Header Ads



வரலாற்றில் மிகவும், கெடுதியான புத்தாண்டு இதுதான் - பிரசன்ன ரணதுங்க

வருட இறுதியில் நடக்கும் ஜனாதிபதி தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மேடையிலேயே வெற்றியாளர் உருவாகுவார் என அந்த கட்சியின் கம்பஹா மாவட்ட தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

மினுவங்கொடை தொகுதியின் வர்த்தகர்களை உடுகம்பளையில் உள்ள தனது வீட்டில் சந்தித்த போதே அவர் இதனை கூறியுள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன என்பது நாட்டை முன்னேற்றும் மற்றும் நாட்டை வெற்றி பெற செய்யும் மேடை.

பொதுஜன பெரமுனவின் கொள்கையை மதிக்கும் எவரும் எங்களது மேடையில் ஏற முடியும். தேசத்துரோக நல்லாட்சி அரசாங்கத்திற்கு எதிரான பிரபலமான கூட்டணி எங்களது மேடையிலேயே உருவாகும்.

அண்மையகால வரலாற்றில் மிகவும் கெடுதியான புத்தாண்டையே 2019 ஆம் நாங்கள் கொண்டாடுகிறோம். சுபநேரத்தின் தவறோ மக்களின் தவறோ இதற்கு காரணமல்ல.

அரசாங்கத்தின் தவறே இதற்கு காரணம். அரசாங்கத்தின் தூரநோக்கற்ற வேலைத்திட்டங்கள் காரணமாக வயிறு நிறைய சாப்பிட்டு, உடுத்தி இருக்க முடியாத புத்தாண்டு பிறந்துள்ளது.

புத்தாண்டு போன்ற நாட்களிலேயே கிராமத்தில் இருக்கும் எமது வறிய மக்கள் கோழி கறியை சமைத்து ஒருவேளை சாப்பிட்டு மகிழ்ந்திருப்பர்.

ஆனால், தற்போது ஒரு கிலோ கோழி இறைச்சியின் விலை 750 ரூபாய். ஒரு கிலோ கிழங்கு 150 ரூபாய். துணி மணிகளும் அப்படித்தான். மக்களுக்கு சாப்பிட முடியாத புத்தாண்டே பிறந்துள்ளது எனவும பிரசன்ன ரணதுங்க குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.