Header Ads



ரணிலை நீக்கி, சஜித்தை பிரதமராக்க சதி..? மைத்திரியின் இந்திய பயணம் ரத்து, பரபரப்பாகும் கொழும்பு

ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன கொழும்பு அரசியலில் பரபரப்பான அறிவிப்பு ஒன்றை செய்வாரென பேசப்படுகிறது.

பெரும்பாலும் 15 ஆம் திகதி இந்த அறிவிப்பு செய்யப்படலாமென சொல்லப்பட்டாலும் யாரும் எதனையும் உறுதியாக சொல்வதாக இல்லை.

ஆனாலும் பலரிடம் பேசியபோது கிடைக்கப்பெற்ற  தகவல்கள் இவை…

1. மத்திய வங்கி பிணைமுறி மோசடி விவகாரம் மற்றும் மாக்கந்துர மதுஷ் கொலைச்சதி விவகாரத்தில் பிரதமருக்கு தொடர்புகள் இருக்கலாமென கூறி அவரை பதவி நீக்கி சஜித் பிரேமதாஸவை புதிய பிரதமராக நியமிக்கக் கூடும் – என்று ஒருதரப்பு சொல்கிறது.

2. அல்லது – தூக்குத்தண்டனை பெறவுள்ளோரின் பெயர்கள் மற்றும் தண்டனை வழங்கப்படும் திகதி அறிவிக்கப்படலாம் – என்று இன்னொரு தரப்பு சொல்கிறது

3. அல்லது – ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்படலாம் என்று மற்றோரு தரப்பு சொல்கிறது.

இப்போதே உடனடி ஜனாதிபதித் தேர்தலுக்கு சென்றால் மஹிந்தவின் ஆதரவை பெறலாமென மைத்ரி கருதலாம். கூட்டு எதிர்க்கட்சியின் சார்பில் போட்டியிடவுள்ளவராக கருதப்படும் கோட்டபாயவின் அமெரிக்க குடியுரிமை இன்னும் ரத்துச் செய்யப்படாத காரணத்தினால் இப்போது களமிறங்க ஜனாதிபதி மைத்ரி முயலக் கூடுமென அந்த தரப்பு விபரிக்கின்றது.

4. அல்லது மாக்கந்துர மதுஷுடன் தொடர்புகளை வைத்திருந்த அரசியல்வாதிகளின் பெயர் விபரங்களை ஜனாதிபதி வெளியிடக் கூடும் என்று பிறிதொரு தரப்பு சொல்கிறது.

இவற்றில் எது நடக்கும் என்பது தெரியவில்லை.அதேசமயம் இவை எவையும் நடக்காமல் போகவும் கூடும்.

ஆனால் கொழும்பில் நேற்றுமுதல் ஒரு அரசியல் பரபரப்பு நிலவுகிறது. இவை தவிர வேறு எதுவும் கூட நடக்கலாம். (thamilan)

2

மைத்திரிபால சிறிசேன இந்தியாவின் ஆந்திர மாநிலத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் ஆலயத்துக்கு மேற்கொள்ளவிருந்த பயணத்தை திடீரென ரத்துச் செய்துள்ளார்.
சித்திரைப் புத்தாண்டுக்குப் பின்னர், திருப்பதிக்குப் பயணம் மேற்கொள்வதற்கு மைத்திரிபால சிறிசேன திட்டமிட்டிருந்தார்.
எனினும், அந்தப் பயணத்தை அவர் திடீரென நிறுத்தியிருப்பதாகவும், அவர் சிறிலங்காவிலேயே தங்கியிருப்பார் என்றும் சிறிலங்கா அதிபருக்கு  நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்தன

No comments

Powered by Blogger.