properly...don't... please stop increasing your prices...as they are already in pain....it is happening

சிங்கள மக்கள் எல்லோரும் இனவாதிகளா?
இப்படி வெட்டுக்கு வெட்டு குத்துக்குக் குத்து என்ற ரேஞ்சில் நாம் போனால் அவர்களுக்கு மத்தியிலுள்ள 'அபூதாலிபுகளையும் 'முத்இம்'களையும் நாம் இழக்க நேரலாம்.

jaffnamuslim.com is fast becoming a racist website. In the name of doing good things to the society you are supposed to be representing, you are just doing the opposite. Now, you seem to be encouraging extremist/ suicidal way of thinking. I wonder whether you are doing it knowingly or unknowingly.

Post a comment