Header Ads



ஜனாதிபதியின் நியமனங்களினால், முழு சட்டத்துறையும் விரக்தியடைந்துள்ளது

ஜனாதிபதி சட்டத்தரணிகள் தொடர்ச்சியாக நியமிக்கப்படுவதற்கு, ஐக்கிய தேசியக் கட்சியின் சட்டத்தரணிகள் கடும் அதிருப்தியை வெளியிட்டுள்ளனர்.

ஜனாதிபதி சட்டத்தரணிகளை நியமித்தல், சம்பிரதாயமாக வருடத்துக்கு ஒரு தடவை மட்டுமே இடம்பெறும். எனினும், இந்த வருடத்தில் மட்டும் இது இரண்டு தடவைகள் இடம்பெற்றுள்ளதாக, ஐக்கிய தேசியக் கட்சியின் சட்டத்தரணிகள், தேசிய சட்டத்தரணிகள் சங்கத்தின் கவனத்துக்கு கொண்டுவந்துள்ளனர்.

இவ்வருட ஆரம்பித்தில் ஜனாதிபதி சட்டத்தரணிகள் 25 பேர் நியமிக்கப்பட்டனர். எனினும், இவ்வாரத்தில் மேலும் 21 பேர், ஜனாதிபதி சட்டத்தரணிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர் என்றும் சட்டத்தரணிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இவ்வாறு, ஜனாதிபதி சட்டத்தரணிகள் நியமிக்கப்படுவதன் காரணமாக, முழு சட்டத்துறையும் விரக்தியடைந்துள்ளதென்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர் என்றும் அறியமுடிகின்றது.

No comments

Powered by Blogger.